திங்கள், 3 மே, 2010

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு அரசுடன் பேசுவோம் - சம்பந்தன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து அந்தப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்முடன் அரசாங்கம் திறந்த மனதுடன் பேசினால்
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகள்....!!! நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர் கண்களிலே பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர் எங்களுடன் பேசிக்களித்தீர் போய்விட்டீர். தாயகத்தில் வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத் தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே! ஈரவிழியிங்கு எனக்கின்னும் காயவில்லை. ஊரறியோம் உங்கள் உறவறியோம் தந்தையிட்ட பேரறியோம் ஆனாலும் புகழறிந்து நிற்கின்றோம். நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு மாலையிட்டு நஞ்சணிந்தோம். நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம் தம்பியென்றும் அண்ணன் தங்கையென்றும் எங்களுக்கோர் வம்சவழி தோன்ற வாழ்ந்தோம். ஒன்றாகி வந்த பகை வீழ்த்த வரிசையிட்டுப் போனோமே. செங்குருதி பார்ந்து திசை சிவந்து எதிரிகளின் தங்கிடங்கள் யாவும் தணலிற் கருக்கிய பின் வென்ற களிப்பில் வீடு வந்தோம் அன்றிருந்து இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணவில்லை. கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய் சொல்லுகிறார் உங்கள் தேகம் தூங்காதே! மொட்டாவிழும் பூவினிலே முகம் தெரியும் கல்லறைக்குக் கிட்டவர உங்கள் கண் தெரியும் வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து எம்மை உயிர்ப்பிக்கும். இனிக் கூற்றெனவே வரும்பகையைக் குடிப்போம் வென்றிடுவோம்!

பத்திரிகையாளர் இதயச்சந்திரனுக்கு ஓர் திறந்த மடல் - தி-மழவராயன்

அன்புடன் தோழர் நவநீதனுக்கு இதுவரை காலமும் தங்களை இதயச்சந்திரன் என்றே அழைத்தேன் ஆனால் இனியும் அப்படி அழைப்பது அழகல்ல ஏனெனில் தென் தமிழிழத்தில் விளைந்த வீரத்தின் சிகரம் சீலனின் பெயரை ஒரு வேடதாரிக்கு, நரிக்கு, சந்தர்ப்பவாதிக்கு, ஏன் ஒரு பச்சோந்திக்கு இட்டு அழைப்பது வெட்கம் அவதூறு அவமானம் தேசத்துரோகம் ஆகவே ‘நவநீதா என்றே இனி அழைக்கிறேன். நவநீதா தாங்கள் தமிழ்த்தேசியத்தளத்தில் இருந்து எழுதுவதாக சொல்லிக்கொண்டால் மட்டும்

உதயமாகும் “நாடுகடந்த தமிழீழ அரசு”

இலங்கை அரசானது, தமிழ் மக்கள் சார்பாக 2009 மே வரை போராடிய இரணுவக்கட்டமைப்பினை இல்லாதொழித்துவிட்ட தலைக்கனத்தில் உலக ரீதியில் தனது காய்களை நகர்த்தி வருகின்றது. இதில் தன்னால் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை மூடி மறைக்க

மன ஆற்றலின் மன்னன் -கண்மணி

கடந்த ஏப்ரல் 15ந் தேதி தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு அடிப்படை இன அழிப்பின் அடையாளத்தை வரைந்து காட்டியது. “பேசப்படாத இனப்படுகொலை, இலங்கையில் போர் குற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இதில் இலங்கை நடத்திய மாந்த நேய அடக்குமுறைகளைக் குறித்தும், தமிழர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிலரின் சொற்கள் நமது மனங்களை இடியாய் உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜசேந்திர சச்சார் குறிப்பிடும்போது, தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவறுமானால், தமிழர்கள் வேறொரு பாதையை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.

நொடியில் பிறக்கும் தமிழீழம்

கண்ணீரின் கணம் மனதை அழுத்துகிறது. ஒரு விடியல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டது. ஒரு வசந்தம் வக்கிரகாரர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டது. ஒரு வரலாறு மீண்டும் தொடங்க இந்த நிகழ்வு காரணமாய் போனது. இயக்கங்களின் வரலாற்றில் இது ஒரு சோதனைக்காலம் தான். சோதனை காலம் மட்டும் அல்ல,

குடா நாட்டின் அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம்

குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்

கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள்

காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. அதை நம்பி நாம வந்தம் ஆனா யுத்தம் ஓஞ்சாப்புறகு கூட எங்ட வாழ்வு இப்பிடித்தான் சீரழியும் எண்டா

தற்பொழுது நாட்டின் எதிரி பிரபாகரன் அல்ல அரசாங்கமே!

தொழிலாளர் தினமான நேற்று கம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற மேதின மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்று கூடலில் கலந்து கெண்டு பேசிய லால் காந்தா, நாம் இந்த மே தின அணிவகுப்பை நடத்துகின்ற இந்த வேளையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. அரசாங்கம் ஒன்றும் நம் கண் முன் உள்ளது. தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்கள் நேரடியாக ராஜபக்சவினது அரசை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப்பொழுது மக்களின் எதிரி பிரபாகரன் அல்ல. இலங்கை அரசாங்கம் தான். உழைக்கும் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும்படி அரசை வலியுறுத்தும் போராட்டம் இந்த மே தினத்திலிருந்து துவக்கப்படும் என சோசலிஸ தொழிலாளர் சங்சத்தின் அமைப்பாளர் M.D. லால் காந்த தொழிலாளர்களின் மே தின அணிவகுப்பின் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

ஈழ அகதிகளை மீள அழைக்க சிறிலங்கா முயற்சிக்கிறதா?

இலங்கைத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் நாடு திரும்புவதற்கான ஏதுநிலை அதிகரித்திருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றவாறு அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வன்னிப் பகுதியினது நிலைமைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதையடுத்து போரின் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற இந்த மக்கள் மீளவும் தங்களது ஊர்களுக்குத் திரும்பும் நிலை தோன்றும் என அரசாங்கம் நம்புகிறதாம்.

அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபை எதிர்க்கட்சியும் யாழ் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் அமைப்புக்களும் குற்றஞ் சாட்டியுள்ளன. யாழ். பிரதான சாலையில் புத்தர் சிலையை நிறுவுவதற்கும் யாழ் பொது நூலக சிற்றுண்டிச் சாலையின் நிர்வாகத்தை தென்னிலங்கை சிங்களவிரடம் ஒப்படைப்பதற்கும் அவர் இணங்கியதாகவே இந்தக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் குடாநாட்டு சைவ கலாசார அமைப்புக்கள் எவ்வளவோ எதிர்ப்புத் தெரிவித்தபோதும், புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில், யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னன் சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த வளாகத்தினுள் நட்சத்திர விடுதி ஒன்றை நிறுவுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேயர் யோகேஸ்வரி பற்குணம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார். அதேவேளை, சிங்கள வர்த்தகர்கள் யாழ் குடாநாட்டில் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிராகவும் யாழ்ப்பாண வர்த்தக ஒன்றியம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

படைச்சிப்பாய் ஒருவர் தீமூட்டி தற்கொலை

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் அங்கவீனற்ற இராணுவச் சிப்பாயொருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதுளை, மடுல்சீமை என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நாட்டின் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய இந்த இராணுவ சிப்பாய், மோதல் சம்பவமொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், சிகிச்சையின் போது அவருடைய பாதிக்கப்பட்ட காலொன்று அகற்றப்பட்டது. அங்கவீனரான மேற்படி நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததையடுத்து, வீட்டிலேயே முடங்கி வாழ வேண்டி நிலையேற்றபட்டது. சம்பவ தினம் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீமூட்டிக் கொண்டார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயை அணைத்ததுடன் உடனடியாக அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். ஆனாலும் அவரது உயிர் ஏற்கனவே பிந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மடுல்சீமையைச் சேர்ந்த ஆர்.எம். சோமரட்ன என்ற 29 வயது நிரம்பிய அங்கவீன முற்ற இராணுவ சிப்பாயே மேற்படி மரணமானவராவார். இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.