வியாழன், 2 செப்டம்பர், 2010

கப்டன் அறிவு

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம்.


' டயஸ்போரா ' ஒரு சமூக வலைப் பின்னல் தளம்

"பேஸ்புக் நாம்" அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம். இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

"வரையறைகுட்பட்டே இந்தியா செயற்படும்"

தனது வெளியுறவுக் கொள்கைக்கு பாதகமில்லாத வகையில்தான் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா செயற்படமுடியும் என்பதை இலங்கை தமிழ்கட்சிகள் உணரவேண்டுமெனவும் , இறையாண்மை பெற்ற நாடான இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை இலங்கை தமிழ்கட்சிகள் உணர்ந்து கொண்டால்தான் இதில் இருக்கும் பிரச்சினைகளை அந்த கட்சிகள் புரிந்துகொள்ள முடியும்மெனஇந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தெரிவித்துள்ளனர்.

வீர வணக்கங்கள் !!!

புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு வீர வணக்கங்கள்!!

பிரபாகரன் அவர்களையும் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லியே பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது இந்த ஒட்டுண்ணிகளுக்கு....

முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.


அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும்

நாங்கள் அடிமை இல்லை? ஆண்ட பூமி இது? பூர்வகுடி நாங்கள்? இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லாதது? தனி ஈழம் ஒன்று மட்டுமே சாத்யமானது என்று ஒவ்வொரு பூவும் கோர்த்து உருவான மாலை இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிதைந்தாக காட்சியளிக்கிறது!

கோர்த்து வைத்திருந்த கைகள் சில சோரம் போய்விட்டது. சில புதிராக இருக்கிறது. சில வினாக்குறியாய் இருக்கிறது,............உலகில் இன்று வரையிலும் நாம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும், குழுக்களையும் நாம் பார்த்து கேட்டு படித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் வளர்ச்சி என்பது முறைப்படியான நாடுகளைக்கூட திடுக்கிட வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மை.