சனி, 22 மே, 2010

ஐந்தாம் கட்ட ஈழப் போர்.........!


விடுதலைப்புலிகளின் தேசிய சுய நிர்ணயத்திற்கான உரிமை போர் தோல்வியில் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்ற, இந்த மே மாதத்தில் உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழக இன உணர்வாளர்கள் தங்களது துக்க நாளாக கடைப்பிடித்து வரும் வேளையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன..
 உயர்வு இணையம் சொல்கிறது கிழக்கு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று ,நக்கீரன் செய்தி வெளியிடுகிறது..தங்களது நிருபரை அங்கு அனுப்பி நேரில் பார்வையிட்டு பேட்டிகண்டு திரும்பினர் எங்களது நிருபர் என்று கூறுகிறது..! அமெரிக்காவின் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் தன்னுடைய கருத்துக்களை,ஆதரவை, சுதந்திர ஈழம்தான் தீர்வு என்று சொல்லி வருகிறார்..! நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கி விட்டன கிட்டத்தட்ட..பேராசிரியர் பாயல் தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி வருகிறார் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு..நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திர குமரன் உருவாகிவிட்டார்..பின்பு உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள் தங்கள் நாட்டிற்கான பிரதிநிதிகளை உருவாக்கத் தொடங்கி விட்டனர்..இனி நாடு கடந்த தமிழீழ அரசு தனது பணிகளை அதாவது ஈழ மக்கள் தனியான, சுதந்திரமான ஈழத்தில் மட்டுமே வாழ முடியும் என்று அறிவித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்குவார்கள்..ஐ.நா மன்றத்தில் பேசும் உரிமை..வாக்களிக்கும் உரிமை என்று, பின்பு படிப்படியாக செல்வாக்கு செலுத்தி, தனி ஈழத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கி விடுவார்கள் நாடு கடந்த அரசின் ஈழ விரும்பிகள். இவையெல்லாம் இலங்கைக்கு வெளியில் உள்ள நிலைமைகள்..நான்காம் கட்ட ஈழ விடுதலைப் போர் தோல்வி என்றும்..இனி விடுதலைப் புலிகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று சொல்லும் மகிந்த ராஜபக்செக்கள், காங்கிரஸ் பெருச்சாளிகள்..தமிழ்நாட்டை கொள்ளை அடித்து பெரும் கார்ப்பரேட்களாகிப் போன போலி கருணாநிதி வகையறாக்கள்..வெற்றி விழா கொண்டாடும் மகிந்த ராஜபக்சே கும்பல்கள்..இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படியெல்லாம் மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்கி ஐந்தாம் கட்ட விடுதலைப் போரை தொடங்குவதற்கு பெரிதும் முயன்று வருகிறார்கள்..அல்லது பெரும் வாய்ப்பை வழங்கி வருகிறார்கள் என்று கொள்ளலாம். ஓராண்டு முடிந்து விட்டது யுத்தம் முடிந்து..தமிழர்கள் அனைவரும் முகாம்களில்.. ராணுவ பாதுகாப்பில்..லட்சக்கணக்கான மக்கள் தொழில் விவாசாயம் போன்ற சுய தொழில்கள் செய்து விடாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறார்கள் இலங்கை இந்திய அரசுகளால்..! இரு இனம் கொண்ட இலங்கையில் சிறுபான்மையினமான தமிழ் மக்கள் அனைவரும் முகாம்களில்..! ஒரு இரண்டு மாதம் இருக்கலாம் முகாம்களில்..ஒருவருடம் கடந்து விட்டது இன்னும் ராணுவ கண்காணிப்பின் கீழ் ஒரு இன மக்கள்..! போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் மக்கள் அனைவரும் தன் வாழ்நாள் முழுதும் முகாம்களில் இருப்பதை தவிர வேறு வழியே இல்லை என்று கூறுகிறது இலங்கை அரசு..ஆமாம் என்று ஒத்து ஊதுகிறது இந்திய அரசு..! உலக நாடுகள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன இலங்கை பிரச்சனையில்..முழுக்க அம்பலப்பட்டு போனார்கள் அமெரிக்கா இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள்..இந்தியா, சீனா நாடுகளின் அரசியல் காரணம் அல்ல இவர்கள் அனைவரும் செயல் இழந்து போனதற்கு..உலகமயத்தின் தோல்வியின் விளிம்பில் நிற்கும் மேற்குலகம்..எந்த ஒரு புதிய அரசும் உலகில் உருவாகக்கூடாது என்ற முன் திட்டமிடுதலே காரணம்.. ! சந்திரிகாவின் சமயோசித அறிவும் கிடையாது இரட்டைக் கோபுர சாயப்பும் கிடையாது புலிகள் தோல்வி அடைந்ததிற்கு..! ஒவ்வொரு முறையும் புலிகள் வீழ்த்தப்படும் பொழுது, முன்பை விட பலம் பொருந்தியவர்களாக வருகிறார்கள் சண்டை போடுகிறார்கள்.. தனி நாடு கேட்கும் உரிமை வலுத்துக் கொண்டே வந்திருக்கின்றன..! ஐந்தாம் கட்ட ஈழ போரை துவங்கும் காலம் கணிந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஐந்தாம் கட்ட ஈழப் போர் துவங்கி விடும் என்று கருதலாம்..முன்பை விட பலமாக..நடத்தப்படும் இந்த ஐந்தாம் கட்ட ஈழப் போரே இறுதிப் போராக இருக்க முடியும்..மேற்குலக நாடுகள் அது அவர்கள் பிரச்சனை என்று ஒதுங்கிக்கொள்ள முடியுமே தவிர..இலங்கை அரசுக்கு ஆதரவை தெரிவிக்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டன இந்திய பார்ப்பனிய அரசு..! தேசியத் தலைவரின் கீழ் நடத்தப்படும் இந்த ஐந்தாம் கட்ட ஈழப்ப்போர் வெற்றிபெறும்..வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக