வியாழன், 29 ஜூலை, 2010

சீனாவின் திட்டம் எத்தனை நாளைக்கு இலங்கையை காப்பாற்றும் ?

சீனா உலகில் சனத்தொகையில் கூடிய நாடு மட்டும் அல்ல, உலக குற்றவாளிகள் தொகையிலும் சீனாவே முதலிடம் 1.57 மில்லியன் கைதிகள் சீனாவில் உள்ளனர். எனவே இவர்களை பராமரிப்பதற்கு பதிலாக இவர்களை வெளி நாடுகளில் வேலைக்கமர்த்துவது சீனாவிற்கு பொருளாதார ரீதியகாவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் இலாபமாகும்.

தமிழின துரோகியா ?எதிரியா?நண்பனா ?காவலனா ?இந்த கே .பி

கொழும்பு இனவாத முன்னணி பத்திரிகையான த ஐலண்ட பத்திரிகைக்கு கே.பி. பதமனாதன் செவ்வி வழங்கியுள்ளார். இந்த செவ்வியில் மஹிந்த இராஜபக்‌ஷவை புகழ்ந்து தள்ளியுள்ளார் பத்மநாதன்.

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி!

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் ..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்.

சழூக சீர்கேடுகள் அரங்கேறும் இடமாக கிளிநொச்சி உருவாக்க படுகிறதா?

கிளிநொச்சி நகரிலிருந்து 02 மைல் தொலைவிலுள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்த வியாழன்று ஆண்டு- 05 ல் கல்வி கற்கும் பாடசாலை சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபடுதலிற்கான முயற்சியொன்று

வீழ்ந்தது வெட்கமல்ல, எழமுடியாமல் , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கத்துக்குரியது

தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. யாரிடம் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்க முடியும்? ஏதோ போகிற போக்கில் போகிறோம்’ என்று தன்பாட்டில் புலம்புவதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார் யாரோ ஒருவர். இது நடந்தது முறிகண்டியில். இந்த மாதிரிக் குழப்பங்களோடுதான்

இராணுவபெண்சிப்பாய் மீது போலீஸ் வல்லுறவு குறித்து விசாரணை ஆரம்பமாம் ...

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது.

முருகனா தமிழனா .....?

(இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.)கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார்.



லெப்.கேணல் ராதா( கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ்)

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.....!

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப்

மனித உரிமை மீறல் ,போர்குற்றம் ,இனப்படுகொலைக்கு நீதி அவசியம் ..

போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

அம்மனுக்கு வந்த சோதனை ....ஜனநாயகம் இதுவல்லவோ .

வாகரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட அம்மன் முகக் கலசம் நீதிமன்ற உத்தரவின் பேரில் கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம்10 இலட்சம் ரூபா சரீர பிணையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு!

மலேசியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்.ஜெயரூபன் மற்றும் டி.சிவஐங்கரன் ஆகிய இரண்டு பேர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கலை நிகழ்வு ,

தமிழர்தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கு உதவும் முகமாக பட்ச வொர்க் நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு யேர்மனியில் இரண்டாவது இடமாக ஜேர்மன் பெர்லின் நகரில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு நடைபெற்றது .இவ் நிகழ்வில்

மங்கள சமரவீரவை கொலை செய்ய தகவல் வழங்கியதற்காக இருவருக்கு சிறை

மஹிந்த அமைச்சரவையில் முன்னர் வெளிவிவகாராமைச்சராக இருந்தவரும் தற்போதைய மஹிந்தவின் எதிரியுமான மங்கள சமரவீர அவர்களை கொல்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு படைத்துறையினருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க இராணுவ உளவு பிரிவு வெளியிட்ட அறிக்கையால்,அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எங்களது உற்ற நண்பன் பாகிஸ்தான் என்று அன்று அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷும் இன்று அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமாவும் கூறியதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று என்பது, ஆஃப்கானிஸ்தான் போர் தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரக‌சிய ஆவணங்கள் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டன.

மாணவர்களின் போராட்டத்தினால் கோட்டைப் பகுதி ஸ்தம்பிதம்!வீதிகளும் மூடப்பட்டன!


ருகுணு  பல்கலைக்கழக மாணவனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தினால் கொழும்பு கோட்டைப் பகுதி ஸ்தம்பிதம் அடைந்தது.