வியாழன், 29 ஜூலை, 2010

இராணுவபெண்சிப்பாய் மீது போலீஸ் வல்லுறவு குறித்து விசாரணை ஆரம்பமாம் ...

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது.



இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், விசாரணைகள் இன்னும் நடைபெறுவதால் அது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கூற முடியாது எனவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ.ஏ.பி. மெதவல டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.


கடந்த மாதம் தனது காதலருடனான பிரச்சினை குறித்து புத்தல பொலிஸில் புகாரிடச் சென்றபோது அங்கிருந்த மூன்று பொலிஸார் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி பெண் புகாரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக