வெள்ளி, 4 ஜூன், 2010

தாய் தமிழ்நாடு, தமிழீழம் ,உலக தமிழ் ,மொழியால் ஏற்படும் ஒற்றுமையின் விம்பம் ...........


நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு
"அடுத்துப் போகப்போவது யாரு!"


நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது"
சிங்களப் பேரினவாத பேய்கள்


உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.


உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது?


உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.


உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".


உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".


உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".


உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".


உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".


உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".


உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".


உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".


உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".


உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".


உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".


உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".


உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக