வியாழன், 29 ஜூலை, 2010

சழூக சீர்கேடுகள் அரங்கேறும் இடமாக கிளிநொச்சி உருவாக்க படுகிறதா?

கிளிநொச்சி நகரிலிருந்து 02 மைல் தொலைவிலுள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்த வியாழன்று ஆண்டு- 05 ல் கல்வி கற்கும் பாடசாலை சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபடுதலிற்கான முயற்சியொன்று
பொதுமகனொருவரின் விழிப்புணர்வால் தடுக்கபட்டு சிறுமி காப்பாற்றபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டார்.
சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில் பாடசாலை விட்டு வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த இளைஞயொருவர் தனது துவிச்சக்கர வண்டியில் வீட்டிற்க்கு கூட்டி சென்று விடுவதாக கூறிய போது அவ் இளைஞருடன் சிறுமி சென்றுள்ளார்.
ஆள்கள் அதிகம் இல்லாத ஒழுங்கையொன்றில் இடிந்த கட்டிடம் ஒன்றிற்க்குள் கூட்டி செல்லபட்ட சிறுமியை வன்புணர்வுக்கு முயற்சித்த சமயம் சிறுமி அவலக்குரல் எழுப்பியுள்ளது. கட்டிடத்திற்கு அருகில் வேலைசெய்து கொண்டிருந்ததவர் சிறுமியின் கூக்குரலை அவதானித்து அங்கு சென்ற போது இளைஞர் கையும்,களவுமாக பிடிபட்டுள்ளார்..
மேற்படி குற்றச்செயலை புரிந்த இளைஞர் கிளிநொச்சியில் இயங்கும் சிங்கள வர்த்தக நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியான தென்பகுதி தமிழ் இளைஞர் என உறுதி படுத்தியவர்கள் அவரை கிளிநொச்சி பொலிஸ் அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளன்ர்.விடுதலைப் புலிகள் இருந்தபோது எவளவு சுதந்திரமாகவும்.பாதுகாப்புடனும் இருந்தோம் 
இப்போ எம்மை பாதுகாக்க ஒருவரும் இல்லைஎன வேறொரு
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்
(அவருக்கு நடந்த சம்பவத்தை அவர்கூறினார் ,ஆனால் அதனை பிரசுரிக்க 
வேண்டாம் என்ற படியால் பிரசுரிக்கவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக