வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நினைவு நாள் வீரவணக்கங்கள்.

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மஹிந்தவை அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி விமானம்

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகை யிலான பதாகையொன்று  கண்ணில் பட்டது. இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. 'கோமா' வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது.