வியாழன், 9 டிசம்பர், 2010

வன்னி மக்கள் மழைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணியினை கண்டதேயில்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டியவர்களே நாங்கள் தான் என்று அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா சபையில் கூச்சலிட்டிருக்கின்றார்!!!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தின் போது தனது உரையில் வன்னி மக்களை மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் அவர்கள் எதனையும் கண்டதில்லை என்ற தொனிப்பட கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைக் கையாண்டு உரையாற்றியிருக்கின்றார்.



வன்னி மக்கள் மழை நீரைத் தவிர வேறெந்த நீரையும் கண்டதேயில்லை. அவர்கள் குளிப்பதே இல்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டி குளிப்பதற்கும் சொல்லிக்கொடுத்தவர்கள் நாங்களே என்றும் தெரிவித்த அவர்,


பிள்ளை இல்லாதவர்கள் என்னிடம் கேளுங்கள் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கொடுப்பதற்கு நான் தயார் என்றும் கூறியிருக்கின்றார்.


இதனை விடவும் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு இலங்கையை மகிந்தாஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரே ஆட்சி செய்யவுள்ளனர் என்றும் குறித்த காலப் பகுதியில் ஜனாதிபதி என்ற நினைப்பினை வேறெவரும் எண்ண முடியாது என்றும் மேர்வின் சபையில் கத்தியதாக சபையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் காட்டுமிராண்டி அமைச்சரான மேர்வின் சில்வா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு அளவிடமுடியாத பல்லாயிரம் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துநிற்கும் வன்னி மக்களைக் கேவலப்படுத்தி உரையாற்றியமை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தினைத் தோற்றுவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக