திங்கள், 13 டிசம்பர், 2010

“கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்றதானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு அனைத்துலகம் வழங்கிய அங்கீகாராகும்“ -கோத்தாபய

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகளில் ரஸ்யாவும், சீனாவும் இரண்டு போர்க்கப்பல்களை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுக்காக அனுப்பி வைத்திருந்தன.



அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட உயர்மட்ட கடற்படைப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.


போர் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தால் இந்த ஐம்பெரும் நாடுகளையும் இந்த நிகழ்வில் பங்கேற்க வைத்திருக்க முடியாது.


அதேவேளை பல நாடுகள் தமது போர்க்கப்பல்களை அனுப்ப விருப்பமின்றி இருந்திருக்கும்.


இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் மீது உண்மையற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட போதும் அனைத்துலக சமூகம் தாம் சிறிலங்காவுடன் இணைந்திருப்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.


அரசாங்கங்களின் உயர்மட்ட அனுமதியில்லாமல் அந்த நாடுகளின் கடற்படைப் பிரதிநிதிகள் சிறிலங்கா கடற்படையின் நிகழ்வுகளில் பற்கேற்றிருக்க முடியாது. இந்தியா தனது கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மாவை அனுப்பியிருந்தது.


இந்தியாவின் படைத்தளபதிகள் ஒரே நாட்டுக்கு ஒரே ஆண்டில் இரண்டு தடவைகள் பயணம் செய்வதில்லை. ஆனால் சிறிலங்காவுக்கு அவர் வந்துள்ளார்.


அதேவேளை பாகிஸ்தானிய கடற்படைத் தளபதி அட்மிரல் நோமன் பசீரும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மாவும் இந்த நிகழ்வில் சந்தித்துக் கொண்டனர்.


தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா பெற்ற வெற்றியை இந்த நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.


எவ்வாறாயினும் சிறிலங்கா படைகளின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்துலகம் தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் வெற்றியைப் புறக்கணிக்க முடியாது.


சிறிலங்கா கடற்படை 2006-07 காலப்பகுதியில் நான்கு வெவ்வேறு மோதல்களின் போது புலிகளின் எட்டு ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்தது.


இதில் நான்கு கப்பல்களை மூழ்கடிப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் உதவியாக அமைந்தன“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக