ஞாயிறு, 4 ஜூலை, 2010

அவல வாழ்க்கையா! வாழ்க்கையே அவலத்திலா! விடைதெரியாது??????

எதிரி என இதுவரை கூறிவந்தவர்கள் வீசி வைத்துள்ள கொலை வலைக்குள் பாதுகாப்பு என குடிபுகுந்தவர் பலர் அவர்கள் வரும் போது அணைக்கப்பட்டதும் பின்னர் அவர்களின் உயிர் அணைக்கப்படுவதும் நீங்கள் தெரிந்ததுதான் ஆனாலும் ஒவ்வொருவரும் உயிர்காப்பதற்கும் மண்கிடங்கில் கூவும் செல்லுக்கு பதுங்கும் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கவே வவுனியா செல்வதாக எண்ணித்தான் கடந்தார்கள்.



பிணக்குவியல்களில் இருந்து விடைபெறுவதாக தான் எண்ணி இருந்தார்கள்.


அவர்கள் கடக்கையில் அவர்களின் கைவிட்டு கடந்தது தன்மானம் மற்றும் வாழும் உரிமைக்கான இருப்பும்தான் என உணரமுன்னர் பலர் கொல்லப்பட்டு விட்டார்கள் இன்னும் பலர் கொலைக்களத்தில் உள்ளார்கள்.


பரிதாபத்திற்கு உரியவர்கள் இதில் இளம் பெண்கள்தான்.


வாய்வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத கொடுமையை அவர்களும் அனுபவித்து வருகின்றார்கள்.இனியும் அனுபவிக்க அவர்களை தண்டித்து நடைப்பிணமாக்கி மகிழ ஒரு கும்பல் கங்கணம் கட்டி நிற்கின்றது.


எம் இனப் பெண்கள் அனுபவிக்கும் உலகில் கொடுமையான வதைகளில் ஒரு சிறு அத்தியாயம் இங்கு


ஆமி : பெரியதுரை வாறது எல்லாரும் இங்க வாறது சரியா


உடன வாறது ஏய் நீ அங்க என்ன செய்றது பெரிய துரை வாறது இங்க வா உடனே வா ஏய் என்ன சத்தம் பெரிய துரை வாறது சத்தம் போடக்கூடாது சரியா சத்தம் போட்டால் சூட்பண்ணிடும் ஏய் நீ என்ன திரும்பி நிக்கிறது இங்கவா ஏய் மே புட்டுவ கதிரை கொண்டுவா


கொமாண்டர் : ஆய்போவன் கோமத


ஆமி: கொந்தாய் கொந்தாய் சில்வா கீஜான்ட மாத்தயா மொக்கத கிஜ்வே அத்தனிங் பலான்ட கொந்தட்ட லக்சனயாய் நேத


ஆமி கவ்த மாத்யா?


கொமாண்டர்:கண்களால் ஜாடை காட்டிச் சிரிக்கின்றான்


ஆமி :ஓ மேயாத; சிரிகின்றான்... கமன் நா மாத்யா


ஏ எல்லாம் மாத்தயா பக்கம் வாறது.ஏய் செல்லுறது கேட்கேல்ல இங்க பாக்கிறது இது கொட்டியிடம் இல்லை இது நம்ம இடம் சரியா


சொல்லுறது கேட்கேல்லா சூட்பண்ணி எறியிறது நாம சரியா.


கொமாண்டர்: அந்த இளம் பெண்ணை பார்த்து, ஏய் நீ இங்க வா வா இங்கிட்டு


ஆமி : ஏ வா இங்க பெரியதுரை கூப்பிடுறதூ வா இங்கை.சுறுக்கா வாறது இல்லை சூட் பண்ணிடும் சரியா வா.


பெண் மெதுவாக அழுகின்றாள்.


கொமாண்டர் : ஏய் பெயர் என்ன


அந்த பெண்ணின் அழுகை சற்று பெரிதாகின்றது


ஏய் பெயர் என்ன கேட்டது நீ அழறது பெயர் சொல்லு


தொடர்ந்தும் அழுகின்றாள்.


ஆமி : ஏய் பெரியதுரை கேட்கிறது நீ அழுறது பெயர் சொல்லு


சொல்லு உறுக்கிறான்.


பெண் : மலர் என்று கூறுகின்றாள்


சிரிப்பொலி


ஏய் மலர் கொந்தாய் கொந்தாய்


கொமாண்டர் சில்வா மல் கொந்தட்ட லக்சனாய் ?


