வியாழன், 29 ஜூலை, 2010

தமிழின துரோகியா ?எதிரியா?நண்பனா ?காவலனா ?இந்த கே .பி

கொழும்பு இனவாத முன்னணி பத்திரிகையான த ஐலண்ட பத்திரிகைக்கு கே.பி. பதமனாதன் செவ்வி வழங்கியுள்ளார். இந்த செவ்வியில் மஹிந்த இராஜபக்‌ஷவை புகழ்ந்து தள்ளியுள்ளார் பத்மநாதன்.



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் நேர்மையாக செயற்படுகின்றார் எனவும் சமூக இணக்கப்பாட்டினை மேற்கொள்வதில் , வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார் என்றும் கூறினார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் தான் எதிர்பார்ப்பதனை விட நேர்மையாக ஈடுபடுகிறார். எனவும் கூறியுள்ளார்.


போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் கூட ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியற் தலைமைத்துவம் இல்லாமல் இவையெதுவும் சாத்தியமாகியிருக்காது. எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக