சனி, 24 ஜூலை, 2010

கறுப்புயூலை கறுப்பாகவே.....

எட்டி உதைக்கும் கால்தழுவி
தொழுது கிடந்த பொழுதுகளாகவே
ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம்.
காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி
ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே
எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே
நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர்.
ஒருதீவு ஒரேநாடு என்ற தேசியக்கனவில்
திளைத்திருந்தோம்.

நாடும் நடப்பும் ......புலிகளின் வெளிநாட்டு முகவர்களை பிடிக்க இலங்கை அரசு இன்டர்போலின் உதவியை நாடுகிறது ...

வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கும் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும் இன்டர் போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்கரும்புலி மேஜர் நித்தியா (செல்வராசா தயாளினி )யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் கப்பல் தொடரணி மீதான கரும்புலித் தாக்குதல்.

சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பொலிஸ் பதிவுச் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த தகவல்கள்முரண்படுகின்றன- மனோ கணேசன்

"பொலிஸ் பேச்சாளர் ஜயகொடி வெள்ளவத்தையை தமிழர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வெள்ளவத்தையில் வசிப்பவர்களை பொலிஸில் பதிவுசெய்யும் நடைமுறை இருப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிவந்தனின் நடைபயணம் ஆரம்பித்தது..

கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்,
மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

அரசுசாரா(ngo) நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறும் அபாயம் ...!

வன்னிப் பகுதியில் தங்கி, சேவையாற்றும் சில சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேலும் இறுக்கியுள்ளதால், அவை அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போய் சேருமா இடம்பெயர்ந்த மக்களின் கைகளில் ...........

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்து , இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு

எதிரணியின் யோசனைகளை மஹிந்த ஏற்கின்றார்..!

அதிகரித்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க எதிரணியினை சர்வதேசத்திற்கு முன் நிறுத்தி மஹிந்த காய்களை நகர்த்த ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றார். இது குறித்த பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மஹிந்த பல யோசனைகளை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

இந்த மாதத்தில் ஏழாவது தமிழ் மாணவி தற்கொலை?!

மலையகம் புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. இது இந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஏழாவது தற்கொலையென அறிவிக்கப்பட்டுள்ளபோதும் தற்கொலைக்கான உண்மையான காரணங்கள் அல்லது கொலையா தற்கொலையா என்ற விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டதாக தெரியவில்லை.

குழந்தைகளையும் தாய்மார்களையும் விடுதலை செய்க ,,,

வெலிக்கடைச் சிறையில் சொல்லொணாத் துயரங்களுடன் இருந்துவரும் 50 பெண்களையும், அவர்களது குழந்தைகளையுமாவது உடனடியாக விடுதலை செய்யுமாறு அரிய நேந்திரன் எம்.பி மஹிந்தவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.