வெள்ளி, 4 ஜூன், 2010

தியாகி பொன்.சிவகுமாரன்(26.08.1950-05.06.1974)

பொன். சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தலைவரின் முகமே..!-கண்மணி





"எதிரி கருவி ஏந்தாவிட்டால் விமர்சனம் என்பதே கருவி. எதிரி கருவி ஏந்திவிட்டால், கருவி என்பதே விமர்சனம்". இந்த வரிகள் நம்மை நம்முடைய போராட்ட நியாயத்தை உணர்த்துகிறது. எதுவரை நாம் அமைதிகாக்க வேண்டும் என்பதை நமக்கு பகைவன்தான் கற்றுத்தருகிறான். இன்று அரசியல்சூழல் மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!





“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.


இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தாய் தமிழ்நாடு, தமிழீழம் ,உலக தமிழ் ,மொழியால் ஏற்படும் ஒற்றுமையின் விம்பம் ...........


நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு

முகவரியாய் எம் தலைவன்!!

பகைவனிடம்
சிறைகூடமும்
சித்ரவதையும்
கொலைக்கருவியும்
குவிந்து கிடக்கலாம்.




ஒப்புக்கு ஒற்றுமை என கூச்சலிடுவதை நிறுத்தி உண்மையான ஒற்றுமைக்கு வழி சமையுங்கள்!

நானும் நானும் என்றது போலவே தமிழினத்தின் சாபக்கேடமுள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் கடந்த ஒரு வருடமாய் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. தமிழீழ தேசம் என்ற நிழல் அரசு இழக்கப்பட்டதை பற்றிய கவலையை விட தமிழர்களின் அடுத்த தலைமை பற்றி கேள்விகளும், தலைமை ஏற்புக்களும் கடந்த மே மாதம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

துரோகிகளை உருவாக்காதீர்கள்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது.



வாகரையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஜவத்தை என்னும் கடற்கரையை அண்டிய பிரதேசத்திலேயே தற்போது சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

‌‌தீ ‌விப‌த்து: 104 பே‌ர் ப‌லி

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 104 பேர் பலியாகினர். 50‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்‌பி‌ல் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறிய‌தி‌ல் தீ அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை ஒன்றில் பரவியது.
தொழிற்சாலையில் ரசாயனப் ‌பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவிய‌தி‌ல் 104 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயங்களு‌டன் டா‌க்கா மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதி‌ல் பல பே‌ரி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக இரு‌ப்பதா‌ல் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இத‌னிடையே பிரதமர் ஷேக் ஹசீனா , சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்

செய்தித் துளிகள்........



அரசியற் கட்சியா ? ஊடக அமைப்பா??

“பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காமல் அவற்றுக்குத் தீர்வு காண்பதே புத்திபூர்வமான சமுகமொன்றின் வளர்ச்சிக்கான பணி’ என்று சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறான நிலையில் இன்று இலங்கைத் தமிழரின் அரசியல் முன்னெடுப்புகள் உள்ளன என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப் போனால், தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அப்படித்தான் உள்ளது.
போர் முடிந்ததற்குப் பின்னர் தொடருகின்ற அரசியற் போக்கு மிகவும் கவலைக்குரியதாகவும் சிங்கள அதிகாரவர்க்கத்துக்குத் தொடர்ந்து பலியாகும் இயல்பைக்

லெப்.கேணல் கிறேசி-கணபதிப்பிள்ளை கோபாலபிள்ளை இல.187, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது.



நாம் அணிவகுத்துள்ளோம்...



நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க


எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!



பினாங்கு துணை முதல்வர் வர கூடாது- தமிழக அரசு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.




மஹிந்தவுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை?

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.



தொழில் பயிற்சிகள் போதும் எங்களை விடுவியுங்கள்



புனர்வாழ்வு முகாம் என்றும், தொழில் பயிற்சி வழங்குதல் என்றும் கடந்த ஒருவருடமாக இழுத்தடிக்கப்பட்டு, பல்வேறு கட்டாய பணிகளிலும் துன்புறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கும் முன் நாள் போராளிகள், மற்றும் போராளிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக சிறைகளில் உள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கைப் போர்குற்ற விவகாரம் விவாதிக்கப்படமாட்டாது.



இலங்கை விடயம் தொடர்பில் தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோல்வியடையச் செய்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் நிலையில், அப்போது இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் தேவை என்று குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அது குறித்து பரிசீலனைக்கான முன்னெடுப்புகள் இப்போதைக்கு இல்லை என்று

‘வன்னி அகதி முகாம்களில் மக்கள் திண்டாட்டம் இந்திய நட்சத்திரங்களுடன் இங்கு கூத்தாட்டம்’



வன்னி அகதி முகாம்களில் மக்களை திண்டாடவிட்டு தலைநகரில் இந்திய நட்சத்திரங்களுடன் இலங்கை அரசாங்கத் தரப்பினர் கூத்தாடுகின்றனர். பொதுமக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் நடிப்பிற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கோ நாட்டின் தேசிய பிரச்சினைக்கோ தற்போதைய அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை வழங்க முடியாது. எரிபொருள்களின் மீதான வரியை குறைக்காது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியைக் குறைப்பதால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பயன்? எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது