திங்கள், 13 டிசம்பர், 2010

‎14-12-2010 தேசத்தின் குரல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவில் நாம்...

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்-

“கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்றதானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு அனைத்துலகம் வழங்கிய அங்கீகாராகும்“ -கோத்தாபய

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகளில் ரஸ்யாவும், சீனாவும் இரண்டு போர்க்கப்பல்களை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுக்காக அனுப்பி வைத்திருந்தன.

ஈரானின் சக்திமிக்க நாசகாரியும் விரைவு..??

ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர்.

மனித உரிமை மீறும் நாடான இந்தியா எங்களது நண்பன் ..

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார

தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா?- மனோ கணேசன்

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.