வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முள்ளிக்குளத்தில் கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம்

புத்தளத்தில் உள்ள “தம்பபன்னி“, கற்பிட்டியில் உள்ள “விஜய“, முள்ளிக்குளத்தில் உள்ள “பரண“, சிலாவத்துறையில் உள்ள “தேரபுத்தா“ ஆகிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்டுள்ள வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் தொடக்கம் மன்னாரின் அரிப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது


மன்னார், முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றும் அங்கு உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச,“அவர்கள் தமக்கான அனைத்தையும் கடல் வழியாகவே கடத்தி வந்தனர்.எனவே தான் அரசாங்கம் முள்ளிக்குளம் போன்ற முக்கியமான இடங்களில் படைத்தளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதேபோன்ற மற்றொரு பாதுகாப்புத் தளம் முல்லைத்தீவில் எற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.தீவு நாடான சிறிலங்காவுக்கு கடற்படையே மிகவும் முக்கியமான பாதுகாப்புக் கவசமாகும்.கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிராந்தியக் கடற்படைத் தலைமையகம் முக்கியமான பங்கை வகிக்கப் போகிறது.

நாட்டின் முதல்நிலைப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்தும் திட்டத்தை நோக்கிய முதலாவது கட்ட நடவடிக்கை இது“ என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக