சனி, 22 மே, 2010

தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா?

 இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம், அந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி

ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

இலங்கை ஏற்கனவே 20 வருடங்களை விவாதங்களில் வீணாகக் கழித்து விட்டது என்பது தெளிவானது. மேலும் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தருணம் இதுவாகும். என ஓய்வு பெற்ற இந்திய புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஹரிஹரன் தெவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றில் “சில வெற்றித் தின சிந்தனைகள்' எனும் தலைப்பில் வெளியான ஆசிரிய தலையங்கம் குறித்து

காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!


புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன. இறுதி யுத்த காலத்திலும், விடுதலைப் போராளிகளும், பொது மக்களும் சிங்களப் படைகளிடம் வேறு வழியற்ற நிலையில் சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது. சிங்களர்களின் வரலாறுகளில், அவர்களது கொடூர குணங்கள் ஆங்காங்கே பதிவுகளாக உள்ள போதும், இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறே வெட்கித் தலை குனியும் அளவிற்கு தற்போதைய சிங்கள தேசத்தின் இன வன்முறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

தசை நார்கள்

 தசை நார்கள் கிழிந்தபோதும்... - பிரளய நெருப்பை அணைக்க நினைக்கும் மூடர்களின் மாதிரிக்கு ஒரு துளி. சதையின் ஊடே உளி பாய்ந்தாலும் உருகுலையாத கண்களின் ஒளி. சிதைக்கப்பட்ட விடுதலையின் ஒளிப்படமாய் - இங்கே ஒரு புலிப்படம். தசை நார்கள் கிழிந்தபோதும் விடுதலையின்... திசை நோக்கி விழித் திரும்பும். அசைக்க முடியா எஃகு மனம். அவன் விடுதலையின் வரைப்படம். சாவின் விளிம்பு வரையில் சண்டாளர் - தம்மை அறுத்தபோதும் தடம்மாறா பெரும் புலியாய் மனம் இடம் மாறா உருவம் கொண்டவன். மாய்த்தப் பின்னர் புலிக்கொடி - அவன் மாய்ந்தப் பின்னர் புலிக்கொடி. அவனுக்கு உயிர் கொடுக்கும் மீண்டுமாய். சிங்களனின் அக்கிரமத்திற்கு சாட்சியமாய் மாந்த மாண்புக்கு சவாலாய் - இங்கே ஒரு புலி சிதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து வேறோடி - விடுதலை பெரும் மரமாய் செழித்து நிற்கும். அது சிங்களனின் சங்கறுக்கும். தமிழ் மனதின் குருதியை உறையச் செய்த குரூரத்தை செய்தவனை வேரறுப்போம். பழி தீர்க்கும் நாளுக்காய் பொறுத்திருப்போம். தமிழீழம் வென்றெடுப்போம் என்பதிலே உறுதியாவோம்.

நக்கீரன் பத்திரிக்கை கேணல் ராமுடனான பேட்டியின் 2 ஆம் பாகம் ...

""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார்

தேசிய தலைவர் கற்றுத் தந்தது ..........

தேசிய தலைவர் கற்றுத் தந்தது நாமும் கதை சொல்லி வெகு நாட்களாகி விட்டது. என்னவோ தெரியவில்லை நமது கிராமங்களில் கதை சொல்லி நமக்கு சில செய்திகளை புரிய வைக்கிறார்கள். அந்த கதைகள் நமது மனங்களில் இறுதிவரை தங்கி வருகிறது. இன்று போகும் தமிழீழ விடுதலை அரசியல் போக்கு நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. விடுதலை போராட்டத்திற்கான வரலாற்று காரணங்கள், போராட்டம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து அது கருவி போராட்டமாக உருமாறிய காலக்கட்டங்கள்.

முள்ளிவாய்க்காலில் ஆயுத பலத்தை இழந்து போன போது ...............!

இந்தமுறை ஏமாந்தது சிங்கள அரசிடம் மட்டுமல்ல. உலக வல்லாதிக்க சக்திகளையும் நம்பி ஏமாந்து போன நாள். உலகமே ஈழத்தமிழினத்தை வஞ்சித்த நாள். இறுதிப்போரின் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்காலுக்குள் இலட்சக்கணக்கான மக்களும் தமிழீழத்தேசியத் தலைமை மற்றும் தளபதிகள் போராளிகளும் முடங்கிப் போயிருந்த கட்டத்திலும் தமிழ்மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பினார்கள். சர்வதேசமே எம்மை ஓடி வந்து காப்பாற்று என்ற கதறினார்கள்

ஐந்தாம் கட்ட ஈழப் போர்.........!


விடுதலைப்புலிகளின் தேசிய சுய நிர்ணயத்திற்கான உரிமை போர் தோல்வியில் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்ற, இந்த மே மாதத்தில் உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழக இன உணர்வாளர்கள் தங்களது துக்க நாளாக கடைப்பிடித்து வரும் வேளையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன..

அமையாமல் போகாது தமிழீழம்...............


 உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக சமர் புரிந்து எண்ணற்ற கவிஞர்கள், படைப்பாளிகள், அரசின் ஆசைகளுக்கு பலியாகமால் அரியாசனத்தின் அசைவுகளில் விழுந்துவிடாமல் அவர்களின் ஆசை வார்த்தைக்கு வசப்படாமல் வரலாற்றை தூக்கி நிறுத்தினார்கள். அடக்குமுறையாளர்கள் அவர்களின் கவிதைப் பல்லுக்கிடையே சிக்கி, பிழிந்தெறியப்பட்டார்கள். எந்த இடையூறுக்கும் எந்த அடக்குமுறைக்கும் அவர்கள் அஞ்சவில்லை. காரணம்,

ம‌ங்களூரு‌வி‌ல் ‌விமான‌ம் வெடி‌த்து ‌சித‌றிய‌தி‌ல் 158 பே‌ர் ப‌லி

க‌ர்நாடக மா‌நில‌ம் ம‌ங்களூரு‌வி‌ல் ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமான‌ம் தரை‌யிற‌ங்‌கியபோது வெடி‌த்து ‌சித‌றிய‌தி‌ல் 158 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.துபா‌‌யி‌ல் இரு‌ந்து ‌திரு‌ம்‌பியபோது ‌விமான ‌நிலைய‌ம் அருகே ‌இ‌ந்த விப‌த்து நட‌ந்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன. உ‌யி‌ரிழ‌ந்தோ‌ரி‌ல் பெரு‌ம்பாலானோ‌ர் க‌ர்நாடகா, கேரளாவை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று முத‌ல் க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு: நன்மை நடந்தால் கோடி புண்ணியம்

பல இடையூறுகளுக்கிடையில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாதம் 17-ஆம் திகதி பிற்பகல் 1: 20 ஆரம்பித்த அமர்வு 19-ஆம் திகதி பிற்பகல் 1 மணிவரை தொடந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் எட்டப்படுமேயானால் தமிழர் சிந்திய குருதிக்கும் அவர்களின் சொல்லனாத் துயர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருத முடியும்

ஒரு கொலை செய்தாலும் ஒரு லட்சம் கொலை செய்தாலும் தூக்கு ஒன்று தான்- கோட்டபாய

முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் ருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. 

அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில்

பெற்றோரை இழந்த வன்னி சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்பு - த.தே.கூ

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமது பெற்றோரை இழந்த சிறுவர்கள் மற்றும் அங்கவீனமான சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கவனிப்பாரற்ற நிலையில் அனாதரவாக உள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்றுமுன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், வன்னியின் பல பகுதிகளிலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.