சனி, 24 ஜூலை, 2010

பொலிஸ் பதிவுச் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த தகவல்கள்முரண்படுகின்றன- மனோ கணேசன்

"பொலிஸ் பேச்சாளர் ஜயகொடி வெள்ளவத்தையை தமிழர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வெள்ளவத்தையில் வசிப்பவர்களை பொலிஸில் பதிவுசெய்யும் நடைமுறை இருப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.



இது பாரபட்சமான செயற்பாட்டுக்கான சுய விளக்கமாகும். ஏனெனில், தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.


நாம் கேள்வி எழுப்புவது பொலிஸாருக்குள்ள அதிகாரம் குறித்து அல்ல, மாறாக யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழர்கள் அனைவரையும் பதிவுசெய்யவும் அவர்களின் பிரத்தியேக விபரங்களைத் திரட்டவும் முயற்சிப்பதையே.


தமிழர்கள் மாத்திரமே பொலிஸில் பதிவுசெய்துகொள்ளவும் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர். இந்த பாரபட்சமான நடைமுறையால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் அவமதிப்பு மற்றம் மனக்கிலேசம் என்பனவற்றை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும்.


சட்டம் ஒழுங்களை அமுல்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு நாம் மக்களுக்கு ஆலோசனை கூறுகிறோம். ஆனால், யுத்தத்தின் பின்னரான காலத்தில் மனம்போனவாறான வகையில் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பதிவுசெய்துகொள்ளுமாறு உத்தரவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக