ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

பொன்சேகாவை அடைத்து வைத்திருக்கும் இடமும் தடுப்பு முகாமாக அரசு பிரகடனம்

சரத்பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் கடற்படை முகாமை இலங்கை அரசாங்கம் ஓர் தடுப்பு முகாமாக வர்த்தமானியூடாக பிரகடனம் செய்துள்ளது.அரசாங்கம் போருக்கு பின்னர் பல தடுப்பு முகாம்களை நிறுவியது ஆனால் அவற்றினை வர்த்தமானியில் பிரகடனம் செய்யவில்லை. தற்போது பல தடுப்பு முகாம்களை உத்தியோக பூர்வமாக வர்த்தமானியில் தடுப்பு முகாம்களாக பிரகடனம் செய்துள்ளது. சட்ட ரீதியாக தப்புவதற்கே இந்த ஏற்பாடு என விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம் பொன்சேகாவினை கைது செய்து தடுத்து வைத்திருப்பதே. இதன்படி பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் இடமான வெலிசற கடற்படையினரின் முகாம், திருகோணமலை டொக்கியாட் கடற்படை முகாம், கெமுனுவோற்ச் முகாம், வவுனியா நெலுக்குளம் பொலிஸ் நிலையம், தொழில் நுட்ப கல்லூரி ஆகியனவே தற்போது தடுப்பு முகாம்களாக வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை விட எட்டு தடுப்பு முகாம்களில் 12,000 பேரை அரசாங்கம் உத்தியோக பூர்வமற்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக