திங்கள், 17 ஜனவரி, 2011

பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.

யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று நேற்றுக் குற்றஞ்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ். வசாவிளானில் புனரமைக்கப்பட்ட கட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பத்திரிகை ஒன்றைச் சாடுவதில் தனது மூன்றரை நிமிடப் பேச்சின் கணிசமான பகுதியைச் செலவிட்டார். "வழமைபோல் சில பத்திரிகைகள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வந்தவேகத்தில் திரும் பியது வசாவிளான் மகாவித்தியாலயம் என முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அந்தப்பத்திரிகை
. திட்டமிட்ட முறையில் மக்களைக் குழப்புவதற்காகவும் அவர்களைப் பலவீனப்படுத்து வதற்காகவும் அப்படிப்பட்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன. சவப்பெட்டிக் கடைக்காரனுக்கு யாராவது சாகவேண்டும். அப்போதுதான் அவனுக்கு வியாபாரம் நடக்கும். அது போலச் சில பத்திரிகைகளும் மக்களைத் திட்டமிட்ட முறையில் குழப்பி வருகின்றன. மக்களின் துன்பங்களைச் தமக்குச் சாதகமாக்கி அரசியல் லாபம் தேடுகிறார்கள்'' என்று அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக