ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அச்சம் காரணமாகவே அரசாங்கம் பொன்சேகாவை கைது செய்துள்ளது

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன் அதற்கு காரணமானவர்களை இனம் காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரின் போது பெருமளவான மக்கள் பாது காப்பு வலயத்திற்குள் சிக்கியிருந் தது தொடர்பில் ஐ.நா. தனது அக் கறைகளை தெரிவித்து வந்திருந் தது. இந்த மோதல்களில் 8 ஆயி ரம் தொடக்கம் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ள தாகவும் பெரு மளவானோர் காயமடைந்ததாக வும் ஐ.நா. தெரிவித்திருந்தது. ஆனால் வன்னியில் கொல்லப் பட்ட மக்களின் எண்ணிக்கைகள் மிக அதிகம் எனவும், பாதுகாப்பு வல யத்திற்குள் பெருமளவான பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலு வலகத்தின் பேச்சாளரான அவர் கடந்த வருட இறுதிவரை இங்கு பணியாற்றியிருந்தார். அரசின் பொய்ப் பிரசாரம் வன்னியில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் 10 ஆயிரம் தொடக் கம் 40 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டதாக எனக்கு அங்கிருந்து வந்த நம்பகமான தகவல்கள் தெரிவித்தன. இலங்கை அரசு உலகத்தை திசை திருப்புவதற்காக பல பொய்களை மீண்டும் மீண்டும் கூறியிருந்தது. போரை நிறைவு செய்வதற்கு ஏதுவாக அங்கு சிக்கியிருந்த மக்களின் தொகைகள் குறைத்து கூறப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்ததாக அவுஸ்திரேலியா வின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இதனை கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அரசு மறுத்துள்ளது. வைஸ் தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என அரச தலைவரின் பேச்சாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரி வித்துள்ளார்.வன்னியில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் சரியான எண்ணிக்கைகள் யாருக்கும் சரியாகத் தெரியாது. மோதல்களுக்குள் பொதுமக்கள் சிக்கியதாக ஐ.நா வும் ஏனைய அமைப்புகளும் தெரி வித் திருந்தன. விடுதலைப் புலிகள் மக்களை கேடயங்களாக பயன் படுத் தியதாகவும் தெரிவிக்கப்பட் டது.நாம் வைஸுடன் தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்டிருந்தோம் ஆனால் முடியவில்லை. இலங்கையி லுள்ள ஐ.நா. அலுவலகமும் இது தொடர் பில் கருத்துக்களைக் கூற மறுத்து விட்டது. போர்க்குற்ற விசாரணை இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைஸ் தெரிவித் துள்ளார். இலங்கையில் மேற்கொள் ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல மட்டங்களில் இருந் தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அதனை வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை அதனை மறுத்து வருகின்றது. நாம் எந்தவிசாரணைக் கும் அனுமதிக்கமாட்டோம். நாட்டில் எதுவும் தவறாக நடைபெறவில்லை. ஐ.நாவையோ அல்லது வேறு எந்த அமைப்புகளையோ விசாரணை களுக்கு நாம் அனுமதிக்கப் போவ தில்லை என இலங்கையின் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஜனா திபதியின் சகோதரர். பொன்சேகா மீதான அச்சமே கைதுக்குக் காரணம் அங்கு இடம் பெற்ற போர்க்குற் றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன் அதற்குக் காரண மானவர்களை இனம் காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜென ரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ள தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.அவரை இராணுவ நீதிமன்றம் மூலம் சிறையில் அடைக்க அரசு முயன்று வருகின்றது. கடந்தமாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்ட பொன்சேகா தோல்வி கண்டிருந்தார். இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போர் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொன் சேகா தெரிவித்திருந்தார். ஆனால் பொன்சேகா அதனை செய்ய முடி யாது, அவர் பொய் கூறுகிறார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.கடந்த 11 ஆம் திகதி வியாழக் கிழமை நூற்றுக்கணக்கான சட்ட வாளர்கள் பொன்சேகாவின் விடுத லையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரின் மனைவி மேற்கொண்டுள்ள முறைப் பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத் திற்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட் டத்தை மேற்கொண்டிருந்தனர். பொன் சேகா வின் கைது தொடர்பில் நான்கு வாரங் களுக்குள் அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக்காலக்கெடுவானது நாடாளு மன்றத் தேர்தல் நடை பெறும் காலத் தில் இருந்து ஒரு மாதத்திலும் குறை வான நாட்களை கொண்டது. பொதுத் தேர்தலில் பொன்சேகா போட்டி யிட திட்டமிட்டிருந்தார். பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசு இதுவரை முன்வைக்கவில்லை. ஆனால் அவர் இராணுவ புரட்சியை மேற்கொள்ள முனைந்ததாக அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. பொன்சேகா அதனை மறுத்து வருகின்றார். இதனிடையே ஜனாதிபதித் தேர் தலில் அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பொன்சேகாவை ஆதரித்ததாக அரசு மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் நிராகரித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக