வியாழன், 29 ஜூலை, 2010

சீனாவின் திட்டம் எத்தனை நாளைக்கு இலங்கையை காப்பாற்றும் ?

சீனா உலகில் சனத்தொகையில் கூடிய நாடு மட்டும் அல்ல, உலக குற்றவாளிகள் தொகையிலும் சீனாவே முதலிடம் 1.57 மில்லியன் கைதிகள் சீனாவில் உள்ளனர். எனவே இவர்களை பராமரிப்பதற்கு பதிலாக இவர்களை வெளி நாடுகளில் வேலைக்கமர்த்துவது சீனாவிற்கு பொருளாதார ரீதியகாவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் இலாபமாகும்.



முந்திய நூற்றாண்டுகளில் குற்றவாழிகளை கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதனை கேள்விப்பட்டிருக்கின்றோம். அயர்லாந்து குற்றவாழிகள் அவுஸ்ரேலியாவிற்கும் இந்திய குற்றவாழிகள் பக்கத்து நாடுகளுக்கும் இங்கிலாந்து கைதிகள் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கும் அனுப்பபட்டுள்ளனர். சண்டயிடும் படைகளாக அனுப்பபட்டும் உள்ளனர்.


அதேபோலதான் சீனாவும் அபிவிருத்தி என்ற போர்வையில் தனது கைதிகளை வெளி நாடுகளுக்கு அபிவிருத்தி எனும் போர்வையில் அனுப்பிக்கொண்டிருக்கின்றது.


உலக கைதிகள் தொகையில் முன்னணி வகிக்கும் சீனா கைதிகள் பிரச்சினைகளை சமாளிக்க அபிவிருத்தி என்ற இத்தைகைய தந்திரோபாயங்களை உபயோகிக்கின்றது.


ஆசியாவில் தனது கப்பல் போக்குவரத்து, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரல் ஆகிய திட்டங்களில் இத்தைகய கைதிகளை ஈடுபடுத்தல் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் இந்த கைதிகளில் மரண தண்டனை ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே வேலைசெய்யும் கைதிகள் சாகும் வரை வேலை சேய்யும் நிலையிலும் உள்ளனர். அவர்கள் என்ன செய்தாலும் எப்போ இறந்தாலும் சீன கம்பனிகள் கவலைப்படப்போவதில்லை.


இலங்கை, பாகிஸ்தான், காஸ்மீர், மாலைதீவு, சூடான், பொட்சுவானா,சாம்பியா, பர்மா, கானா ஆகிய நாடுகளில் ஈவிரக்கமற்ற முறையில் இந்த கைதிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இத்தைகய கைதிகளை கொண்டு செய்யப்படும் திட்டங்களுக்கு மாற்றீடாக அந்தந்த நாடுகளுக்கு தேவையான நிதிகள், ஆயுதங்கள், இராணுவ தளபாடங்கள் ஆகியவற்றை சீனா வழங்குகின்றது.


இலங்கை, மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு வரையறை அற்ற முறையில் ஆயுத , தளபாடங்களை வழங்கியுள்ளது மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் குறித்த நாடுகளின் மனித உரிமை மீறல்களையும் முன் நின்று காப்பாற்றி வருகின்றது.


ஆனால் சூடானில் அந்த நாட்டு அதிபர் ஒமர் ஹசன் அகமட் பசீர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட டாபூர் படுகொலைகளினையும் அதன் மீதான போர்குற்றத்தையும் சீனாவினால் நியாயப்படுத்த முடியவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதே போல இலங்கையிலும் சீனாவின் செல்வாக்கு போர்குற்றம் தொடர்பில் எடுபடாமல் போகுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் சூடானில் சீனாவின் திட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் இலங்கையில் முடிவடையவில்லை ஆகவே சீனாவும் தன்னால் இயன்றவரை தனது திட்டங்கள் முடியும் வரை இலங்கையினை காப்பாற்றும் என்றே கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக