சனி, 15 மே, 2010

மே பதினெட்டில் நாம் புதிய பீனிக்சுகள்… எம்மவர் படைப்புக்கள் வலிசுமந்த மாதம்.. பலிபீடத்தின் பன்னிரண்டு மாதங்கள்.. சுண்ணம் இடிக்காமல் எண்ணிக் கணக்கிட முடியாமல் ஒரு இனம் சிதறிய ஒரு வருடம் ஒரு இனம்சாக ஏதும் முடியாமல் இருந்த உலகத்தின் கையில் இருந்த இருப...த்தியோராம் நூற்றாண்டு.. ஒபாமா-ஒரு கறுப்பின வம்சத்தின் வேர் அபாயச் சங்கை அலச முடியாமல் இருந்த அவல நாட்கள்… இராசபக்சாவை இராட்சத ராஜன் என இப்பொழுது சொல்லி என்னபலன்.. மரங்களில் சதைகள் தொங்கிய அந்த மரண காலத்தில் தெருக்களில் இலட்சம் தமிழர் இடித்தார்களே.. புலம் புரண்டதே.. ஒரு இனம் புகையாய்க் கருகி, பூகோளத்தின் மறுமுனைக்குப் பிணநாற்றம் கொடுத்தபோதும் மனமாற்றம் இல்லாமல் எத்தனை மசக்கை நாடுகள்..? பரந்த உலகு விரியாமல் போனபோது- ஒரு பசேல் பூமிக்குப் பிசாசு அரசாட்சி செய்தபோது… அயினாகூட அதிகாரம் இல்லாத ஒரு அம்மணம்.. இந்தியா.. வரலாறு வரலாறாக இருக்கப்போகும் ஈழத்தின் இனச்சாபம்.. இத்தாலி இருந்து வந்தவளால். இலட்சம் தாலிகள் அறுக்கப்பட்டன.. ஏழாயிரம் தமிழனைக் கொன்ற- என் உறவுகளைக் கொன்ற- ஈழக் குருதிகொண்டு வரும் இந்தியப் படைக்கு வரவேற்பளிப்பவன் தமிழனா.. என்ற கருணாநிதிபோய்.. பிரபாகரனைச் சாகடிக்கவென்று சகுனியாகிய கருணாநிதியை வரலாறு வரித்துக் கொண்டிருக்கிறது.. நெஞ்சில் இடித்த இடி இன்னமும் நினைவிழந்து போக முடியாததாய் எங்கள் நிலம்.. வஞ்சம், பொறாமை, சூழ்ச்சி எல்லாம் வலக்கரமாய்க் கூடி எங்கள் பஞ்சமே இல்லாத பசுஞ்சோலையைப் பற்றி எரியவைத்த பழி..என்றென்றும் அற்றுப் பொடியாக முடியாத அவலம்.. பிஞ்சு.. குஞ்சு.. நெஞ்சு வெடிக்க எரிந்த அந்த நிணம்.. எரிவாயு.. எரிகுண்டு.. கொத்துக் குண்டு.. கொலைக்குண்டு.. விசுக்கிய கொடியவர்… வெள்ளைக் கொடியோடு வரவைத்துக் குள்ளமாய்க் கொலைசெய்த கொரூரம்.. எல்லாமாக.. போர்க்குற்றம் ஒன்றுக்காக… சிறீலங்கா-இந்தியா என்ற கூட்டுப் பிசாசுகளைக் கீறி வைப்போம்.. ஈழ இரத்தத்தில் கைநனைத்த இராட்சதர்கள் என்றென்றும் சரித்திரத்தில் எழுதி வைப்போம்.. அவலம் பற்றிய நாட்கள்.. முடியும் என்று எண்ணவேண்டாம்.. சிதறிய சதையும் பதறிய உயிரும்.. பாடும் அறம் பற்றிப்பிடிக்கும்..! மே பதினெட்டு என்ற எங்கள் இன்றைய நரகாசுரன் நாளில்.. புதைகுழியில் இருந்து எங்கள் பீனிக்ஸ்சுகள் பிறந்து வரட்டும்..! மே பதினெட்டு விழுந்த தினம் அல்ல..நாம் எழுந்த தினம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக