சனி, 6 பிப்ரவரி, 2010

புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும்

ஆம் வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது. மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின் மௌனித்திரு. தவறுகள் நடந்தால் அது அப்படித்தான் எனச் சொல், தவறுகளைச் சுட்டிக் காட்டாதே. ஊழல் பற்றி, பெற்றோல் விலையேற்றம் பற்றி, மின்சாரம்பற்றி, எரிவாயுப் பற்றாக்குறைபற்றி, தண்ணீர்பற்றி பொருளாதார நெருக்கடிபற்றி எதைப்பற்றியும் பேசாதே. பேசினால் நிச்சயமாக நீ புலியாகத்தான் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும். ஏறிகணைகள் வீசினால், விமானத் தாக்குதல் நடத்தினால் குண்டு மழை பொழிந்தால் அவற்றை ஏற்றுக் கொள். அல்லது பேசாதிரு. ஏனெனில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர். புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானங்கள் குண்டுகளைப் போடும். ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள் கிளஸ்ரர் குண்டுகள் எல்லாம் புலிகளின் இலக்குகளையும் புலிகளையும் மட்டுமே தாக்கும். அவை மக்கள் குடியிருப்புக்களை, பொதுக் கட்டடங்களை, வைத்தியசாலைகளை, பாடசாலைகளை, ஆலயங்களை ஏன் பொதுமக்களை, சிறார்களைத் ஒருபோதும் தாக்கப் போவதில்லை. அவ்வாறு பொதுமக்கள் குடியிருப்பில் தாக்குதல்கள் நிகழ்ந்தால் அங்கே நிச்சயமாக பொதுமக்கள் புலிகளாகியிருப்பார்கள். குழந்தைகள் மீது விமானமோ ஆட்ளறிகளோ பல்குளல் பீரங்கியோ குண்டு வீசியிருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தைகள் குழந்தைப் புலிகளாகத் தான் இருப்பார்கள். ஆலயங்கள் மீது குண்டுகள் வீசியிருந்தால் கடவுள் புலிகளை ஆதரித்திருப்பார். இல்லாவிடின் கடவுள் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பார். வைத்தியசாலைகள் என்ன வைத்தியசாலைகள் அவையும் புலிகளுக்கு சிகிச்சை அளித்தவைதானே அவையும் அழிக்கப்படவேண்டியவையே. ஆம் பாடசாலைகள் மட்டும் விதிவிலக்கா வன்னியில் உள்ள இந்தப் புலிகள் பாடசாலைகளில் படித்தவர்கள் தானே, அதனால் அவையும் பயங்கரவாதத்தை ஆதரித்தவை தானே, அவற்றின் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட வேண்டும் அவையும் அழிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சகஜமானவையே. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏன் எதற்கு எப்படி என்று கேளாதீர்கள். அப்படிக் கேட்பதானால் புலிகளையும் கேளுங்கள். புலிகளும் மக்களைக் கொன்றார்கள். புத்திஜீவிகளைக் கொன்றார்கள். ஆலயங்களைத் தாக்கினார்கள். தெற்கில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்கினார்கள். மாற்று இயக்கங்களை தடைசெய்தார்கள். ஆட்களைக் கடத்தினார்கள், காணாமல் போகச் செய்தார்கள், ஜனநாயகத்தை மறுத்தார்கள். இப்படி எல்லாவற்றையும் செய்தார்கள் அவர்களையும் கேளுங்கள். அப்படிக் கேட்காவிட்டால் நிச்சயமாக நீங்களும் புலிகளே. நீங்களும் பயங்கரவாதிகளே. அதனால் உங்களைக் கடத்துவோம். காணாமல் போகச் செய்வோம். சுடுவோம். எவருக்கும் தெரியாமல் மின்சாரம் பாச்சி சாம்பராக்குவோம். ஏனென்றால் நீங்கள் புலிகள். இல்லாவிடின் புலிகளை ஆதரித்தவர்கள். இல்லாவிடின் புலிகளின் உறவினர்கள். அதுவும் இல்லாவிடின் புலிகளோடு படித்திருப்பீர்கள். இல்லாவிடின் புலிகளுக்கு தண்ணீர் சாப்பாடு கொடுத்திருப்பீர்கள். அல்லது புலிகளுக்கு பக்கத்தில் நின்று படம் எடுத்திருப்பீர்கள். ஆகக் குறைந்தது புலிகள் நின்ற இடத்திலாவது