வெள்ளி, 3 டிசம்பர், 2010

தமிழீழத்தில் மின்சாரம் தடைப்பட்டு இருந்த காலத்தில் அப்போதைய மாணவர் சமூதாயம் தேங்காய் எண்ணை குப்பி விளக்கில் கல்வி கற்றும் பாடசாலைக்கு நடந்து சென்று கல்வி கற்று யுத்தத்தின் மத்தியில் பரீட்சையில் நல்ல தேர்வுகள் பெற்று கல்விச் சமூதாயத்தை சீர்குலையாமல் பேணி காத்தபோதும் இப்போதைய மாணவர் சமூதாயத்திற்கு மின்சாரம், பாடசாலைக்கு போக்குவரத்து வசதி, கல்வி நிறுவனங்களிற்கு மோட்டார்சையிக்கில் வசதி, கையடக்கதொலைபேசி, கணணி என பல வசதிகள் இருந்தும் பரீட்சை தேர்வுகள் வீழ்ச்சியடைந்து எமது கல்விச் சமூதாயம் வீழ்ச்சியடைய காரணம்தான் என்ன...???

அனைத்துலக ஊனமுற்றோர் நாள்- டிசம்பர் 3

ஆய்போவான் ம(கிந்தா)டையா..

ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா
இந்திங் தெரியுதுதானே தெமிழ கட்டியோட பலம்
நாங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான்- ஆனால்
உன் போன்று புலன் இல்லாதவர்கள் அல்ல பிணம் திண்னி கழுகே
நீவிளையாட தமிழர்கள் என்ன விளையாட்டு திடலா
நீ கம்பி எண்ணும் நாட்கள் தொலைவில் இல்லை....

சர்வதேச உலகமே! கோரப்படுகொலைகளை செய்த இனவெறி இராணுவத்தையும் அதை பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதிகளையும், அழித்தவர்கள் பயங்கரவாதிகளா????

இந்த இனவெறியர்களுடனா சமாதானம் பேசச்சொன்னீர்கள்?


இந்த இனவெறியர்களுடனா சேர்ந்து வாழச் சொல்கிறீர்கள்? இந்த இனவெறி பிடித்தவர்களா எமக்கு நல்ல ஒரு அரசியல் தீர்வு தரப்போகின்றார்கள்?


பயங்கரவாதிகளை அழிக்கத் துணைபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு முழுப் பயங்கரவாதிகளிடமல்லவா எம்மை அழைத்து வந்து விட்டிருக்கிறீர்கள். இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துவிட்டு இன்னும் இன்னும் மெளனமாக இருக்கிறீர்களே? இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளை நீங்கள் பார்க்கவேண்டும்? அல்லது நாங்கள் தமிழர்கள் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்?






இதையெல்லாம் பார்க்கும்போது என்ன எண்ணத் தோன்றுகின்றதென்றால் சிங்கள இனவெறியர்கள் மட்டுமல்ல சர்வதேசமே தமிழர்களை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களா? இந்த ஒளிப்பட காட்சிகளை என்னால் தொடர்ந்து முழுமையாக பார்க்க முடியவில்லை. உடலில் என்னென்னவோ உபாதைகள் ஏற்படுகின்றது. வயிற்றுக்குள் ஒரு உறுப்புக்களுமே இல்லாதது போன்று தோன்றுகின்றது. வயிற்றைப் பிடுங்கிக்கொண்டு சத்திதான் வருகிறது. இத்தனை கொடுமையான காட்சிகளை நாம் பார்த்தும் ஏன் நாம் தமிழர்கள் இன்னும் இன்னும் பிரிந்து நிற்கின்றோம்? ஏன் நாம் தமிழர்கள் இன்னும் இன்னும் எமது உரிமைக்கான போராட்ட களத்தில் பின்னுக்கு நிற்கிறோம்?


அனலாய்க் கனந்து கொண்டிருக்கும் இதயத்துடன் இருக்கும் தமிழர்கள் நாங்கள் நெருப்பான எமது மூச்சுக் காற்றால் ஒரேமூச்சில் இனவெறி பிடித்த சிங்கள தேசத்தை ஊதித் தள்ளிவிட மாட்டோமா? இந்த இனவெறிபிடித்த சிங்களவனுக்கு தெரிந்த ஒரே பாஷை இந்த ஒளிப்பட காட்சியில் இருப்பதான வன்முறை தான். தமிழர்கள் அந்த பாஷையில் தான் இந்த இனவெறிபிடித்த சிங்களவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.


சர்வதேசம் எமது கையில் விலங்குபோட்டு அந்த பாஷையிலே பேசுவதை மெளனிக்க வைத்திருக்கின்றார்கள். இனிமேலும் நாம் தமிழர்கள் இப்படியே மெளனித்திருந்தால் இந்த இனவெறிச் சிங்களவர்கள் பேசுவதற்கு வாயும் இல்லது செய்துவிடுவார்கள்.


புலிகளை அழித்தபின் சிங்கள இனவெறியர்கள் பயப்படுவது தமிழர்களின் ஒற்றுமையை பார்த்தே. ஏற்கனவே சிங்களம் தமிழர்களின் ஒற்றுமையில் கை வைத்துவிட்டார்கள். அதுதான் நாங்கள் கண்கூடாக பார்க்கிறோமே, இங்கு ஐரோப்பாவிலும் ஏனைய பிற நாடுகளிலும் நாம் பிரிந்து வேறு வேறு திசைகளில் நிற்கிறோம். விடுதலைப்புலிகளையும், அதன் செயற்பாட்டாளர்களையும், அவர்கள் பின்னால் நின்ற பொதுமக்களையும் ஒருவரை ஒருவர் நம்பமுடியாமல் மூன்றாகவும் நான்காகவும் உடைத்து பிரிந்து நிற்கும்படி செய்திருக்கிறார்கள் எல்லோரும் என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் சொல்லுவது யதார்த்தம். என்னுடைய கூற்று பலரது ஆள் மனங்களிலே சுட்டிருக்கலாம்.


நாம் எல்லோருமே ஒரு கணம் எம்மை நாமே எம் நெஞ்சங்களிலே கைவைத்து கேட்டுக்கொள்வோம். உண்மையிலேயே நாம் தமிழர்கள் ஒற்றுமையாகவா இருக்கிறோம்? உணர்ச்சி பொங்க பேசினால் மட்டும் உண்மை பொய்யாகிவிடாது, பொய் உண்மையாகிவிடாது.


எனவே தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் அனைத்து பேதங்களையும் மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர வேண்டும்.


பிரித்தானியாவில் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கெதிராக தற்பொழுது ஒன்றுசேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒற்றுமை இன்றுமுதல் உலகம் பூராகவும் இருக்கின்ற தமிழர்களிடத்தில் எப்பொழுதும் நிலைக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த உலகம் எம்முன்னால் ஒரு சிறு பருக்கை. இந்த சந்தர்ப்பத்திலும் கூட நாம் ஒன்று படவில்லையாயின் நாம் பார்த்து நிற்க எம் கண்முன்னே எம்மினம் பூண்டோடு அழிக்கப்படும்.

இராணுவ சிப்பாயை அடித்துக் கொன்ற இளைஞன்

யாழ் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞன் பிரதேசத்தில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாயை அடித்துக் கொலைசெய்த சம்பவம் ஒன்று இன்றுமாலை இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்பாராத விதமாக சிக்கல்கள்!



இலங்கை ஜனாதிபதியும், போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவருக்கு எதிராக ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டங்களால் பிரித்தானிய அரசாங்கம் மஹிந்த மீது மிகவும் ஆத்திரமடைந்துள்ளது. இனிமேல்

பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு.....

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்!

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம்,