புதன், 11 ஆகஸ்ட், 2010

கிழக்கைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் சட்டம் வலுப்படுத்தப்படும்.



யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சிவில் சட்டமானது கிழக்கு மாகாணத்தைப் போன்று மேலும் வலுப்படுத்தப்படும் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிபுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமுகமான சமாதான நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை மிகவும் இரகசியமான முறையில் குடாநாட்டின் பிரதேசங்களில் கைது செய்ததன் விளைவாகவும் , அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் பல இடங்களில் மறைத்து வைக்கபட்ட வெடிபொருட்கள் மீட்கபடுவதுமான சம்பவங்கள் இடம்பெறுவதால் இறுக்கமானதொரு சட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார் இந்தச் சூழலில் பொது மக்கள் பயம் அற்றவர்களாக வாழ வேண்டும். இதற்காக யாழ்ப்பாண பொலிஸார் தமது அளப்பரிய சேவையினை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.


இதனடிப்படையில் சட்டத்தை சீர் குலைப்போருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட நட வடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 180 பொலி ஸாரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களும் பயன் படுத்தப்பட்டது. மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது பாரிய குற்றங்களை விளைவித்தவர்கள், மறைந்திருந்த பிடியாணைக்குரியவர்கள், சட்டவிரோத மது மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், திருடர்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கை கள் யாழ்ப்பாணத்தில் விரிவு படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் உறுதுணையாக இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக