வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தோல்விகண்ட முன்னாள் நாடாளுமன்ற பிரபலங்கல்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது. பேரியல் அஷ்ரப் நுஆ என்றழைக்கப்படும் தேசிய ஐக்கிய முன்னணிக்கட்சியின் முன்னாள் தலைவியாவார். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இவர் இணைந்துகொண்டார். பேரியல் அஷ்ரபுடன் இணைந்து சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறை ஏ.எம்.எம். நௌஷாத்தும் இத்தேர்தலில் தோல்விகண்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தெரிவாகி ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் இம் முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. கடந்ததேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை தமிழ்க் காங்கிரசில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கNஐந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், மற்றும் இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட எம்.சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர். இவை தவிர ஐக்கியதேசியக் கட்சி மற்றும் ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சிகளில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த பலர் இம்முறை தோல்விஅடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் மலையகத்தில் வடிவேல்சுரேஸ், சச்சிதானந்தன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. இவை தவிர நாளை விருப்புவாக்குகள் வெளியாகிய பின்பே தோல்வியடைந்த ஏனைய பிரபல்யங்கள் குறித்து தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றதேர்தலில் ஆளும்கட்சி முன்னணியில் ?

சிறீலங்காவில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 117 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஆளும் கூட்டணி 24 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறும் சாத்தியங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் நேற்று வியாழக்கிழமை (8) நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 225 ஆசனங்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் 196 உறுப்பினர்கள் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, மேலும் 24 தேசியல் பட்டியல் உறுப்பினர்களையும் அது பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே மொத்தம் 141 ஆசனங்களை பெற்று இலகுவாக அரசு அமைக்கும் சாத்தியங்களை அது ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு அதற்கு 9 ஆசனங்களே தேவை என்ற இலகுவான இலக்கும் எட்டியுள்ளது. சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஐனநாயக தேசிய முன்னனி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் கண்டி மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் இறுதி முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அவை தாமதமாகி வருவதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் வெற்றி என்பது மகிந்தாவின் போர் வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசு என மகிந்த ராஜபக்சாவின் பேச்சாளர் சந்திரபாலா லியனகே தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் இவ்வாறான வெற்றியை பெற்றதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலில் மக்கள் வாக்களித்த வீகிதம் மிகவும் குறைவானது என தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் தேர்தல் வன்முறைகளை தொடர்ந்து 22 தேர்தல் தொகுதிகளில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு நடைபெற்றால் எதிர்வரும் 19 ஆம் நாளே 16 ஆசனங்கள் தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரும். இதனிடையே மேலும் 9 உறுப்பினர்களின் ஆதரவுகளைப் பெற்று மகிந்தா ராஜபக்சா மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் அவர் நாட்டின் அரசியல் யாப்புக்களில் சில மாற்றங்களை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது ஒருவர் இரு தடவைகள் மட்டும் தான் அரச தலைவராக இருக்கலாம் என்ற அரசியல் சட்டத்தை மாற்றி ஒருவர் பல தடவைகள் அரச தலைவராக இருக்கலாம் என்ற சட்டத்தை அவர் கொண்டு வரலாம் என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் தற்போதைய அரசின் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தான் மிகவும் குறவான மக்கள் வாக்களித்தது எடுத்துக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர் விக்டர் இவான் தெரிவித்துள்ளார். 50 விகிதமான மக்கள் வாக்களிப்பது தொடர்பில் கவலை கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதாவது அரைப் பங்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பது அரசுக்கு உளவியலான ஆதரவுகளை மக்கள் வழங்கப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தோற்கடித்த தலைவர் மகிந்தா என்பதால் தான் அவருக்கே வாக்களித்ததாக தென்னிலங்கையை சேர்ந்த செத்மினி சற்துரிகா (28) தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய இராணுவத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் ..................................

அக்கரைப்பற்று நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் காத்துநிற்கும் தமிழ் பெண்கள் அப்பகுதியில் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இரு இனங்களும் செறிந்துவாழும் அக்கரைப்பற்றில் இவ்வாறான செயல்களில் முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் ஈடுபடுவது தொடர்பில் கவலைவெளியிடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிலும் மலைய பகுதிக்கு செல்லவிருந்த ஆசிரிய பயிலுனர் தமிழ் யுவதிகள் சிலரை அவ்விடத்தில் மதுபோதையில் நின்ற முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் வழிமறித்து குறித்த பெண்களை தூஸன வார்த்தைகளினால் திட்டியதுடன் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த யுவதிகள் அவ்வழியால் சென்ற ஆசிரியர் ஒருவரிடம் இது தொடர்பில் முறையிட்டு அவர் மூலம் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்னராசாவின் கவனத்துக்கு இச்சம்பவம் கொண்டுசெல்லப்பட்டது. அவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறையிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் விசாரணைசெய்தபோது குறித்த ஆட்டோசாரதிகள் நவரெட்னராசாவை தாக்கமுற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் குறித்த இடத்தில் நின்ற பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசாரணைக்கு வந்த பொலிஸாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த முஸ்லிம் ஆட்டோ சாரதிகள்? அக்கரைப்பற்று பஸ்நிலையம் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசமாகவே இருந்து வந்த நிலையில் அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் செயற்பாடுகள் காலூன்ற ஆரம்பமானது தொடக்கம் தமிழர்கள் இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவந்துள்ளனர். இதற்காக அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர்களைக்கொண்டு தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடொன்றின் உதவியுடன் ஆயுதக்குழுவொன்றையும் அமைத்துள்ளார். இவர்கள் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று நகரில் தமிழ் மக்களுக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அக்கரைப்பற்று நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர்களையும் அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு வர்த்தக நடவடிக்கைகளை தமக்கு சொந்தமாக்கிக்கொண்டனர். அத்துடன் இந்த ஆயுதக்குழுவினர் இப்பகுதியில் கஞ்சா,அவின் போன்ற வியாபாரங்களை அக்கரைப்பற்று நகரில் மேற்கொண்டுவருவதுடன் ஏனை போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டுவருகின்றனர். விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் உள்ள காலத்தில் வெளியே வரத்தயங்கிய இவர்கள் இன்று அதாவுல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் ஆட்டோக்களை வாங்கி தமிழ்-முஸ்லிம் மக்களின் எல்லைப்பகுதியில் செயற்பட்டுவருகின்றனர். கடந்த மாதமும் இப்பகுதியில் கடமைமுடிந்து விடுமுறையில் செல்லவிருந்த இராணுவவீரர் ஒருவரும் இந்த குழுவினரால் கத்திக்குத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தினமும் அக்கரைப்பற்று நகரில் பல்வேறு தேவைகளுக்கு செல்லும் தமிழ் யுவதிகளை வழிமறிக்கும் இவர்கள் பல்வேறு பல்வேறு தூஸன வார்த்தைகளினால் திட்டிவருவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதற்கு அதாவுல்லாவின் அரசியல் தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை காக்கப்போகின்றோம் என பிரிந்துசென்று எமது உறவுகளை காட்டிக்கொடுத்து படுகொலைகளை புரிந்து இன்று எமது இனத்தை நடுத்தெருவில் தள்ளிவிட்டுள்ள துணை ஆயுதக்குழுக்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காததையிட்டு இப்பகுதி மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர். இன்று எமக்கு முன்னாள் உள்ள பாரிய கடமையினை சிந்திக்கவேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம் என்பதையும் இப்பகுதியில் தமிழ் மக்களின் சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு என்பனவற்றை நிலை நாட்டவேண்டிய பாரியபொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது.

மீண்டும் புலிகளின் வரவை எதிர்பார்க்கும் தமிழீழ மக்கள்

நேற்று நடைபெற்ற எழாவது ஸ்ரீலங்கா பாராளுமன்ற தேர்தல் பல வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. கிடைத்த தகவல்படி யாழ் தேர்தலில் சிறுவர்களை கூட வாக்கு போட வெத்திலை அழைத்து சென்று வாக்கு போட வைத்துள்ளதாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும் 18 வீதமான மக்கள் யாழ் தேர்தல் பகுதியில் வாக்குகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் வாக்களித்த தமிழர்கள் ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கோ வழங்கியிருக்கலாம் .வாக்களிக்காமல் இருந்த தமிழர்கள் இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் தான் அவர்களுடை தீர்வு அவர்கள் கொள்கையே எமக்கு விடிவு ஸ்ரீலங்கா அரசியல் தமிழீழ மக்களுக்கு தீர்வு இல்லை எமக்கு எமது நாட்டில் எம்மை ஆளும் தனி தமிழீழமே தேவை அதை புலிப்படை வந்து பெற்று தரும் வரை தமிழீழமே எங்கள் வேட்கை அதற்க்காக எம் ஈழத்தில் ஒரு தேர்தல் வையுங்கள் தமிழீழ தனியரசு தேர்தல் அதற்க்காக நாங்கள் அளிப்போம் எங்கள் வாக்குகளே என்று உலக வல்லரசுகளுக்கு எடுத்துரைத்துள்ளனர் 82 % மேற்பட்ட தமிழர்கள் புறக்கணித்த தேர்தல் இது உலக நட்டு தலைவர்களுக்கு ஒரு செய்தி உணருங்கள் முக்கியமாக இந்திய தந்தை நாடே நீ புரிந்து கொள்ளு எங்கள் தீர்ப்பை.

கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பெரும் புரட்சி

கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பெரும் புரட்சி நடத்தி ஆட்சியைப் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி குர்மான்பெக் பாகியேவ் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார். நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானின் ஜனாதிபதியாக உள்ள பாகியேவ், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கட்சிகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். தற்போது அவரது ஆட்சியும் அதே போன்ற ஒருபுரட்சி போராட்டத்தால் பறிபோயுள்ளது. நேற்றுக் காலை தலைநகர் பிஷ்கெக்கில் பெரும் கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசு அலுவலகங்களை சூறையாடினர். நாடாளுமன்றம், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலவரத்தில் கிர்கிஸ்தான் உள்துறை அமைச்சர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பாகியேவ் தப்பி ஓடி விட்டார். அவர் அண்டை நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதனிடையே தலைநகர் பிஷ்கெக் உட்பட நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் இதுவரை 100 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு கட்டடங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்டவை எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் புரட்சிக்கு நாடு முழுவதும் மலிந்து விட்ட ஊழலே காரணம் என்று கூறப்பட்டாலும் ரஷ்யாதான் அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ரஷ்யா அதனை மறுத்துள்ளது.