ஆமி : ஏய் நீ ரொம்ப அழகாம் பெரியதுரை செல்லிறது


பெண்ணின் அழுகை அதிகரிக்கின்றது.


கொமாண்டர்: ஏய் நீ எந்த இடம் இருந்து வந்தது


பெண் அழுகின்றாள்.


ஏய் எந்த ஊர் இருந்து வந்தது சொல்லுறது.


பெண் அழ மற்ற ஆமி உறுக்கின்றான் ஏய் சொல்லுறது


பெண் : மல்லாவி என்று கூறுகின்றாள்


சிரிப்பொலி


கொமாண்டர்;: ஏ மல்லாவி மல்லாவித தொமழ கொட்டி கொடக் இன்னே.


மீண்டும் சிரிப் பொலி


சில்வா மே மல்லாவி நோனா ரொம்ப லக்சனாய் கொந்தாய் சில்வா கொந்தாய்


ஏய் மலர் என்ட என்ட.


பெண் தொடர்ந்தும் அழ


ஆமி : ஏய் பெரிய துரை கூப்பிடிறது இங்க வாறது நீ


ஏய் இங்கை வாறது.


பெண் தொடர்ந்தும் அழுகின்றாள்


கொமாண்டர் : சில்வா


ஆமி : ஏய் நீ எல்லாம் இப்ப போறது சரியா நாம கூப்பிடும் போது வாறது சரியா


பெண்ணின் அழுகுரல் குறைகின்றது.


ஆமி : ஏய் மலர் நீ எங்க போறது நீ இங்க நிக்கிறது பெரியதுரை விசாரணை சரியா நீ இங்க நிக்கிறது மற்ற ஆக்கள் எல்லாம் இப்ப போறது


பெண் மீண்டும் அழ தொடங்குகின்றாள்..


இப்போது இராணுவத்தினரும் அப் பெண்ணும் மட்டும் அங்கே மீதி இருந்தவர்கள் அனுப்பபட்டு விட்டார்கள் எனி என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் உறவுகளே


இவைகள் வெறும் செய்தியாக நோக்கப்பட வேண்டியவை அல்ல அவற்றின் ஆழத்தினை புரிந்து அதற்கான வழிதேடி அடுத்தவர்களை காப்பாற்ற நாம் கற்றுக் கொள்ளும் அடிப்படை பாடங்களை செல்லித்தரும் செய்திகளாகும்.


எக்காரணத்திற்காக அவள் தன்னை இழக்கவேண்டும். இல்லை பலாத்காரமாக அவள் அழிக்கப்படவேண்டும். தவறானவள் இல்லை அவள் தவறு இழைக்க தூண்டியவளும் இல்லை. தமிழச்சி என்ற ஒன்றுதான் அவளிடம் உள்ள அடையாளம். அந்த அடையாளத்துக்காக தான் அவள் இவ்வளவு இழிச் சொற்களையும் தன் காது கொடுத்து கேட்கவேண்டும்.


இதில் கூறப்பட்ட கருத்து பலருக்கு காலம் கடந்தவையாக இருக்கலாம். சிலருக்கு அதாவது அழிக்கப்பட காத்திருக்கு இன்னும் பலருக்கு தெம்பையும் நம்பிக்கையையும் காட்டும் புது செய்தியாக இருக்கலாம். விரைவு செயல்பாடுதான் எம்மிடத்தில் தற்போது தாயகம் எதிர்பார்க்கும் உபகாரம்.


எமக்கு அடையாளம் தந்த மண். எம்மை வளர்த்து எடுக்க உறுதுணையாய் இருந்த மண். இன்று எம் கைகளைப்பார்த்து கண்ணீர் வடித்து நிற்கின்றது. எம்மிடம் கையேந்தாமல் உதவி கேட்டு நிற்கின்றது.


ஒரு வீட்டின் பெண் அழுதால் மொத்த குடும்பமும் அழும் அனுபவம் சொன்னது. இங்கு தமிழர் தாயகத்தில் மொத்த தமிழினப் பெண்களும் அழுகின்றார்கள் புரிந்து செயல்படவேண்டும் நாளை நம் வாசலில் அநீதி வந்து நிற்கும் போது கண்திறந்தோ கதறி அழுதோ பயன் இல்லை.


இனிய தமிழ் உறவுகளே! சிந்தியுங்கள்! உங்கள் தாயை, அக்காவை, தங்கையை, ஏன் உங்கள் சேயையும் கூடத்தான் நாளைய வாழ்வில் உங்கள் நிலையென்ன என்பதைத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக