வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சந்திரிகா குமாரதுங்காவிற்க்கும் ஆப்பு.........

சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும், நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார்பஸ்' உடன்பாடு மற்றும் 'இவான் இன்ரநாஷனல்' உடன்பாடு போன்றன தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திரட்டி வருகிறது. குறிப்பிட்ட இந்த உடன்பாடுகள் சட்ட ரீதியாகவோ அன்றி முறையாகவோ இடம்பெறவில்லை என்றும் அவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் பரிந்துரைத்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.


அமைச்சரவையின் அங்கீகாரம் அன்றி அவர் மேற்கொண்ட உடன்பாடுகள் தொடர்பாகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இடம்பெற்ற உடன்பாடுகளில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு ராஜபக்சவின் மீதும் குற்றம் சுமத்தப்படலாம் என்பதாலேயே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாத உடன்பாடுகள் தொடர்பில் மாத்திரம் ஆராயப்படுகின்றன. சந்திரிகாவின் அமைச்சரவையில் மகிந்த ராஜபக்சவும் அங்கம் வகித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மகிந்த அரசாங்கத்தின் சர்வாதிகார முறையிலமைந்த ஆட்சிமுறை தொடர்பாகவும் ஆட்சியதிகாரத்தில் குடும்ப ஆதிக்கம் தொடர்பாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதன் விளைவாகவே இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக