சனி, 15 மே, 2010

தேசிய தலைவர் வென்றுவிட்டார்


ஒரு மாபெரும் இன அழிப்பின் அடையாளத்தை திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய மேலாதிக்க ஆற்றல் தமது கொடுங்கரங்களை படரவிட்ட கேவலம் நிகழ்த்தப்பட்டது வரலாற்றில் எப்போதும் அழிக்க முடியாத அவமான சின்னமாக நிலைத்து நிற்கும் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு நிச்சயமாக இடமிருக்க வாய்ப்பில்லை. தமிழர்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்த காலம். மே 10ஆம் தேதி தொடங்கியே 19ஆம் தேதி வரை ஒவ்வொரு வினாடியும் தமிழர்களின் வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லாத ஒரு கோர நிலை அங்கே நீடித்துக் கொண்டிருந்தது
மே பதினெட்டில் நாம் புதிய பீனிக்சுகள்… எம்மவர் படைப்புக்கள் வலிசுமந்த மாதம்.. பலிபீடத்தின் பன்னிரண்டு மாதங்கள்.. சுண்ணம் இடிக்காமல் எண்ணிக் கணக்கிட முடியாமல் ஒரு இனம் சிதறிய ஒரு வருடம் ஒரு இனம்சாக ஏதும் முடியாமல் இருந்த உலகத்தின் கையில் இருந்த இருப...த்தியோராம் நூற்றாண்டு.. ஒபாமா-ஒரு கறுப்பின வம்சத்தின் வேர் அபாயச் சங்கை அலச முடியாமல் இருந்த அவல நாட்கள்… இராசபக்சாவை இராட்சத ராஜன் என இப்பொழுது சொல்லி என்னபலன்.. மரங்களில் சதைகள் தொங்கிய அந்த மரண காலத்தில் தெருக்களில் இலட்சம் தமிழர் இடித்தார்களே.. புலம் புரண்டதே.. ஒரு இனம் புகையாய்க் கருகி, பூகோளத்தின் மறுமுனைக்குப் பிணநாற்றம் கொடுத்தபோதும் மனமாற்றம் இல்லாமல் எத்தனை மசக்கை நாடுகள்..? பரந்த உலகு விரியாமல் போனபோது- ஒரு பசேல் பூமிக்குப் பிசாசு அரசாட்சி செய்தபோது… அயினாகூட அதிகாரம் இல்லாத ஒரு அம்மணம்.. இந்தியா.. வரலாறு வரலாறாக இருக்கப்போகும் ஈழத்தின் இனச்சாபம்.. இத்தாலி இருந்து வந்தவளால். இலட்சம் தாலிகள் அறுக்கப்பட்டன.. ஏழாயிரம் தமிழனைக் கொன்ற- என் உறவுகளைக் கொன்ற- ஈழக் குருதிகொண்டு வரும் இந்தியப் படைக்கு வரவேற்பளிப்பவன் தமிழனா.. என்ற கருணாநிதிபோய்.. பிரபாகரனைச் சாகடிக்கவென்று சகுனியாகிய கருணாநிதியை வரலாறு வரித்துக் கொண்டிருக்கிறது.. நெஞ்சில் இடித்த இடி இன்னமும் நினைவிழந்து போக முடியாததாய் எங்கள் நிலம்.. வஞ்சம், பொறாமை, சூழ்ச்சி எல்லாம் வலக்கரமாய்க் கூடி எங்கள் பஞ்சமே இல்லாத பசுஞ்சோலையைப் பற்றி எரியவைத்த பழி..என்றென்றும் அற்றுப் பொடியாக முடியாத அவலம்.. பிஞ்சு.. குஞ்சு.. நெஞ்சு வெடிக்க எரிந்த அந்த நிணம்.. எரிவாயு.. எரிகுண்டு.. கொத்துக் குண்டு.. கொலைக்குண்டு.. விசுக்கிய கொடியவர்… வெள்ளைக் கொடியோடு வரவைத்துக் குள்ளமாய்க் கொலைசெய்த கொரூரம்.. எல்லாமாக.. போர்க்குற்றம் ஒன்றுக்காக… சிறீலங்கா-இந்தியா என்ற கூட்டுப் பிசாசுகளைக் கீறி வைப்போம்.. ஈழ இரத்தத்தில் கைநனைத்த இராட்சதர்கள் என்றென்றும் சரித்திரத்தில் எழுதி வைப்போம்.. அவலம் பற்றிய நாட்கள்.. முடியும் என்று எண்ணவேண்டாம்.. சிதறிய சதையும் பதறிய உயிரும்.. பாடும் அறம் பற்றிப்பிடிக்கும்..! மே பதினெட்டு என்ற எங்கள் இன்றைய நரகாசுரன் நாளில்.. புதைகுழியில் இருந்து எங்கள் பீனிக்ஸ்சுகள் பிறந்து வரட்டும்..! மே பதினெட்டு விழுந்த தினம் அல்ல..நாம் எழுந்த தினம்..!

எல்லாத் தமிழ்க் கப்பல்களும் ஓடிச்செல்ல அரசியல் என்ற சமுத்திரத்தில் போதிய இடம் இருக்கிறது..


வாழ்க்கை ஒரு போர்க்களம்.. களமிறங்கிவிட்டால் எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் எதிர்ப்புக் கணைகள் சீறிப்பாய்ந்து வரும்.. அந்தப் பெரும் போர்க்களத்தை ஒரேயொரு அம்பை மட்டும் வைத்துக் கொண்டு எதிர் கொள்ளக் கூடாது. பாரதக்கதையில் நாகாஸ்த்திரத்தை ஒரேயொரு தடவை மட்டுமே எய்வேன் என்று வாக்குக்கொடுத்துவிட்டு, அதையே நம்பி போர்க்களம் வருகிறான் கர்ணன். அவனுடைய இலக்கு குறி தவறிவிட போரின் வெற்றி திசை மாறுகிறது.. கர்ணன் தேர்க்காலில் சிக்குண்டு மரணிக்கிறான்.

வித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்களை மறந்தோம்; மொத்த ஈழத்தையுமே மறந்தோம்....................

ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது. மூன்று லட்சம் மக்களின் உயிர்களோடு விளையாடியது இந்த உலகம்.

வைகாசி வந்தாலே களைகட்டும் வைபவங்கள் மகிழ்ச்சி தரும் சேதிகள் இவைகளே தமிழன் நிகழ்வுகள் .......... இத்தனையும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்தவைகள் வரலாறாய் மாறிநிற்கும் நிஜங்கள் ................. மேலே சொல்லப்பட்டவை இப்ப நினைத்தாலும் மனசு முழுக்க இறைக்கைகள் கட்டி உள்ளூர பறப்பதுபோல் ஒரு சுகமான மீட்டல்.............. இத்தனைக்கும் நடுவே மீட்ட முடியாத சோகங்கள் மட்டுமே சுமந்தபடி அவலங்கள் ஒன்றே இப்போது மீதமாக எங்கள் உறவுகள் ............... கலைந்துபோன மேகக்கூட்டம் அலைந்து திரிவதுபோல தொடரும் அகதிப்பயணம் ஒரு முகாம் விட்டு இன்னுமொரு முகாம் தேடி.............. உதிர்ந்துபோன உறவுகளின் வருகைக்காக ஒவ்வொரு படலையிலும் நம்பிக்கை மாறாமல் காய்ந்துபோன விழிகளுடன் நம் சொந்தங்கள் .............. கனத்த கவலைகளை உரத்தகுரலில் இன்னும்தான் கத்தித்தீர்க்க முடியாமல் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள் ............. இந்த வைகாசி மாதம் தமிழன் மறந்தால் இனிமேலும் எழுதுவதிலோ பேசுவதிலோ எந்தவொரு பயனுமில்லை................ ஆறின கஞ்சி பழங்கஞ்சி அதுபோலவே ஆகிநிற்குது தமிழர்களின் அனைத்துத்தேவைகளும் அவர்கள் அபிலாசைகளும் .................. மேடை போட்டு பேசியவர்கள் கிடைத்த வெற்றிகளோடு தடுமாறி தங்கள் நிலைகளை தக்கவைக்க தடம் புரண்டு தயாராகிறார்கள் ................ அள்ளிக்கொடுத்தும் அனைவரையும் அரவணைத்த சனமோ அவலமும் ரணமுமாக சிரிக்க மறந்த -வெறும் மனித சிலைகளாக மாறி நிற்கிறார்கள்.............. இழந்தவைதான் வேண்டாம் இருப்பதையாவது காப்பாத்த இவர்களுக்கு யாரிருக்கிறார்கள் இதயம் உணர்ந்து உதவுவதற்கு....................

அவசரகாலச்சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியை உலகின் எந்தவொரு நாடும் ஜனநாயக நாடாகக் கருதுவதில்லை.

ஏழாவது நாடாளுமன்றம் முதலாவதாக விவாதித்து நிறைவேற்றிய தீர்மானம் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரம் தான். அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கன்னி உரை நிகழ்த்திய நாமல் ராஜபக்ஷ அவசரகாலச்சட்டத்துக்குத் தன்னைவிடவும் வயது அதிகம் என்று கூறியிருந்தார். ஆனால் அதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால் நாடு சுதந்திரமடைந்த பின்னான 62 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவசரகாலச்சட்டத்தின் கீழேயே ஆட்சி செய்யப்பட்டுள்ளது என்பதுதான்

மூத்த கட்டளை தளபதி சொர்ணம் (ஜோசப் அன்ரனிதாஸ்) 1ம் ஆண்டு வீரவணக்க நினைவஞ்சலி


லெப்டினன்ட் கேணல் நவம் - டடி-செல்லப்பெருமாள் அருமைராசா

இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின் மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய்.

உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை": பேராசிரியர் அடேல் பார்க்கர்

"விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான,
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ... குண்டுகளும் இனி விழாது இரத்தமும் இனி ஓடாது நிம்மதியாய் நீயுறங்க தாயின் மடியிங்குண்டு கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ... கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ... யுத்தமும் இனியில்லை சத்தமும் இனியில்லை நித்தமும் நீயுறங்க அன்னைமடி இங்குண்டு கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ... கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ... கெதியா நீ உறங்கிவிட்டால் அம்மா நானும் உறங்கிடலாம் விடிய முன்ன எழும்பி நானும் 'மல' வரிசையில் நிண்டிடணும்

விடிய போகும் ஈழத்திற்காக காத்திருப்போம்


ஈழத்திற்காக இந்தியாவிலிருந்து ஒரு குரல் இனிய ஈழம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, புலம்பெயர் தமிழ் உறவுகளே , காலத்தின் கட்டாயமும் நேரத்தின் நெருக்கடியுமே இன்று தமிழ் இனத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியுருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை, தேசிய தலைவரின் நோக்கமும் செயலும் என்றுமே தோற்றதுமில்லை தோற்க போவதுமில்லை, இன்று நமது உறவுகள் எதிர் எதிர் அறிக்கைகளை விடுத்து அறிக்கை வீரர்களாக தான் காட்சி அளிக்கிறோம் , இது வேதனையிலும் வேதனையானது , மாவீரர்களின் வீரத்தை விலை பேசமுடியும்மா? நம் யாவராலும் செய்ய முடியா தியாகத்தை செய்து இன்று தமிழரின் எண்ணங்களில் வாழும் மாசற்ற அவர்களின் தியாகத்தை மறந்து செயலற்று தமிழன் ஆகிவிடுவானோ என்று நெஞ்சம் பதைக்கிறது,

தாய்க்கு நிகர் தலைவன்..!!!


நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்து தரவேண்டும்? என்று சொன்னார். போராளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து துப்பரவு செய்ய ஆரம்பித்தனர். தலைவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தார். நேரம் பி.ப 2 மணி. தலைவர் சந்திப்புக்களை முடித்து விட்டு ஆயுதங்கள் துப்பரவாக்கும் பகுதிக்கு வந்தார். "பெடியள் சாப்பிட்டியளா?" என்று கேட்டார். "இல்லை அண்ணை வேலை முடியுது ஒரேயடியா முடிச்சுப்போட்டுச் சாப்பிடுவம்" என்று போராளிகள் ஒரு மித்துச் சொன்னார்கள். சரி, என மௌனமொழி பேசியவாறே தனது வீட்டுக்குச் சென்றார். சிறிய பெட்டியிற் பேரீச்சம்பழம் எடுத்து வந்தார், போராளிகளின் கைகள் அழுக்கடைந்த நிலையில் இருந்ததை அவதானித்துவிட்டுத் தானே போராளி ஒவ்வொருவருக்கும் பேரீச்சம்பழத்தை ஊட்டிவிட்டார். பின் மாறி மாறி எல்லோருடைய வாய்களையும் பார்த்தபடி சாப்பிட்டு முடிந்தவர்களுக்கு ஊட்டி விட்டார். இவ்விடத்திலிருந்த போராளியருவர் இப்படிச் சொன்னான். "என் தாய்க்கு நிகர் இல்லை என்றிருந்தேன். அண்ணன் வாயில் வைத்த பேரீச்சம்பழம், என் நினைப்பைப் பொய்யாக்கிப் போனது! தமிழுக்காக என் உயிரைக் கொடுத்தாலும்,இக்கடனை, அன்புக்கடனை, என்னால் அடைக்க முடியாது"என ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி தமிழருக்கோ மே............


கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. 1983-ஆம் ஆண்டு ஜூலை 23 தொடக்கம் 30 வரை நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில்

உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா?


முள்ளிவாய்க்கால் மண் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை மட்டும் விழுங்கவில்லை. தமிழரின் ஆயுதபலம்- அரசியல்பலம்- இராஜதந்திரம் என்று அடிப்படைப் பலங்கள் அத்தனையையும் அங்கு தொலைத்து விட்டே வந்தோம். தமிழ்மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு மூன்று தசாப்த வரலாறு இருந்தது. ஓரிரண்டு பேரெனத் தொடங்கிய ஆயுதப் போராட்டம்-

வீரர் இறப்பிலும் பெறுவர்.................

வில்லுக்கு விஜயன் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட மகா மேதையான அர்ச்;சுனனையே வெல்லுமளவிற்கு வில் வித்தையில் வல்லவனாக வருகிறான் ஏகலைவன் என்ற வேடன். மண்ணால் துரோணரின் சிலையைச் செய்து, அதையே குருவாக ஏற்று பக்தியுடன் சகல வித்தைகளையும் அவன் கற்றுக் கொண்டான். குருவாகிய துரோணர் வித்தையைக் கற்றுக் கொடுக்காவிட்டாலும், அவரே நேரில் வந்து கட்டைவிரலைத் தானமாகத் தரும்படி கேட்டதும், அதை அரிந்து கொடுத்தான் வேடனான ஏகலைவன். குருவின் மீதான மதிப்பிற்கும் பக்திக்கும் மேல் வித்தையோ வெற்றியோ பெரிதல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய உன்னதத்தின் உன்னதமான பண்பின் சிகரமே அந்தப் படிப்பறியா வேடன். அதுபோல…