சனி, 24 ஜூலை, 2010

போய் சேருமா இடம்பெயர்ந்த மக்களின் கைகளில் ...........

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்து , இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு
சுயதொழிலுக்கான உதவியாக 25000 ரூபாய்களை வழங்கவென இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடமிருந்து 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.


இவ்யோசனை நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டதுடன் , இதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்ப்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த நிதியுதவிகளை கொண்டு, வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக குடும்பம் ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக