வியாழன், 9 டிசம்பர், 2010

விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடியமாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் விழுந்துக் கொண்டே இருக்கின்றன...

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. சீமான் விடுதலை ஆவார்

திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

வன்னி மக்கள் மழைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணியினை கண்டதேயில்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டியவர்களே நாங்கள் தான் என்று அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா சபையில் கூச்சலிட்டிருக்கின்றார்!!!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தின் போது தனது உரையில் வன்னி மக்களை மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் அவர்கள் எதனையும் கண்டதில்லை என்ற தொனிப்பட கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைக் கையாண்டு உரையாற்றியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு -அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.