வியாழன், 26 ஆகஸ்ட், 2010

17ம் ஆண்டு நினைவுநாள்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்(26.08.1993) இன்றாகும்

மேஜர் நேரியன்..

ஓ.... அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் துளிகள் இங்கே.........

மருத்துவ பீட மாணவன் சாரங்கன் தற்கொலையா.? கொலையா ?

வைத்தீஸ்வரன் - சாரங்கன் கடந்த பொது தேர்தலின் போது ஈ.பி.டி.பி அமைப்பிற்கெதிரான பிரச்சார வேலைகளை முன்னின்று செயற்படுத்தியொருவர் ஜனாதிபதி ராஜபக்சவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக யாழ் குடா நாட்டில் களமிறக்கபட்ட அங்கஜன் - இராமநாதனின் நெருங்கிய நண்பனே மாணவன் சாரங்கன் என்பதும். ஜனாதி பதிராஜபக்சவினால் அண்மையில் யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளராக அங்கஜன் தெரிவு செய்யபட்ட நிலையில் அவரின் நெருங்கிய நண்பனின் மரணம் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது