வெள்ளி, 4 ஜூன், 2010

தொழில் பயிற்சிகள் போதும் எங்களை விடுவியுங்கள்



புனர்வாழ்வு முகாம் என்றும், தொழில் பயிற்சி வழங்குதல் என்றும் கடந்த ஒருவருடமாக இழுத்தடிக்கப்பட்டு, பல்வேறு கட்டாய பணிகளிலும் துன்புறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கும் முன் நாள் போராளிகள், மற்றும் போராளிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் தமக்கான பயிற்சிகள் போதும் தம்மை விடுதலை செய்யுங்கள் என அண்மையில் ஒரு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர். தமக்கு சில பயிற்சிகள் தரப்பட்டன. இந்த பயிற்சிகள் அடிப்படையாக வைத்துக்கொண்டு சில பணிகளையும் செய்விக்கப்பட்டோம். எடுத்துக்காட்டாக சிறைச்சாலை கொட்டில்கள் அமைப்பது, இராணுவ முகாம்களிற்கான கொட்டில் அமைப்பது போன்ற பணிகள்.
தற்போது ஒருவருடமாகிய நிலையில் களுத்துறை, வெலிகந்த பகுதிகளில் இருந்து நாம் பொலனறுவை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பயிற்சி சான்றிதழ்கள் தரப்பட்டன. சான்றிதழ் தரப்பட்டதும் நாம் விடுவிக்கப்படுவோம் என நினைத்தோம். ஆனால் இரண்டு மாதமாகியும் எம்மை விடவில்லை. இப்போ மீண்டும் வெலிகந்த களுத்துறைக்கு அனுப்ப போவதாக சொல்கின்றார்கள். ஆகையால் எம்மை விடுவிக்கபோகின்றார்கள் என்ற நம்பிக்கை இப்போ எமக்கு இல்லை.
எமக்கு பயிற்சிகள் போதும் எம்மை விடுவியுங்கள் என்று திருமணமாகி மனைவியையும், இரு குழந்தைகளையும் விட்டு தவிக்கும் அந்த முன் நாள் உறுப்பினர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக