வியாழன், 29 ஜூலை, 2010

மங்கள சமரவீரவை கொலை செய்ய தகவல் வழங்கியதற்காக இருவருக்கு சிறை

மஹிந்த அமைச்சரவையில் முன்னர் வெளிவிவகாராமைச்சராக இருந்தவரும் தற்போதைய மஹிந்தவின் எதிரியுமான மங்கள சமரவீர அவர்களை கொல்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு படைத்துறையினருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.



மல்லி என அழைக்கப்பட்ட ஜி.ஜி.ரணவீர, சம்பத் துசார ஆகியோருக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மங்கள சமரவீரவை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகளுக்கு இவர்கள் இருவரும் தகவல்களை வழங்கியதனை ஒப்புக்கொண்டுள்ளதாக நேற்று நீதிமன்றம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக