வியாழன், 14 அக்டோபர், 2010

போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கான வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் 15/10/ 2010 காலை நடைபெற உள்ளது  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்?. புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்த இவர்கள் கட்டம் கட்டமாக இவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த நாலாயிரத்து ஐந்நூறு பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு புறக்கணிப்பு

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும்இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் இண்டர் நேஷனல் கிறைசிஸ் குரூப் ஆகியவை நிராகரித்துள்ளன. இந்த நிலையிலேயே இந்த ஆணைக்குழுவால் சாட்சியமளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்த மூன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மறுத்திருக்கின்றன. இந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து இத்தகைய சர்வதேச அமைப்புக்கள் பல தடவைகள் முன்னரேயே விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கின்ற போதிலும், அந்த விசாரணையை அவை நிராகரித்திருப்பது உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் தற்போது ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.