திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பொன்னகருக்குள் நுழைந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்

பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக தங்கள் காணிகளுக்கு நுழைந்த பொழுது அவர்கள் தடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்லவிடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்குமாகாணசபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ள மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர்.


இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு.....

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

"உயரிய சிந்தனை" இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது?

வடக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடனும் இன்னும் பல சலுகைகளுடனும் தென்னிலங்கையிலுள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அந்த அப்பாவிகளைத் தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் சில போலி தொழில் தருநர்களும் தொழில் தரகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன

விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில்.....

தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனகஜயசேகர பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள்

இன்னமும் 2ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிகள் வன்னிப் பகுதியில் அகற்றப்படவேண்டியுள்ளன. மேஜர் ஜெனரல் உதய வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. 2ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் புதைந்துள்ள 3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள் இன்னும் அகற்றப்படாத நிலையில் வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. இதுவரை 1,800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. புதைக்கப்பட்டு அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ள 3 லட்சத்து 500 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கப்படவேண்டியுள்ளன

ஐந்நூறுபோராளிகள் ஒப்படைக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மேலும் ஐந்நூறுபோராளிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம்ஒப்படைக்கப்படவுள்ளனர்.