திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பொன்னகருக்குள் நுழைந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்

பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக தங்கள் காணிகளுக்கு நுழைந்த பொழுது அவர்கள் தடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்லவிடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்குமாகாணசபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ள மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர்.


குறித்தமக்கள் இனியும் காத்திருக்க முடியாது என்றபடி தமது காணிகளுக்குச் சென்று குடியேறப் போகிறோம் என காணிகளுக்கு நுழைந்தனர். காணிகளை துப்புரவு செய்துகொண்டிருந்தவேளை அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவலாளிகள் படைத்தரப்புக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் காணியிலிருந்து பலவந்தமாக வெளி யேற்றப்பட்டார்கள். தமது சொந்தக்காணிகளில் தம்மைக் குடியிருத்துமாறு அரச அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் தமது அவலம் குறித்து யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்த மக்கள் தமது சொந்தக்காணிகளில் தம்மை குடியமர்த்தும் படி வடக்குமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திர சிறியிடமும் மனுக் கையளித்ததாக தெரிவித்தார்கள். மழை ஆரம்பித்துள்ள தருணத்தில் கூடாரங்களில் வாழ முடியாத நிலைமை காணப் படுவதாகவும் கூடாரங்களுக்குள் பாம்புகள் முதலிய விசஜந்துக்கள் வருவதால் குழந்தைகளை வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாக குறிப்பிட்டார்கள். குறிப்பிட்ட மக்கள் தனது காணிகளில் தமக்கு புலம் பெயர்ந்த உறவு ஒருவரினால் கட்டித்தரப்பட்ட நிரந்தர சீமென்ட் வீடுகள் கூரையற்ற நிலையில் உள்ளது. அதன் மேல் தரப்பாலைப் போட்டு இருக்கப் போகிறோம் என .தெரிவித்தார்கள். தமது காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி தாம் சொந்த இடத்தில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரிடமும் கோரிக் கைவிடுத்துள்ளனர். இந்தக் காணிகள் துப்புர வாக்கிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக