சனி, 18 செப்டம்பர், 2010

திலீபனுடன் ஐந்தாம் நாள் 19-09-1987

வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கி விட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.

இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்வதன் காரணம் என்ன?...

புனர்வாழ்வு அழித்தல் எனும் பெயரில் பலசரணடைந்த முன்னாள் போராளிகள் பலரும் மேற்படி கல்அகழ்தல் வேலையில் ஈடுபடவைத்தது சிங்கள அரசு. மேற்படி சம்பவ  இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு  விதமாக கூறிக்கொள்கின்றனர் .மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறபட்ட எண்ணிக்கையை விட  அமைச்சர் முரளிதரன் ஒருபுறம்,, இராணுவ பேச்சாளர் மறுபுறம்,, பொலிஸ் பேச்சாளர் என மாறுபட்ட எண்ணிக்கைகளை கூறுவதன் காரணம் தான் என்ன?.
முன்னாள் போராளிகளின் இழப்பினை அரசு  மறைக்க முயல்வதாக பலரும் கருத்து தெரிவிக்கும் வேளை பல இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய பெருந்தொகை வெடிபொருட்கள் முன் பாதுகாப்பின்றி பொதுமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில் வைத்திருந்த காரணம் தான் என்ன? இழப்புகளை மறைக்க முற்படுதுவதன் நோக்கம் தான் என்ன?

சண்டிலிப்பாயில் பெண் கடத்தல் சம்பவம்

சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பகுதியில்  ஒரு வெள்ளை நிற வாகனம் வேகமாக சென்றதாகவும் அதற்குள் இருந்து ஒரு பெண் கத்தியபடி சென்றதாகவும் இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் அவ் வாகனத்தை துரத்தி சென்ற போது அது தெல்லிப்பளைப் பக்கமாக சென்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விட்டதாகவும் அப் பகுதி பொதுமக்களால் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து அப் பகுதியில் பொலிசாரும் படையினரும் சேர்ந்து வீதிச் சோதனை செய்ததாகவும் தெரியவருகின்றது. ஆனால் பொலிசார் தரப்பில் இவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுறு கொடவாக மாறியது கந்தரோடை

யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பெயர்களை சிங்களமயமாக்கி பெயர்ப்பலகைகளைத் தொங்க விட்டுள்ள இராணுவமும் அரசாங்கமும் அம்மக்கள் மீது கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் புரதான இடங்களில் ஒன்றான கந்தரோடை என்னும் வரலாற்று புகழ்மிக்க இடத்தினை தற்போது கதுறுகொடவாக மாற்றியுள்ளனர் பெரும்பான்மை இனத்தவர்கள்.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது.  இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.