வெள்ளி, 3 டிசம்பர், 2010

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்பாராத விதமாக சிக்கல்கள்!



இலங்கை ஜனாதிபதியும், போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவருக்கு எதிராக ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டங்களால் பிரித்தானிய அரசாங்கம் மஹிந்த மீது மிகவும் ஆத்திரமடைந்துள்ளது. இனிமேல்
 பிரித்தானியாவிற்கு வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.


இருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சம் புகுந்து, தன்னை எவ்வாறாயினும் இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லுமாறு பணிப்பு விடுத்திருந்தார்.


ஆனால் இன்று மாலை, இலங்கையில் இருக்கும் பிரித்தானிய தூதுவராலயத்தில் பிரித்தானிய தூதுவரும், இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ஜீல் எல் பீரிஸும் சிறு சந்திப்பினை மேற்கொண்டனர்.




பிரித்தானியாவுக்கு மஹிந்த சென்று தங்கியிருக்கும் நேரத்தில் எதற்காக சனல்4 இவ்வாறு போர்க்குற்ற காணொளிகளை வெளியிட்டது என குழம்பியுள்ள ஜீ எல் பீரிஸ் இக்காணொளிகளை சனல்4 ஊடகத்திற்கு அனுப்பியவர்கள் யார் என்று விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




பிரித்தானியாவில் மஹிந்த தங்கி இருப்பதனால் பிரித்தானியா, கனடா, சுவிஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பிரித்தானிய தூதரகங்களின் முன் ஈழத்தமிழர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



1 கருத்து: