வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வாளர்கள்!


தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வன்னியின் மீளக்குடியேறிய மக்களுடனான சந்திப்புகளில் இராணுவ புலனாய்வாளர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதிபடுத்த பட்டுள்ளது. படத்தில் குறிப்பிட்ட நபர். ஈசன் என்றும் , அருள் என்றும் , அழைக்கபடுபவர். இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார்,, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் நபரானர்.



பல போராளிகளின் கைதுகளிற்கு காரணமான இவர். பொதுமக்கள் தடுத்து வைக்கபடும் முகாம்களிற்கு சென்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு இராணுவம் கைது செய்ய ஒத்தாசை புரிவதுடன் ,, முகாம்களிலிருந்து வெளியேற இருக்கும் இளையவர்களிடம் பல லட்சம் ரூபாய்களை கப்பமாக பெறுவதுடன் , கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுடன் பாலியல், வன்புணர்ச்சி செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருகின்றார்


அண்மையில் நெல்லியடி பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுகொல்லபட்ட தூயவன் என்பவரும் நபரும் நெருங்கிய நண்பர்கள். எனினும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கலந்துரையாடல்களில் இவர் பங்குபற்றுவதானது பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவரின் செயற்பாடுகளை இனம்கண்டு எம்மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகிறோம். இவர் உண்மையில் அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர் என்பதற்க்கான ஆதாரமான அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர்அடையாள அட்டை எமக்கு கிடைக்கபெற்றுள்ளது. அதில் இவருக்கு பொறுப்பான பொறுப்பதிகாரியாக மேஜர் கமகே எனும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக