ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அமெரிக்காவின் அதிருப்தி

சிறீலங்காவின் அண்மைய நடவடிக்கைகள் அமெரிக்காவை கடும் சீற்றமடைய வைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகாவை கைது செய்தது மற்றும் அமெரிக்கா மீது கோத்தபாயா மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடும் சீற்றமடைந்த அமெரிக்கா, அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதுவர் ஜாலியா விக்கிரமசூரியாவை அழைத்து தனது எதிர்ப்பை நேரிடையாக தெரிவித்துள்ளது. விக்கிரமசூரியாவை வெளிவிவகார திணைக்களத்திற்கு அழைத்த அமெரிக்கா தனது எதிர்ப்பை அவரிடம் நேரிடையாக கையழித்துள்ளது. சிறீலங்காவின் அண்மைய நடவடிக்கைகள் தமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மற்றும் மத்திய ஆசியாக்கான அமெரிக்க துணை வெளிவிவகார செயலாளர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்துடன் தொடர்கொண்ட போது சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் தான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஜெஃப் அன்டர்சன் தெரிவித்துள்ளார். ஆனால் விக்கிரமசூரியாவை அமெரிக்கா வெளிவிவகார திணைக்களம் அழைத்து பேசியதை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக