வெள்ளி, 4 ஜூன், 2010

ஒப்புக்கு ஒற்றுமை என கூச்சலிடுவதை நிறுத்தி உண்மையான ஒற்றுமைக்கு வழி சமையுங்கள்!

நானும் நானும் என்றது போலவே தமிழினத்தின் சாபக்கேடமுள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் கடந்த ஒரு வருடமாய் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. தமிழீழ தேசம் என்ற நிழல் அரசு இழக்கப்பட்டதை பற்றிய கவலையை விட தமிழர்களின் அடுத்த தலைமை பற்றி கேள்விகளும், தலைமை ஏற்புக்களும் கடந்த மே மாதம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
.


ஒரு புறம் வட்டுக்கோட்டை தேர்தலும், மறுபுறம் சிறிலங்கா அரச தேர்தலும் பின் நாடுகடந்த அரசின் தேர்தலும், பின் பாராளுமன்ற தேர்தலும், அதன் பின் தமிழீழ தேசிய அவைக்கான தேர்தல், இன்னும் தமிழ் டையஸ்பராவின் தேர்தல் என்று புலத்திலும் நிலத்திலும் தமிழர்களின் காதுகளில் கேட்பது என்னவோ தேர்த்தல் பாட்டுத்தான்.


தமக்குள் ஒற்றுமையை வளர்க்க முடியாத இந்த தலைமைகளை நம்பி தமிழர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? தம்மால் சாதிக்க முடியும் என்று நம்புவன் யாரின் கதையையும் கேட்டுத் தேர்தலில் குதிக்கப்போவதில்லை.


சம்பந்தன் துரோகி, கூட்டமைப்பு சந்தர்ப்பவாதிகள் என்று சொல்வதும், கஜேந்திரன் வெளிநாட்டுத்தமிழர்களின் சொற்படி செய்கிறார் யாரோ குழுப்புகின்றனர் என்று சொல்லிக்கொண்டு இரு தேசியக்கட்சிகளும் சண்டையிட்டுக்கொண்டிருப்பதும் தமிழினத்தின் சாபக்கேடாகும்.


ஆயுத பலத்தால் பகைவன் மட்டுமல்ல, எம் கருங்காலிகளும் அடங்கியிருந்தன என்பது இப்போது தான் நன்றாகவே புலப்படுகின்றது.


நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கும் கனடாவில் பணம் சேர்ப்பதும், அவர்களை பற்றிய ஒப்பாரியை வானொலிகள் பாடுவதும் மிகவும் கீழ்த்தரமான இந்திய அரசியலை நினைவுபடுத்துகின்றது.


பெயரளவில் தலைவர் தமிழீழம் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களின் வார்த்தையில் உதிக்கும் "அண்ண" வருவார் என்ற சொல்லே மனதுக்குள் ஒன்றை வைத்து பேசுவதாய் இருக்கின்றது.


தலைவரின் தன்னிகரற்ற வழிநடத்தலின் கீழ் வளர்ந்த இவர்கள் எல்லோரும் தலைவரிடத்திலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது, படிக்க வேண்டியது நிறையவே உள்ளது.


காலத்தின் பெயராலும், ஈனப்பிறவிகளின் காட்டிக்கொடுப்பாலும் இந்தியாவின் கூட்டிக்கொடுப்பாலும் நாம் வீழ்ச்சி கண்டு நிற்க்கையில் ஒற்றுமை கூப்பாடுகளை போட்டபடி வேற்றுமையையும், குழும சிதைவுகளையும் உண்டு பண்ணுபவர்கள் உடனடியாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து, அவர்களது பதவிகளிலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.


சுயநலத்தை அறிப்படையாக கொண்டு, தமிழ் மக்களின் உழைப்பையும். அவர் தம் விடுதலையை உணர்வையும் தமது சொந்த தேவைகளுக்காய் பயன்ப்படுத்துபவர்கள் துரோகிகளாக மட்டுமே இருக்க முடியும்.


அனைதுலக செயலகங்கள், உலகத்தமிழர் அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள் என்று அனைத்தையும் தவறான பாதையில் வழிநடத்த முனைவதும் தமக்குஅடிபணிய மறுப்பவர்களை துரோகிகள் என்று முத்திரையிடுவதும் இத்தோடு முடிந்து போகட்டும்.


எம் இனம், தேசம் என்ற அக்கறையோடு, நமக்குள் இருக்கும் பிரிவினைகளை ஓரங்கட்டி இலங்கை என்ற தேசத்தின் பிரிவினைக்காய் பாடு பட்டு தமிழீழத்தை பிரித்தெடுக்க பாடுபடுவோம்.


இலங்கையிலிருந்து தமிழீழத்தை பிரித்தெடுக்கும் இலகுவான வேலையை விட தமிழர்களை ஒற்றுமையாக்கும் பாரிய கடினமான வேலையை தமிழ் புத்திஜீவிகள் செய்ய முன்வரவேண்டும்.


புலத்துக்கும் நிலத்துக்கும் இடையே வளரும் நீண்ட இடைவெளியை குறைப்பதும் இந்த புத்திஜீவிகளின் கைகளில் தான் உள்ளது.


சிந்திப்போம் செயற்ப்படுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக