திங்கள், 17 ஜனவரி, 2011

இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்

கனடாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் மேலும் 400 இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டாவா சிட்டிசன் பத்திரிகை, கனேடிய அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடு ஒன்றில் இரண்டு இரண்டு தனித்தனி கப்பல்கள் மூலம் 400 தமிழ் அகதிகள் வரையில் கனடா நோக்கி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுப்பது குறித்து தற்போதே கனடா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.

யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று நேற்றுக் குற்றஞ்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ். வசாவிளானில் புனரமைக்கப்பட்ட கட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பத்திரிகை ஒன்றைச் சாடுவதில் தனது மூன்றரை நிமிடப் பேச்சின் கணிசமான பகுதியைச் செலவிட்டார். "வழமைபோல் சில பத்திரிகைகள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வந்தவேகத்தில் திரும் பியது வசாவிளான் மகாவித்தியாலயம் என முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அந்தப்பத்திரிகை

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி இலங்கை வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க – கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார்.

பொன்சேகா நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது தலைமுடி உதிர்வதுடன், சருமநோய் ஏற்பட்டுள்ளதாகவும்சில வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் காரணமாக சரத் பொன்சேகா பாதிப்படைந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் வி.ஆர்.டி.சில்வாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சரத் பொன்சேகாவிற்கு அவசியமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் ;யாழ்.மானிப்பாயில்

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில்   இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா என்பவரே பாடுகாயமடைந்துள்ளார்.
இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்