நின்றிருப்பீர்கள். வன்னியில், வடமராட்சியில், யாழ்ப்பாணத்தில், கஞ்சிக்குடிச்சாறில், வடக்கில் இல்லையாயின் கிழக்கில் பிறந்திருப்பீர்கள். ஆகக் குறைந்தது கொழும்பில் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் கூறியது போல் குறைந்தது நீங்கள் ஒரு தமிழராக இருப்பீர்கள். அப்படியாயின் நீங்கள் புலிகள்தானே. அதனால் நாங்கள் உங்களை வெள்ளை வானில் கடத்துவோம். காணாமல் போகச் செய்வோம். சித்திரவதை செய்வோம். சுடுவோம். ஆனாதரவாக சடலமாக வீசுவோம். காரணம் நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான தேசத்தை மண்ணை மீட்கும் போரை நீங்கள் ஆதரிக்கவில்லை. ஏனென்றால் நீங்கள் புலிகள். வடக்கில் யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், மன்னாரில் ஏன் கிளிநொச்சி முல்லைத்தீவைப் பிடித்தால் அங்கும் இவற்றை தினசரி செவ்வோம். ஏன் கிழக்கில் மட்டக்களப்பில், அம்பாறையில், திருமலையில் குடும்பம் குடும்பமாகச் சுடுவோம். கடத்துவோம். கொழும்பில் அதனை அண்மித்த பகுதிகளில் மலையகத்தில் தமிழர்கள் நாமம் இருக்கும் இடம்மெல்லாம் இவற்றைச் செய்வோம். ஏனென்று கேளாதீர்கள். நாம் புலிகள் என சந்தேகித்தால் நிச்சயமாக நீங்கள் புலிகள்தான். இவற்றை நிறுத்த முடியாது. நிறுத்தும்படி கேளாதீர்கள். அவ்வாறு கேட்பதானால் புலிகளிடம் கேளுங்கள். அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் நாங்களும் நிறுத்துகிறோம். நாங்கள் உள்ளிட்ட எங்களோடு இருக்கின்ற உங்கள் தமிழ் அமைப்புக்களும் நிறுத்துவார்கள். இல்லையாயின் அது பற்றி யோசிக்காதீர்கள். ஏனென்றால் தெற்கில் மனிதம் பற்றி பேசும் எம்மவரையே நாம் புலிகளாக்கிவிட்டோம். அவர்கள் சிங்களப் புலிகள். வெளிநாட்டவர்களிடம் போகாதீர்கள். ஏனென்றால் ஜநாவை, சிறுவர் நிதியத்தை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை, உலக உணவுஸ்தாபனத்தை சர்வதேச தொண்டு நிறுவனங்களை எல்லோரையுமே நாங்கள் வெள்ளைப் புலிகளாக்கிவிட்டோம். ஏனென்றால் அவர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. நீங்கள் வந்தேறு குடிகள். இரண்டாம் தரப் பிரஜைகள் கிடைப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது நாம் தருபவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். எங்களோடு சேர்ந்து வாழுங்கள். இதனை நாங்கள் மட்டும் கூறவில்லை. கிழக்கில் உங்கள் தலைவர்களே கூறுகிறார்கள். தமக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவை இல்லையென. கிழக்கின் தலைவர்கள் கூறுகின்றார்கள் நாங்கள் மாறிவிட்டோம் பெருந்தன்மையானவர்கள் என. . பாருங்களேன் அவர்கள் எங்கள் கட்சியிலேயே எங்கள் சின்னத்திலேயே தேர்தலில் நிற்கின்றார்கள். கிழக்கில் மட்டும் அவ்வாறு கூறவில்லை. வடக்கிலும் உள்ள உங்கள் தலைவர்கள் சிலர் கூறுகின்றார்கள் இனப்படுகொலை என்பது இந்த நாட்டில் இல்லை என்று. புலிப்பயங்கரவாதம் மட்டும்தான் நாட்டில் பிரச்சினை என்கிறார்கள். வடக்கில் வசந்தம் வீசுகிறது என்கிறார்கள்.இன்று நேற்று நேற்று முன்தினம் என நாளாந்தம் வடக்கு கிழக்கில் கடத்தப்படுகின்ற காணாமல் போகின்ற கொல்லப்படுகின்றவர்கள் புலிகளாகத்தான் இருப்பார்கள் என அவர்களில் பலரும் பேசுகிறார்கள். அதனால் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை இவை தொடரத்தான் போகிறது. அவ்வாறு புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் போது நாட்டில் பிரச்சினைகளும் ஒழிக்கப்பட்டு விடும். ஏனென்றால் அப்போது நாட்டில் நீங்களும் இல்லாது ஒழிக்கப்பட்டு விடுவீர்கள்.புதிய சகாப்தத்தில் உங்கள் சந்ததி மீண்டும் எங்கள் அடிமைகளாக வாழ்வார்கள்

விதியின் பிழை.....

இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, வேதனையைத்தான் தருகிறது. வேதனைக்குக் காரணம் அதிபர் ராஜபட்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பது அல்ல் மக்களாட்சித் தத்துவம் இப்படியெல்லாம் கேலிப் பொருளாகிறதே என்பதால்தான். 70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதும், எதிர்பாராத வித்தியாசத்தில் ராஜபட்ச வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தலைப்புச் செய்தி என்கிற அளவில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை உடையதாக இருக்கிறதா என்றால் ராஜபட்சவின் மனசாட்சிகூட (அவருக்கு அப்படியெல்லாம் இருக்குமேயானால்) ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை போட்டியில் களம் இறக்கியதுகூட ராஜபட்சவின் ராஜதந்திரம்தானோ என்று சந்தேகித்தவர்களுக்குத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில், எனது முன்னாள் தளபதியான பொன்சேகா என்னிடம் நேரிடையாகப் பேசுவதில் என்ன தடை இருக்க முடியும் என்று அதிபர் ராஜபட்ச வெளியிட்டிருக்கும் கருத்து மேலும் வலு சேர்க்கிறது. தன்னை எதிர்த்தபோது வேறு எந்த எதிர்க்கட்சியும் போட்டியிடாமல் தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் தளபதியை நிற்க வைத்து, தோல்வி அடையச் செய்யும் ராஜதந்திரம் ராஜபட்சவுக்குத் தெரியாது என்று நம்ப முடியுமா? அதெல்லாம் முடிந்துவிட்ட கதை. தேர்தல் என்று ஒன்றை நடத்தி, தனது பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார் அதிபர் ராஜபட்ச. பெருவாரியான தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழர்களின் மொத்த மக்கள்தொகையே கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் வெற்றியோ, தோல்வியோ தமிழர்களைப் பொறுத்தமட்டிலும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒன்றாகவே இருக்கும். குடியரசுத் தலைவரை முன்னிறுத்திய ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சி முறை என்றுதான் கருதப்பட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக முறையிலாவது, சிறுபான்மையினரின் குரலைப் பிரதிபலிக்க அந்தந்தப் பகுதியிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடாளுமன்ற ஜனநாயக முறை இருப்பதால்தான் இந்தியாவில் பல்வேறு மாநில,இன, மொழி உணர்வுகள் மத்திய அரசிலும் ஆட்சி முறையிலும் பிரதிபலிக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயக முறை இலங்கையில் இருந்தபோது இந்திய வம்சாவளித் தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், யாழ்ப்பாணத் தமிழர்களும் ஆட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் பங்கு வகித்தனர் என்பதால்தான், நாடாளுமன்ற நடைமுறையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றினார்கள். இனஉணர்வு மிக்க சிங்களர்கள் பெருவாரியாக வாழும் இலங்கையில் சிங்கள இனத்தவர் மட்டுமே அதிபர் ஆக முடியும் என்கிற நிர்பந்தம் இந்த மாற்றத்தினால் நிலை நாட்டப்பட்டது. இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மீண்டும் ஏற்பட்டு, தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிப்பு நடைபெறாதவரை தேர்தல் நடைபெறுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் கண்துடைப்பாகத்தான் தொடருமே தவிர, அதனால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இதை வலியுறுத்தித் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய இந்தியாவே மெüனமாக வேடிக்கை பார்க்கும்போது, ராஜபட்ச மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதொன்றும் அதிசயமில்லை. உலக அரங்கில் தம்மை ஜனநாயகவாதியாகவும் மக்களின் பேராதரவு பெற்ற அதிபராகவும் நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ராஜபட்ச வெற்றி பெற்றுவிட்டிருக்கிறார். இனிமேல் அவர் சீனாவுடனான தனது நெருக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதோடு, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கைகோர்த்து காய்களை நகர்த்தப்போவதும் நடைபெறப் போகும் நிகழ்வுகள். இந்துமகா சமுத்திரத்தில் இதுவரை இந்தியாவுக்கு இருந்த ஆளுமை பறிபோகப் போகிறது. அதுமட்டுமல்ல, தமிழர்களுக்கும் மறுவாழ்வு தருகிறோம் என்கிற பெயரில் வட மாகாணங்களில் பெருவாரியாக சிங்களர் குடியேற்றம் நடைபெற இருப்பதும், தான் எல்லோருக்கும் பொதுவானவர் என்று காட்டிக்கொண்டு தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ராஜபட்ச அரசு ஈடுபடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அதைத் தட்டிக் கேட்கவும் முறியடிக்கவும் ஈழத்தமிழர்களுக்கு அங்கே சரியான தலைமை இல்லை. இந்திய அரசுக்கும் இனிமேல் தைரியம் இருக்காது. அப்படி நடைபெறாமல் இருக்க இறைவனின் திருவுளம் இரங்க வேண்டும். தானே ஒரு தேர்தலை நடத்தி, தானே முன்னின்று வெற்றியும் பெற்றுவிட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச, முதலில் தமிழர்களை ஏமாற்றினார். பிறகு இந்தியாவை ஏமாற்றினார். அப்புறம் உலகை ஏமாற்றினார். இப்போது ஒரு தேர்தல் நாடகத்தை நடத்தி சிங்களவரையும் ஏமாற்றி வெற்றி பெற்று இருக்கிறார். இது விதியின் பிழை அல்லாமல் வேறென்ன?

