ஞாயிறு, 4 ஜூலை, 2010

தமிழீழக்கனவுடன் தம்மையே ஆகுதியாக்கிய எம் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மனதிலே விடுதலையை சும்ந்தவர்கள்!
...எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................


இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.


தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!

வானோடு கலந்த வான் கரும்புலி ரூபனின் சிலவரிகள் ...........

நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.


திலீபன் அண்ணை கூறியது போல்


"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"


இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்

கற்பனை களநிலவரங்கள் எழுதுவோர்க்கு ..............!

தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை
கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ
என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே
எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது
வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய
உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது.மேலும் மனித
உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக
காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய
வகையில் தமிழ் அமைப்புக்கள் உருவாகி உள்ளன உங்கள் ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக
செயல்படுவதே தமிழின ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.தாய் நாட்டுக்காக தம் உணர்வுள்ள தமது உடலை வெடிக்க வைத்த
கரும்புலிகள் வாழ்ந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் நாடுப்பற்று!இல்லாதோர் தங்கள்
சுயநல வாழ்கையை மட்டும் கவனம் செலுத்துவதே அவர்களுக்கும் தமிழினத்துக்கும் அவர்கள் செய்யும் நன்மை.
கரும்புலிகள் நாளாகிய இன்று நாம் எடுக்கவேண்டிய உறுதி பிரிந்து நிற்கும் நாம் ஒன்றிணைந்து* எம்மின துயர் போக்கல்
என்ற சொற்பதமே.
.







ஆயிரம் கண்கள் பார்வையிலே. உந்தன் உயிர்கள் போகையிலே. கண்ணீர் தரையில் ஓடுகையில். ஓவென்று அழும் சத்தம் - எம் நெஞ்சைப் பிளக்கிறதே...

தமிழினத்திற்காய்... தம்முயிரைத்
தியாகம் செய்த எம் கரும்புலிகள்....
கடற்கரும்புலிகள்....
தரைக்கரும்புலிகள்....
வான் கரும்புலிகள்....
இவர்கள் எல்லோருக்கும்.
எம் இதயம் கனிந்த....
கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்களுக்காய்...
என் சிறு கவித்துளி....
இது எம் கண்ணீர்த் துளியும் கூட...
அனைத்து உள்ளங்களும்...
உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்....
பலரின் குமுரல்கள்.....
இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே......
இது நாமில்லையே.....
இது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!

அவல வாழ்க்கையா! வாழ்க்கையே அவலத்திலா! விடைதெரியாது??????

எதிரி என இதுவரை கூறிவந்தவர்கள் வீசி வைத்துள்ள கொலை வலைக்குள் பாதுகாப்பு என குடிபுகுந்தவர் பலர் அவர்கள் வரும் போது அணைக்கப்பட்டதும் பின்னர் அவர்களின் உயிர் அணைக்கப்படுவதும் நீங்கள் தெரிந்ததுதான் ஆனாலும் ஒவ்வொருவரும் உயிர்காப்பதற்கும் மண்கிடங்கில் கூவும் செல்லுக்கு பதுங்கும் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கவே வவுனியா செல்வதாக எண்ணித்தான் கடந்தார்கள்.

தனை மாய்த்து எமைக் காத்த புலிவீரர் இவ்வுலகில் இல்லையே. புதுயுகம் படைக்கப்... புறப்பட்ட வீரர் நாமில்லையே...!

கரும்புலிகள், எம் தேசத்தின் அழியாச் சுடர்கள் ,..........

இயலாதது என்று ஒன்றில்லை
இவர்க்கு ,
தியாகம் ஒன்றைத்தவிர
வேறு தெரியாது இவர்க்கு,
தலைவனின் சிந்தனையில்
பூத்த கந்தக மலர்கள் ,
தன்னினத்திற்காக
உயிர்விடும் தன்னலமற்ற
மறவர்கள் .

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!

புனலிலும் அனலாய் கனன்றிடும்
புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!!


தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ
தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!
வெஞ்சின கரு வேங்கைகளே...!!!
வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

"உயிராயுதம்"

கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்...

கரும்புலியின் இறுதிக்கடிதம் .............

“வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்” என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அறிந்ததும் அறியாததுமான அற்புதம்கள்!




எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........
அன்பிருந்ததது.........காதலிருந்தது.............


நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள்.
நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்!
நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம்.
அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்.......


எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்..
இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்...
வெடிக்க போகும் கடைசி நிமிடம் வரை புன்முறூவலே முகத்தில் தெரியும் புயலின் பூக்கள்..
இயற்கையின் வேறுபடுத்தலின் தொந்தரவுகளாலும்,மென்மையானவர்களல்ல!!!.....
எம்மாலும் சாதிக்க முடியுமென சாதித்த சாதனையாளர்கள்.....


தாக்குதல் நேரத்திலும் அந்த கடைசி நிமிடத்திலும் இலக்கு மட்டுமே அழிக்கபட வேண்டும் தவறுதலாக யாராவது அப்பாவிகளை இழந்து விடக்கூடாது என்பதற்காய் வெடி சுமந்த நிலையிலும் தங்களை தாங்களாக தனியாக அழித்து கொண்ட அற்புதமானவர்கள்!!!!


தங்கள் இலட்சியம் நிறைவேற உதவியவர்களை கடைசி நிமிடம் வரை நன்றி மறக்காத மறவர்கள்........
தாக்குதலிற்காய் தாய் மண்னை விட்டு புறப்படும் கடைசி நொடியில் அவர்கள் மனதில் அலை மோதும் எண்ணஙகள்.......
தனியே தனித்திருந்து பழைய ஞாபகங்கள் கண்முன் தலை விரித்தாட தன் நண்பர்களின் இலட்சியங்களின் நிறைவேற்றல்கள்........
தோழியரின் தியாகங்கள் அதற்க்கு மேலாய் தடையுடைக்க போகும் இலக்கு.........
நேரம் நெருங்க நெருங்க தாய் மண்னை முத்தமிட்டு கையசைத்து போவதை யார் தான் மறப்பார் இவ்வுலகில்...............


தம் உயிர் கூட்டை உதறி காற்றாகி, எம் தேசத்துக்கு இன்றும் சுவாசம் தந்துகொண்டிருக்கின்ற _எம் கண்மணிகள் இவர்கள்!!!!.........

செய்திகள்..........................