ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணம்...................................?

வடமராட்சியில் அது ஒரு பண்பாட்டு விழா. அதுவும் நடந்து முடிந்த தைப் பொங்கலை ஒட்டிய விழா. மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாட்டாளர்கள் யாவரும் பண்பாட்டு விழாவுக்கு ஏற்ற வகையில் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தனர். எமது பண்பாட்டு விழுமியங்கள் எம்மைவிட்டு மெல்லமெல்ல நழுவிப்போகின்ற போது இவ்வாறான விழாக்களை கலாசார நலன் விரும்பிகள் ஆங்காங்கே நடத்துவது, 'எல்லாமே அருகிப்போகின்றதே' என்று ஆதங்கப்படும் - குமுறிக்கொள்ளும் - மனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தெம்பினை ஊட்டுகின்றது. விழா அரங்கிலே மங்களச் சுடர் ஒளி விட்டுப் பிரகாசிக்க அந்தணச் சிவாச்சாரியர்கள் ஆசியுரையினை அமுதவாக்காகச் சொல்லி முடிக்க நிகழ்வின் பிரதம விருந்தினர் தனது உரையினையும் சுருக்கமாகக் கூறி அமர்ந்தார். விழா அழைப்பிதழில் குறிக்கப்பட்ட நேரத்தில் ஆரம்ப சம்பிரதாய நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. 'அன்பார்ந்த பார்வையாளர்களே! எமது பண்பாட்டு விழாவின் ஆரம்ப சம்பிரதாய நிகழ்வுகள் இத்துடன் நிறைவு பெற்றுள்ளன. இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன' என்று அறிவிப்பாளரின் குரல் கணீரென்ற தொனியில் அந்த மண்டபம் அதிரும்படியாக ஒலித்தது. 'முதல் நிகழ்வாக நடனம்' என்று நிகழ்ச்சி நிரலினை அறிவித்தார் அறிவிப்பாளர். பண்பாட்டடு விழா ஆதலால் முதலில் 'வரவேற்பு நடனம்' தான் என்ற எமக்குள்ளெ தீர்மானித்து விழிகளை அரங்கின் நேரே வைத்திருந்தோம். அரங்கில் திரை விலகியது; அப்போது - முன்னர் எமக்குள் நாம் தீர்மானித்த கற்பனையும் விலகியது. நாம் எதிர்பார்த்திருந்தது வரவேற்பு நடனத்தை; ஆனால், 12 வயதுச் சிறுமி ஒருத்தி 'ஜீன்சும், ரீசேர்ட்டும்' அணிந்தபடி அரங்கினில் காட்சியளித்தாள். 'மன்மதராசா... மன்மதராசா... கன்னி மனசை கி்ள்ளாதே...' என்ற பாடல் வானலையில் அதிர - அந்தச் சிறுமி ஆடத் தொடங்கினாள், தமிழர் பண்பாட்டு விழாவின் வரவேற்பு நடனம்.

அமெரிக்காவின் அதிருப்தி

சிறீலங்காவின் அண்மைய நடவடிக்கைகள் அமெரிக்காவை கடும் சீற்றமடைய வைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகாவை கைது செய்தது மற்றும் அமெரிக்கா மீது கோத்தபாயா மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடும் சீற்றமடைந்த அமெரிக்கா, அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதுவர் ஜாலியா விக்கிரமசூரியாவை அழைத்து தனது எதிர்ப்பை நேரிடையாக தெரிவித்துள்ளது. விக்கிரமசூரியாவை வெளிவிவகார திணைக்களத்திற்கு அழைத்த அமெரிக்கா தனது எதிர்ப்பை அவரிடம் நேரிடையாக கையழித்துள்ளது. சிறீலங்காவின் அண்மைய நடவடிக்கைகள் தமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மற்றும் மத்திய ஆசியாக்கான அமெரிக்க துணை வெளிவிவகார செயலாளர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்துடன் தொடர்கொண்ட போது சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் தான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஜெஃப் அன்டர்சன் தெரிவித்துள்ளார். ஆனால் விக்கிரமசூரியாவை அமெரிக்கா வெளிவிவகார திணைக்களம் அழைத்து பேசியதை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது

அச்சம் காரணமாகவே அரசாங்கம் பொன்சேகாவை கைது செய்துள்ளது

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன் அதற்கு காரணமானவர்களை இனம் காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரின் போது பெருமளவான மக்கள் பாது காப்பு வலயத்திற்குள் சிக்கியிருந் தது தொடர்பில் ஐ.நா. தனது அக் கறைகளை தெரிவித்து வந்திருந் தது. இந்த மோதல்களில் 8 ஆயி ரம் தொடக்கம் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ள தாகவும் பெரு மளவானோர் காயமடைந்ததாக வும் ஐ.நா. தெரிவித்திருந்தது. ஆனால் வன்னியில் கொல்லப் பட்ட மக்களின் எண்ணிக்கைகள் மிக அதிகம் எனவும், பாதுகாப்பு வல யத்திற்குள் பெருமளவான பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலு வலகத்தின் பேச்சாளரான அவர் கடந்த வருட இறுதிவரை இங்கு பணியாற்றியிருந்தார். அரசின் பொய்ப் பிரசாரம் வன்னியில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் 10 ஆயிரம் தொடக் கம் 40 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டதாக எனக்கு அங்கிருந்து வந்த நம்பகமான தகவல்கள் தெரிவித்தன. இலங்கை அரசு உலகத்தை திசை திருப்புவதற்காக பல பொய்களை மீண்டும் மீண்டும் கூறியிருந்தது. போரை நிறைவு செய்வதற்கு ஏதுவாக அங்கு சிக்கியிருந்த மக்களின் தொகைகள் குறைத்து கூறப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்ததாக அவுஸ்திரேலியா வின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இதனை கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அரசு மறுத்துள்ளது. வைஸ் தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என அரச தலைவரின் பேச்சாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரி வித்துள்ளார்.வன்னியில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் சரியான எண்ணிக்கைகள் யாருக்கும் சரியாகத் தெரியாது. மோதல்களுக்குள் பொதுமக்கள் சிக்கியதாக ஐ.நா வும் ஏனைய அமைப்புகளும் தெரி வித் திருந்தன. விடுதலைப் புலிகள் மக்களை கேடயங்களாக பயன் படுத் தியதாகவும் தெரிவிக்கப்பட் டது.நாம் வைஸுடன் தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்டிருந்தோம் ஆனால் முடியவில்லை. இலங்கையி லுள்ள ஐ.நா. அலுவலகமும் இது தொடர் பில் கருத்துக்களைக் கூற மறுத்து விட்டது. போர்க்குற்ற விசாரணை இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைஸ் தெரிவித் துள்ளார். இலங்கையில் மேற்கொள் ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல மட்டங்களில் இருந் தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அதனை வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை அதனை மறுத்து வருகின்றது. நாம் எந்தவிசாரணைக் கும் அனுமதிக்கமாட்டோம். நாட்டில் எதுவும் தவறாக நடைபெறவில்லை. ஐ.நாவையோ அல்லது வேறு எந்த அமைப்புகளையோ விசாரணை களுக்கு நாம் அனுமதிக்கப் போவ தில்லை என இலங்கையின் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஜனா திபதியின் சகோதரர். பொன்சேகா மீதான அச்சமே கைதுக்குக் காரணம் அங்கு இடம் பெற்ற போர்க்குற் றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன் அதற்குக் காரண மானவர்களை இனம் காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜென ரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ள தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.அவரை இராணுவ நீதிமன்றம் மூலம் சிறையில் அடைக்க அரசு முயன்று வருகின்றது. கடந்தமாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்ட பொன்சேகா தோல்வி கண்டிருந்தார். இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போர் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொன் சேகா தெரிவித்திருந்தார். ஆனால் பொன்சேகா அதனை செய்ய முடி யாது, அவர் பொய் கூறுகிறார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.கடந்த 11 ஆம் திகதி வியாழக் கிழமை நூற்றுக்கணக்கான சட்ட வாளர்கள் பொன்சேகாவின் விடுத லையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரின் மனைவி மேற்கொண்டுள்ள முறைப் பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத் திற்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட் டத்தை மேற்கொண்டிருந்தனர். பொன் சேகா வின் கைது தொடர்பில் நான்கு வாரங் களுக்குள் அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக்காலக்கெடுவானது நாடாளு மன்றத் தேர்தல் நடை பெறும் காலத் தில் இருந்து ஒரு மாதத்திலும் குறை வான நாட்களை கொண்டது. பொதுத் தேர்தலில் பொன்சேகா போட்டி யிட திட்டமிட்டிருந்தார். பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசு இதுவரை முன்வைக்கவில்லை. ஆனால் அவர் இராணுவ புரட்சியை மேற்கொள்ள முனைந்ததாக அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. பொன்சேகா அதனை மறுத்து வருகின்றார். இதனிடையே ஜனாதிபதித் தேர் தலில் அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பொன்சேகாவை ஆதரித்ததாக அரசு மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் நிராகரித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக்கிழக்கு பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை

அண்மையில் டில்லியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத்காரிய வசம், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். இக் கருத்துத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன், பிரசாத் காரியவசம் அவர்களின் இந்த கருத்து கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ள அவர், பல நெடுங்காலமாக சிங்கள தலைமைகள் மத்தியில், தமிழ் மக்களுக்கு பொலிஸ், காணிஅதிகாரங்கள் மாத்திரமின்றி எந்த அதிகாரத்தையும் வழங்கக் கூடாது என்ற கொடுங்கோல் எண்ணம் இருந்து வந்தது. கடந்த 62 வருடங்களாக இந்த நிலைமையே தொடர்கிறது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மத்தி யில் இன்னமும் தமக்கு அதிகார பகிர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையும், அபிலாசையும் காணப்படுகின்றது.இந்தியாவின் ஆதரவுடன் நடை முறைக்கு வந்த 13ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்டத்தின் கீழ் உள் வாங்கப்பட்ட வடக்குக் கிழக்கு இணைப்பு துண்டாடப்பட்டு எந்த அதிகாரமும் வழங்கப்படாத வகையில் தமிழ் மக்கள் அதிகாரம் இன்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எத்தனை காலத் திற்கு தமது மக்கள் அதிகாரம் வழங்கு வார்கள் என்ற நம்பிக்கையில் இலவு காத்த கிளியாக வாழ முடியும் எனவும் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடற்படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்ளே காணாமல் போயுள்ளனர்..

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் காணாடல் போனவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது வவுனியா மனித உரிமைகள் ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின் போது தெரிவித்தனர். கடந்த 2வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடதக்கது.

யானை சின்னத்தில் ஐ.தே.க. போட்டி. கூட்டமைப்பிற்கு வருத்தம் ஏன்?

வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜன நாயக மக்கள் முன்னணியான மனோ கணேசனின் கட்சியும் போட்டியிட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியும், மனோகணேசனும் நிராகரித்துள்ளனர். இது தொடர்பாக தமது கட்சி எடுக்கும் தீர்மானத்தின் படியே முடிவு எடுக்க முடியும் எனவும் கட்சியின் முடிவு கூட்டமைப்பின் ஆலோசனைக்கு மாறாகவே இருக்கும் எனவும் நழுவல் வழுவலாக கூறியுள்ளனர் ரணில் விக்கிரமசிங்காவும் மனோ கணேசனும். இதனால் கூட்டமைப்பு மனம் சோர்ந்து போயுள்ளனராம். ஜனாதிபதி தேர்தலில் நாம் உதவியதற்கு இதுதானா பிரதியுபகாரம் என மனசுக்குள் புளுங்கியதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டமைப்பு கவலையடைந்துள்ளதாம். அவசரப்பட்டு ரணில் முடிவு எடுத்து விட்டாராம். சிறு பான்மை கட்சியினை நம்பி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க ரணில் இனியும் தயாராக இல்லை என்பதே இதன் அர்த்தம். ஆனால் இதனை புரிந்தும் புரியாதது போல மீண்டும் மீண்டும் ரணில் இடம் ஓடும் படலம் இன்னும் ஏன்? ஒருபக்கம் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை செய்ய தயாராக இருப்பதாகவும் இன்னொரு பக்கம் ரணில் உடன் கூட்டு சேரலாம் எனவும்கதைத்துக்கொண்டிருப்பது கூட்டமைப்பிற்கு இராஜ தந்திரமாக இருக்கலாம். ஆனால் சிங்கள தலைவர்களுக்கு இது புளித்துபோனதொன்று. தெட்ட தெளிவாக வடக்கு கிழக்கில் தனித்து நின்று யாரையும் நம்பாது யாருடனும் கூட்டு சேராது போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிக்கு வருபவர்களுடன் கால அட்டவணை அடிப்படையில் பேரம் பேசி தமிழர்களுக்கு முடிந்தால் எதையாவது பெற்றுக்கொடுப்பதே நல்லது.

பொன்சேகாவை அடைத்து வைத்திருக்கும் இடமும் தடுப்பு முகாமாக அரசு பிரகடனம்

சரத்பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் கடற்படை முகாமை இலங்கை அரசாங்கம் ஓர் தடுப்பு முகாமாக வர்த்தமானியூடாக பிரகடனம் செய்துள்ளது.அரசாங்கம் போருக்கு பின்னர் பல தடுப்பு முகாம்களை நிறுவியது ஆனால் அவற்றினை வர்த்தமானியில் பிரகடனம் செய்யவில்லை. தற்போது பல தடுப்பு முகாம்களை உத்தியோக பூர்வமாக வர்த்தமானியில் தடுப்பு முகாம்களாக பிரகடனம் செய்துள்ளது. சட்ட ரீதியாக தப்புவதற்கே இந்த ஏற்பாடு என விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம் பொன்சேகாவினை கைது செய்து தடுத்து வைத்திருப்பதே. இதன்படி பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் இடமான வெலிசற கடற்படையினரின் முகாம், திருகோணமலை டொக்கியாட் கடற்படை முகாம், கெமுனுவோற்ச் முகாம், வவுனியா நெலுக்குளம் பொலிஸ் நிலையம், தொழில் நுட்ப கல்லூரி ஆகியனவே தற்போது தடுப்பு முகாம்களாக வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை விட எட்டு தடுப்பு முகாம்களில் 12,000 பேரை அரசாங்கம் உத்தியோக பூர்வமற்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

வீடுகள் சிங்கள ஒப்பந்தகாரர்களால் உடைப்பு

கிளி நொச்சி மாவட்டம், ஸ்கந்தபுரம், அக்கராயன் பகுதிகளில் பொது மக்களின் வீடுகளை உடைத்து அந்த ஓடுகள், கற்கள், மரங்களையே புதிய ஒப்பந்த கட்டிடங்களுக்கு பாவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள ஒப்பந்த வேலைகளை சிங்களவர்கள், சிங்கள ப்படைகளின் உறவினர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக பொருட்களை கொண்டுவராது அங்கு இருக்கின்ற பொது மக்களின் வீடுகளை உடைத்தே கட்டட வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஸ்கந்த புரம் பகுதியில் கிராம சேவகர் மகேந்திரனின் வீடு, மருத்துவர் கோபால பிள்ளையின் வீடு ஆகியனவும் உடைக்கப்பட்ட வீடுகளில் அடங்கும். அரச அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் வீடுகளுக்கு என்ன நிலை?

அதே அதிகாரத்தின் மூலம் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும்

அரந்தலாவயில் பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்கியது போல தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர். அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராமாஞ்ய ஆகிய பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கதேரர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக் கையை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத் திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள். பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரை களை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்ப தற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட வர்களை அரசாங்கத்துடன் இணைத்து கொண்டு, பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேகா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் சிங்களவர்கள் ஆர்பாட்டம்

ராணுவப் போலீசால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்துவரும் நிலையில் கனடா ஒட்டாவாவிலும் ஆர்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரினது கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில், சரத் பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.