வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கப்டன்:அங்கயற்கண்ணி........


கப்டன்:அங்கயற்கண்ணி
துரைசிங்கம்-புஸ்பகலா
மண்கும்பான்,யாழ்ப்பாணம்.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”

அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும் அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும் ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம் தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்!!!!.........

அன்புசால் இளைஞர்களுக்கு!  தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.



அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.

தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?


ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.


அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.


ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.


அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டி அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு களத்தில் குதியுங்கள், எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள...........

தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வாளர்கள்!


தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வன்னியின் மீளக்குடியேறிய மக்களுடனான சந்திப்புகளில் இராணுவ புலனாய்வாளர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதிபடுத்த பட்டுள்ளது. படத்தில் குறிப்பிட்ட நபர். ஈசன் என்றும் , அருள் என்றும் , அழைக்கபடுபவர். இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார்,, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் நபரானர்.



பல போராளிகளின் கைதுகளிற்கு காரணமான இவர். பொதுமக்கள் தடுத்து வைக்கபடும் முகாம்களிற்கு சென்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு இராணுவம் கைது செய்ய ஒத்தாசை புரிவதுடன் ,, முகாம்களிலிருந்து வெளியேற இருக்கும் இளையவர்களிடம் பல லட்சம் ரூபாய்களை கப்பமாக பெறுவதுடன் , கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுடன் பாலியல், வன்புணர்ச்சி செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருகின்றார்


அண்மையில் நெல்லியடி பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுகொல்லபட்ட தூயவன் என்பவரும் நபரும் நெருங்கிய நண்பர்கள். எனினும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கலந்துரையாடல்களில் இவர் பங்குபற்றுவதானது பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவரின் செயற்பாடுகளை இனம்கண்டு எம்மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகிறோம். இவர் உண்மையில் அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர் என்பதற்க்கான ஆதாரமான அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர்அடையாள அட்டை எமக்கு கிடைக்கபெற்றுள்ளது. அதில் இவருக்கு பொறுப்பான பொறுப்பதிகாரியாக மேஜர் கமகே எனும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.