செவ்வாய், 22 ஜூன், 2010

இன உணர்வு, தேசியம் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சில் இருப்பதை விட செயலில் இருப்பதே அழகு!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியைப் பற்றி எல்லா ஊடகங்களும் எழுதியும் சொல்லியும் வருகின்றன. இந்த இருபது ஆண்டுகளில் வன்னியும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை அடைந்தே இருக்கிறது.


போர், சமாதானம், போருக்குப் பிந்திய மீள்குடியேற்றம் என

தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சென்று பார்வையிட்டு வந்த ஒருவர் .............!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர் என்றும், அவர்களுடன் வேலைசெய்தனர் என்றும்,

மேஜர் தங்கவேல்

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான்.

உயிர்க்கொடை-முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம்-ஓவியக்கல்லூரி மாணவர் சசிக்குமார்

ஈழப்பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் இன்னுயிரைத்தியாகம் செய்துள்லனர்.இப்பொழுது அதைப்போல சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் ஒருவர் தன் இன்னுயிரை தூக்கிட்டு போக்கி கொண்டுள்ளார்.இது பற்றிய விபரம் வருமாறு.

தமிழகத்தில் உள்ள தமிழீழ மக்களுக்கு... அவசர அறிவித்தல்

தமிழீழம் சிங்களத்திடம் வீழ்ந்த பின்பு எமது உறவுகள் பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி வெளிக்கிட்டார்கள்.
அப்படி தஞ்சமடைந்த நாடுகளில் தமிழ் நாடும் அடங்கும். பல நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிங்கள அரசு கேட்டு வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை தமிழக அரசிடமும் சிங்கள அரசு கையளித்திருக்கின்றது.
அவர்களில் பெரும்பாலானோர் சென்ற ஆண்டு மே17ம் திகதிக்குப் பிறகு வந்தவர்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சிங்களம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தற்சமயம் செம்மொழி மாநாடு நடைபெறுவதால் இப்போதைக்கு ஏதும் செய்து தொலைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தபடி உள்ளன.
அதே கட்டளையை தமிழக அரசு தனது காவல்த் துறைக்கும் அறிவித்திருக்கின்றது. நேற்று முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம் என பத்து பக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு மறைந்து போன ஓவியக்கல்லூரி மாணவனின் மரணமும் மூடி மறைக்க தமிழக காவல்த்ததுறை முயல்வதாக தெரிகிறது.
ஆகவே செம்மொழி மாநாட்டிற்குப்பிறகு தமிழ் நாடு வழமையில் இருந்து மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள உறவுகளே ஏற்கனவே பல துரோகிகளையும் புலனாய்வாளர்களையும் தமிழகத்தில் சிங்கள அரசு அனுப்பியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஊடாகவே பலரது தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். துரோகிகளது வேலைகள் முடிந்து இப்போது பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது