சனி, 22 மே, 2010

தசை நார்கள்

 தசை நார்கள் கிழிந்தபோதும்... - பிரளய நெருப்பை அணைக்க நினைக்கும் மூடர்களின் மாதிரிக்கு ஒரு துளி. சதையின் ஊடே உளி பாய்ந்தாலும் உருகுலையாத கண்களின் ஒளி. சிதைக்கப்பட்ட விடுதலையின் ஒளிப்படமாய் - இங்கே ஒரு புலிப்படம். தசை நார்கள் கிழிந்தபோதும் விடுதலையின்... திசை நோக்கி விழித் திரும்பும். அசைக்க முடியா எஃகு மனம். அவன் விடுதலையின் வரைப்படம். சாவின் விளிம்பு வரையில் சண்டாளர் - தம்மை அறுத்தபோதும் தடம்மாறா பெரும் புலியாய் மனம் இடம் மாறா உருவம் கொண்டவன். மாய்த்தப் பின்னர் புலிக்கொடி - அவன் மாய்ந்தப் பின்னர் புலிக்கொடி. அவனுக்கு உயிர் கொடுக்கும் மீண்டுமாய். சிங்களனின் அக்கிரமத்திற்கு சாட்சியமாய் மாந்த மாண்புக்கு சவாலாய் - இங்கே ஒரு புலி சிதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து வேறோடி - விடுதலை பெரும் மரமாய் செழித்து நிற்கும். அது சிங்களனின் சங்கறுக்கும். தமிழ் மனதின் குருதியை உறையச் செய்த குரூரத்தை செய்தவனை வேரறுப்போம். பழி தீர்க்கும் நாளுக்காய் பொறுத்திருப்போம். தமிழீழம் வென்றெடுப்போம் என்பதிலே உறுதியாவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக