வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முள்ளிக்குளத்தில் கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம்

புத்தளத்தில் உள்ள “தம்பபன்னி“, கற்பிட்டியில் உள்ள “விஜய“, முள்ளிக்குளத்தில் உள்ள “பரண“, சிலாவத்துறையில் உள்ள “தேரபுத்தா“ ஆகிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்டுள்ள வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் தொடக்கம் மன்னாரின் அரிப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது

சந்திரிகா குமாரதுங்காவிற்க்கும் ஆப்பு.........

சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும், நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார்பஸ்' உடன்பாடு மற்றும் 'இவான் இன்ரநாஷனல்' உடன்பாடு போன்றன தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திரட்டி வருகிறது. குறிப்பிட்ட இந்த உடன்பாடுகள் சட்ட ரீதியாகவோ அன்றி முறையாகவோ இடம்பெறவில்லை என்றும் அவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் பரிந்துரைத்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

மீள்குடியேறியும் ...............

வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த ஏப்ரில் மாதம் முதல் வாரத்தில் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போதிலும், வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் தங்களுக்கு உறுதிவழங்கப்பட்ட உதவிகள் கிடைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் இவர்களில் சிலர் கூறுகின்றார்கள்.


கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (disputed island) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.

புலத்தில் தமிழ்ப்பெண்கள்...........

இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1500 இராணுவத்தை கொன்றவன் அமைச்சர்,, முதலமைச்சர்,, ஆயுதம் கடத்தியவன் விருந்தாளி .ஆனால் நானோ கைதி.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 50 வயதுடைய ஒரு தமிழ்க் கைதி சிங்கள நீதிபதியைப் பார்த்து நியாயமான ஒரு கேள்வியை எவ்வித அச்சமுமின்றி கேட்டுள்ளார். அந்த கேள்வி அந்த சிங்கள நீதிபதியை சற்று செவி சாய்க்க வைத்துள்ளது என்றே நாம் கூறவேண்டும்.


லட்சியம் வெல்லுமடா..

முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..


அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்எழுந்து தானாய் நிற்கும்..புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..மூவேந்தர்கள் வளர்த்த நம்மூதாதையர் மொழியைபாவேந்தர் சொற்படிபாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்..

"சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."
- வே.பிரபாகரன்

ஒன்றுபட்டு முறியடிப்போம்!!!

இலங்கை இனவெறி அரசு புரிந்த போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு தெரிந்த பிறகு பல்வேறு நெருக்கடிகள் ராஜபக்சே அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சலுகைகளை ரத்து செய்துவிட்டன. ஐநா மன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.