கருணாவின் ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் இணைப்பாளரை பிள்ளையான் அச்சுறுத்தினார்

மட்டக்களப்பு ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேர்தல் செயற்பாடுகளின் பின்னரும் தங்கியிருந்த கருணாவின் ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் இணைப்பாளர் ஆகியோரை கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது ஆயுதக் குழுவுடன் சென்று அச்சுறுத்தியுள்ளதுடன் அலுவலகத்திலிருந்த சொத்துக்களும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தமது நாளிதழுக்குத் தெரிவித்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது ஊடகச் செயலாளர் ஜூலியன் ஜயபிரகாஷ் மற்றும் இணைப்பாளர் அதிகாரி ரி.ஆனந்தராஜா ஆகியோர் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நானும் எனது அலுவலகப் பணியாளர்களும் தேர்தல் பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியின் ஆலோசனையின்படி ஆளுநர் அலுவலகத்தில் தங்கியிருந்தோம். ஜனவரி 26ம் திகதி வாக்கெடுப்பு முடிந்த பின்னர் நானும் எனது பணியாளர்களில் ஒருசிலரும் கொழும்பிற்கு வந்துவிட்டோம். இதன்பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் எனது ஊடகச் செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் தமது பணிகளை முன்னெடுத்து வந்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலை மையமாக வைத்தே அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். இவர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 3ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையார் அவரது ஆயுதக் குழுவுடன் சென்று எனது அதிகாரிகளை அச்சுறுத்தி அந்த அலுவலகம் தமக்கு (பிள்ளையானுக்கு) சொந்தமானதெனக் கூறி அந்த அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதுகுறித்து எனது அதிகாரிகள் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் என கருணா தெரிவித்துள்ளார்.

சிரித்து வாழவேண்டும்

"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர். உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் பங்கு வகிக்கிறது. நல்ல நகைச்சுவை சிரிப்பலைகளைப் பரவ விடுகிறது. சிரிப்புகூட ஒரு தொற்றுநோய்தான். ஆரோக்கியமான தொற்று. கொட்டாவி, இருமல், தும்மலை விட வேகமாகப் பரவக்கூடியது சிரிப்பு. ஒருவருடன் சிரித்துப் பேசுகையில் நெருக்கம் அதிகரிக்கிறது. சிரிப்பு ஒரு நல்ல பாலம். அது மனிதர்களை இணைக்கிறது. மனத்தை லேசாக்குகிறது. அது மட்டுமல்ல... அது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் ஆற்றலை மேம்படுத்துகிறது. வலியையும் இறுக்கத்தையும் (Pain and Stress) குறைக்கிறது. சிரிப்பும் உடல் நலமும்: வாய்விட்டு சத்தமாகச் சிரிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என மருத்துவர்கள் கருதுகின்றனர். நீங்கள் சிரிக்கும்பொழுது உங்கள் உடல் தசைகள் இறுக்கம் குறைந்து தளர்வடைகின்றன. நன்கு வாய்விட்டு மனம் விட்டுச் சிரித்தபின் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை உங்கள் உடல் இறுக்கமின்றிக் காணப்படுமாம். சிரிக்கும்பொழுது, மனச்சோர்வையும் இறுக்கத்தையும் உண்டாக்கும் ஹார்மோன்கள் சுரப்பது குறைவடைகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்படுகிறது. எண்டார்பின் என்ற திரவம் உடலில் வலியைக் கட்டுப்படுத்தவும், நல்ல மனநிலையை உண்டாக்கவும் வல்ல ஒன்று. சிரிப்பு இந்த எண்டார்பின் திரவம் சுரப்பதை அதிகம் தூண்டுவதால், மனம் மகிழ்ச்சியாக இருப்பதுடன், வலி குறைந்தது போன்ற உணர்ச்சியும் தோன்றுகிறது. சிரிக்கின்ற பொழுது, நமது இரத்தக்குழாய்களின் வேலைத்திறம் அதிகரிக்கிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மாரடைப்பு போன்ற அறிகுறி தோன்றுகையில் அதிக சத்தமாக வாய்விட்டுச் சிரித்தால் (சிரிப்பதுபோல் செய்தால்) இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீரடைந்து மாரடைப்பு தவிர்க்கப் படும் என்றும் மருத்துவ உலகம் கருதுகிறது. எப்படி நடக்கிறது இந்த மாயவித்தை? சிரிக்கின்றபொழுது நமது உடல் தசைகள் விரிவடைகின்றன. நமது நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கின்றன. நம் மூச்சு வேகமாகவும் ஆழமாகவும் இழுக்கப் படுகிறது. எனவே நமது உடலில் உள்ள திசுக்கள் அதிக அளவு ஆக்சிஜனைப் பெறுகின்றன. வில்லியம் ஃப்ரை என்ற ஆராய்ச்சியாளர் பத்து நிமிடப்பயிற்சியால் ஏற்படும் பலனும் ஒரு நிமிடம் வாய்விட்டு, மனம்விட்டுச் சிரிப்பதால் ஏற்படும் பலனும் சமம் என்கிறார். அது மட்டுமல்ல பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் சத்தமாகச் சிரிக்கின்ற பொழுது சுமார் ஐம்பது கலோரிகள் எரிக்கப் படுவதாகவும், உடல் எடைக்குறைப்பிலும் சிரிப்பதன் பங்கு உள்ளது எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சிரிப்பு உதவுகிறதாம். ஏறத்தாழ ஒரே அளவு பாதிப்புள்ள 20 சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே விதமான உணவு அளிக்கப் பட்டபின் பாதிப்பேரை நகைச்சுவைத்திரைப்படம் பார்க்கும்படியும், மீதிப்பேரை ஒரு சலிப்பூட்டும் உரையைக் கேட்கவும் செய்தபின் அவர்களது உடலின் சர்க்கரை அளவு கணக்கிடப்பட்டதாம். இதில் நகைச்சுவைப் படம் பார்த்தவர்களின் உடலில் இருந்த சர்க்கரை அளவு, மற்ற குழுவினரின் சர்க்கரை அளவைவிடக் கணிசமாகக் குறைந்திருந்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனநலம் காக்கும் சிரிப்பு: நல்ல நகைச்சுவைக்கதைகளைப் படிக்கின்ற பொழுதும், நகைச்சுவைப்படங்களைப் பார்க்கின்ற பொழுதும் கவனியுங்கள். உங்கள் மனதில், பதட்டம், கோபம், வெறுப்பு, துயரம் போன்ற உணர்ச்சிகள் அண்டவே அண்டாது. சிரிப்பு உங்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது. உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்துகிறது. வேலை செய்யும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. நல்ல மனநிலையுடன் செய்யப்படும் வேலைகள் பொதுவாக வேகமாகவும் தவறின்றியும் செய்யப்படும் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். நல்ல தூக்கத்தையும் நகைச்சுவை தூண்டுகிறது. தீவிரமான முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்த நார்மன் கசின்ஸ் என்பவர், தாம் நகைச்சுவைத் திரைப்படங்கள் மற்றும் சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பார்த்தபின் வலி குறைந்து நன்கு தூங்க முடிவதை உணர்ந்தார். கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடச்சிரிப்பு நிகழ்ச்சி அவருக்கு ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தூக்கம் பெற உதவியது. இதைத் தொடர்ந்து அவர் எழுதிய Anotomy of an Illness' என்ற புத்தகமே, சிரிப்பு மருத்துவம் குறித்த ஆராய்ச்சிக்கே வித்திட்டது எனலாம். சிரிப்பு நமது இனிமையான வாழ்வுக்கும் உதவி புரிகிறது. நல்ல நகைச்சுவை உணர்ச்சியுள்ளவர்கள் பலரையும் வசீகரிக்கிறார்கள். சிரித்த முகமாக இருப்பதும், (பிறரைப் புண்படுத்தாத) நகைச்சுவையும் நிறைய நண்பர்களைப் பெற்றுத் தரக்கூடியவை. நகைச்சுவை உணர்வுடன் ஒரு பிரச்னையை அணுகும்பொழுது அது எளிதில் தீர்க்கப்படுகிறது. பிணக்குகளும் சண்டை, சச்சரவுகளும் குறைகின்றன. குழு மனப்பான்மை வளர்கிறது. எந்த ஒரு கடினமான வேலையையும், சிரித்துப் பேசியவாறே செய்கையில் அதனை எளிதாக முடிக்க முடிகிறது.பேச்சில் இனிமை கூடுகிறது. சிரிப்பதும் ஒரு பழக்கம்தான். இதுவரை நீங்கள் இறுக்கமானவராக, உம்மணாமூஞ்சியாக இருந்திருக்கலாம். இன்று முதல் மாறலாமே! முதல் கட்டமாக நல்ல நகைச்சுவைத் துணுக்குகளைப் படியுங்கள். அது இணையத்தில் இருந்தாலும் சரி, புத்தகத்தில் இருந்தாலும் சரி. சில துணுக்குகளை மனப்பாடம் செய்துகொண்டு உங்கள் நண்பர்களுடனான பேச்சுக்கிடையில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். (ஒரே நாளில் வரிசையாகப் பத்துப் பதினைந்து ஜோக் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வப்பொழுது சொன்னால் போதும்.) மற்றவர்கள் சொல்வது நீங்கள் ஏற்கனவே படித்த அரதப் பழசான அல்லது மிகச்சாதாரணமாக துணுக்காக இருப்பினும் அதை அனுபவித்துச் சிரிக்க முயலுங்கள். 'Ten time you fake it; Eleventh time you will make it' என்கிறது ஒரு ஆங்கிலச் சொற்றொடர். இயல்பாகவே நன்கு சிரித்துப் பழகும் நபர்களுடன் அதிக நேரத்தைச் செலவழியுங்கள். தீவிரமான, வன்முறை, அடிதடி, சோகம் நிறைந்த திரைப்படங்கள், புத்தகங்களைத் தவிர்த்து லேசான, நகைச்சுவை கலந்த படங்கள் புத்தகங்களை அதிகம் தேர்ந்தெடுங்கள். உங்கள் அலுவலகத்தில் அல்லது நண்பர்கள் வட்டத்தில் சிரிப்பொலி கேட்கும்பொழுது நீங்களும் 'அது என்ன' என்று கேட்டு அவர்களுடன் இணைந்து சிரிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் மாற்றத்தை உணர்வீர்கள். சிரித்து வாழ வேண்டும்...ஏனென்றால் சிரிப்புடன் கூடிய வாழ்வுதான் சிறப்பான வாழ்வு

இந்தியர் உள்பட 25 பேருடன் கொரியா கப்பல் கடத்தல்

தென் கொரியாவை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் 2,405 வாகனங்களை எற்றிக் கொண்டு சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா துறை முகத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர் பல் கேரியர்கள், 10 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள் மற்றும் ருமேனியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர். அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை பகுதியில் அக்கப்பல் வந்து கொண்டிருந்தது. அப்போது அதை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். அந்த கப்பலை விடுவிக்க ரூ.78 கோடி பிணைத்தொகை வழங்க வேண்டும் என்று கடற்கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதமே இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக பல்கேரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட சரக்கு கப்பல் தற்பேது ஹோப்யோ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை இடம்மாற்றும் நடவடிக்கை சிறீலங்கா

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை இடம்மாற்றும் நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழ் குழந்தைகளும் பெற்றோர்களும் உரிய அடிப்படை வசதிகள் அற்று சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை களுத்துறைச் சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்னிலங்கையில் முழுமையான சிங்கள மக்களை கொண்ட களுத்துறைப் பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் வடபகுதிச் சிறைகளில் உள்ளவர்களை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறையில் உள்ள குழந்தைகளையும் தாய்மார்களையும் உறவினர்கள் பார்வையிட முடியாத அளவிற்கு சிங்கள அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உதயன் சுடரொளி ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகசெய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழப்பாணத்தில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை ஊக்குவிப்பதில் யாழ் மாநகரசபை நிர்வாகம் முழு அளவில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் குடாநாட்டில் இருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதனையடுத்து ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் யாழ் மாநகர முதல்வராக உள்ள யோகேஸ்வரி பற்குணம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் சிங்கள வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்றது. அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிகக் கழகங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பலவும் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை முதல்வர் மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை ஆற்றத் தடுத்து வருகின்றார். இது தொடர்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து அதன் செய்தியாளர் ஒருவரிடம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாகவும் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனருடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. வலம்புரி நாளிதளின் ஆசிரியர் தலையங்கம் யாழ்ப்பாண நகரில் ஏற்பட்டுள்ள சனநெருக் கடியை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற பெருந்தொகை சிங்கள மக்கள்- அவர்களை ஏற்றிவருகின்ற வாகனங்கள் யாழ்ப் பாண நகரை ஆக்கிரமித்துக் கொள்ள, யாழ்ப்பாண நகர் மூச்சு விடமுடியாமல் திணகின்றது. இதற்கு மேலாக பொருட்களை ஏற்றி வரும் கொள்கலன்கள் நினைத்த பாட்டில் நினைத்த நேரத்தில் தாம் விரும்பும் வீதியால் பயணிக்கும் துன்பம் சொல்லுந்தரமன்று. இவை எல்லாம் எதற்காக என்ற கேள்விக்கு விடைகாண முடியாத பரிதாபம் தொடர்கிறது. பெருந்தொகையான சிங்கள மக்களின் வருகையால் யாழ். நகரம் பல்வேறு வகைகளில் பிர சினைகளை எதிர்கொள்கின்றது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எவரும் எங்கும் செல்ல முடியும் என்பது மனித உரிமையின் பாற்பட்டது.இதனை யாரும் எதிர்க்க முடியாது. அதே நேரம் அதிகரித்த மக்கள் தொகையினால் ஏற் படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை எவரும் மறுக்க வும் மாட்டார்கள். யாழ். நகரம் தாங்க முடியாத அளவில்-பெருந்தொகையாக வரும் சிங்கள மக்கள் துரையப்பா விளையாட்டரங்கு, ஆரியகுளப் பகுதி உள்ளிட்ட வெறுவெளிகளில் தங்குகின் றனர். இவ்வாறு தங்குபவர்களுக்கான மலசல கூட வசதிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீரின் கிடைப்பனவு என்பன குறித்துக் கவனம் செலுத்த முடியாத அளவில் நிலைமை உள்ளது. யாழ்ப்பாண மக்களை டெங்கு நோய் வஞ்சம் தீர்க்கும் இவ்வேளையில்,யாழ். நகரின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் ஆயின் நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, செங் கண்மாரி போன்ற தொற்றுநோய்களும் மக் களை சங்காரம் புரியத் தொடங்கிவிடும். எனவே யுத்தத்தால் அழிந்து போன யாழ்ப் பாணத்தையும், மனமுடைந்து போன தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக காணத்துடிக்கும் எமது அருமைச் சிங்களச் சகோதரர்களே! ஆறுதலாக-அவசரமின்றி யாழ்ப்பாணத்திற்கு வந்து போங்கள். நெருக்கடி நிலையால் ஏற்படக் கூடிய நோய் உங்களையும் தாக்கும் அல்லவா?பாவம் யாழ்ப்பாணம் மூச்சு விடமுடியாமல் திணறும் நிலைமையைப் புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

கசூரினாக் கடற்கரையில் கலாசாரச் சீரழிவு

காரைநகர் கசூரினாக் கடற்கரைக்குச் செல்லும் சிலர் கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் தென்பகுதியிலிருந்து பெருமளவான பொதுமக்கள் (உல்லாசப் பயணிகளாக) குடாநாட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகள் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்கும் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். இதேநேரம் யாழ்.குடாநாட்டுப் பொதுமக்களும் இவர்களுட ன் வருகை தரும் அதேவேளை சில இளைஞர், யுவதிகள் கலாசார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாகத் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வோர் அங்கு செல்வதாகக் கூறிவிட்டு கசூரினாக் கடற்கரைக்கு வருகின்றனர். இவ்வாறு இந்த வாரம் தனியார் கல்வி நிலையத்திற்கு என வீட்டில் கூறிவிட்டு வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயது யுவதி ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சந்தேகத்திற்கிடமாக உலாவியதை அடுத்து அப்பகுதி கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த கிராம அலுவலரினால் அவர்கள் விசாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்வதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் உல்லாசப் பயணங்களிலும் விழிப்பாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், சிறீலங்காவின் புலனாய்வுப்பிரிவினால் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தினத்தன்று நள்ளிரவு இடம்பெறவிருந்த இரத்தக்களரியில் இருந்து மயிரிழையில் தப்பியது தலைநகரம் - கொழும்பு ஊடகம்

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் அவருக்கு ஆதரவான சிங்க படையணியையும், கொமோண்டோ படையணியையும் அழித்து ஆட்சியை கைப்பற்ற சிறப்பு படையணியும், கஜபா படையணியும் தயார் நிலையில் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா இராணுவப்புரட்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரச ஊடகங்கள் தேர்தலின் பின்னர் பல நாட்கள் தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் இராணுவத்திற்குள் இருந்து அறியப்பட்டுள்ளது. சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா ராஜபக்சாவுக்கு தோல்வி ஏற்படலாம் என்ற கணிப்புக்கள் உருவாகியதை தொடர்ந்து சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக பாதுகாப்புச்சபை கூட்டங்களை மேற்கொண்டு வந்தது. தமது பதவியை எவ்வாறு தக்கவைக்கலாம் என அதில் ஆராயப்பட்டது. இறுதியாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் கடந்த மாதம் 24 ஆம் நாள் பாதுகாப்புச்சபை கூட்டம் கூட்டப்பட்டது. தேர்தலில் தோல்விடைந்தாலும் எவ்வாறு மகிந்த தனது பதவியை தக்கவைப்பது என்ற திட்டங்கள் அங்கு தீட்டப்பட்டன. வடபகுதியில் நிலைகொண்டிருந்த ஐந்து பற்றாலியன் சிறப்பு படையணிகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஐந்து பற்றாலியன்களையும் தலைமை தாங்குவதற்கு லெப். கேணல் ஹரேந்திரா வணசிங்கா நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் இராணுவத்தளபதி ஹமில்டன் வணசிங்காவின் மகனாவார். ஆனால் நித்தம்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வணசிங்கா தனது ஆதரவுகளை பொன்சேகாவுக்கு தெரிவித்திருந்தார். அதுவும் பின்னர் அரசின் திட்டத்தை வெளியில் கொண்டுவந்திருந்தது. இராணுவத்தின் அதிக போரிடும் வலுவுள்ள படையணியாக சிறப்பு படையணிகள் திகழ்வதால் அவை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்த படையணிகளுடன் பாதுகாப்பு செயலாளரின் படையணியான கஜபா றெஜிமென்ட், மற்றும் கவசப்படையணி ஆகியனவும் கொழும்புக் கொண்டுவரப்பட்டன. கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு படையணிகள் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு சீதுவை, குருவித்த, எம்பிலிப்பிட்டியா, பாணந்துறை, கொழும்பு குதிரைச்சவாரி திடல் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டிருந்தன. இந்த முழு நடவடிக்கைக்கும் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா நியமிக்கப்பட்டார். கடற்படையும், வான்படையும் உசார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த முழுநடவடிக்கையும் இராணுவத் தளபதியினால் திட்டமிடப்பட்டது. மகிந்தா தேர்தலில் வெற்றிபெறாது விட்டால், பொன்சேகா ஆட்சி அமைக்கும் போது அவருக்கு உதவியாக சிங்க றெஜிமென்ட் மற்றும் கொமோண்டோ படையணிகள் செயற்படலாம் என அரசு கருதியது. தென்னிலங்கை மக்களுடன் இணையும் இந்த படையணிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றுவதே சிறப்பு படையணி மற்றும் கஜபா படையணிகளின் திட்டம். அதாவது சிங்கப்படையணியை முற்றாக அழித்து ஆட்சியை கைப்பற்றுவதே அரசின் திட்டம். அவ்வாறு நடைபெற்றிருந்தால் கொழும்பில் கடந்த 27 ஆம் நாள் ஒரு இரத்தக்களரி ஏற்பட்டிருக்கலாம். எனினும் அரசின் இந்த திட்டங்களை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் எதிர்த்திருந்தனர். இந்த நடவடிக்கையில் பங்குகொள்ள வேண்டாம் என அவர்கள் லெப். கேணல் ஹரேந்திரா வணசிங்காவையும் எச்சரித்திருந்தனர். ஆனால் தன்னால் இராணுவத் தளபதியினதும், பாதுகாப்பு செயலாளரினதும் உத்தரவுகளை மீறமுடியாது என வணசிங்கா தெரிவித்திருந்தார். இவ்வாறு இந்த நடவடிக்கையை எதிர்த்த அதிகாரிகளையே தற்போது அரசு கைது செய்துள்ளதுடன், இராணுவத்தில் இருந்தும் நீக்கியுள்ளது இதனிடையே சிறீலங்கா இராணுவத்தில் உள்ள சிங்க றெஜிமென்ட் படையணியை விரைவில் கலைத்துவிடுவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ‐ ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து தடுத்துவைப்பு‐

இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமனாப் படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்த்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகீ ராஜரட்னம் நேற்று காவல்துறையினருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் வானூர்த்தியைத் தாக்கியழிக்கக் கூடிய சேம் ஏவுகணை கூடு விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது ரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனார். விடுதலைப் புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டமனாறு எம்.ராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வானூர்த்தியை அழித்ததாகக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலை விடுதலைப் புலி உறுபு;பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப் புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதிகோரினர். அத்துடன்> எம்.ஐ. 24 ரக உலங்குவானூர்த்தியை ஏவுகணை மூலம் தாக்கியழித்த சம்பவம் குறித்த விசாரணைத் தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்> 2000ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட சேம்‐3 ரக ஏவுணைகளைத் தாக்குதலினால் வானூர்த்தி உப்பாறு களப்பில் வீழ்ந்ததாகத் தகவலளித்தனர். அருளாந்தன் நிஷாந்தன் என்ற சந்தேக நபர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டுள்ளதாகவும் இறுதிக் காலம் வரை அவர் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஏவுகணையின் கூட்டில் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட திகதி> நேரம்> மேற்கொண்டவரின் பெயர் விபரங்களை தமிழ்மொழியில் கூட்டில் பதித்து களஞ்சியப்படுத்துவது வழக்கம் எனவும்> விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இவ்வாறான பல ஏவுகணைக் கூடுகள் மீட்கப்பட்டதாகவும் தகலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்கப்பட்ட ஏவுகணைக் கூடுகளில் எம்.ஐ. 24 ரக வானூர்த்தியை அழிப்பதற்குப் பயன்படுத்தி ஏவுகணைக் கூடும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் பல தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் இதன்போது அனுமதி கோரினர். பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதவான் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

அவுஸ்திரேலியா கடற்பரப்பில் 45 ஈழத்தமிழருடன் மற்றுமொரு படகு மீட்பு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையில் 45 ஈழத்தமிழ் மக்களுடன் கடலில் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழு இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது,கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையாக 45 ஈழத்தமிழ் மக்களுடன் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான படகில் இருந்து இன்று மாலை (6) பெறப்பட்ட உதவி அழைப்புக்களை தொடர்ந்து எல்லைக்காவல் படையினர் அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தனர். படகில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழுவின் பேச்சாளர் இயன் றின்ரவுல் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் இருந்து ஜனவரி 20 ஆம் நாள் புறப்பட்ட அவர்களின் படகின் எரிபொருள் தீர்ந்துபோனதால் கடலில் படகு நின்றுவிட்டதாக படகில் வந்தவர்கள் தெரிவித்தததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்கள் அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி இருந்ததால் பலர் நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சோர்வடைந்தும் காணப்படுகின்றனர். இருவர் அம்மை நோயயால் பதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மகிந்த டாக்டராகிறார்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ரஸ்யாவிலுள்ள மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இன்றறைய தினம் இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் உலக சமாதானத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்குமாகவே இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ரஸ்யாவில் தங்கியுள்ள மகிந்த இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருணா பிளவில் பங்கு வகித்த அலிசாகிர் மௌலானா மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்

ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு கருணாவின் பிளவில் முக்கிய பங்கு வகித்த அலி சாகிர் மௌலானா இம்முறை மகிந்த றாஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாவைக் காப்பாற்றி கொழும்புக்குக் கொண்டு வந்தவர் இவர் என அம்பலமானதும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினமாச் செய்து விட்டு வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்த இவர் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் நாடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பொருத்தமான தமிழ் வேட்பாளர்களைக் களமிறக்க முடியாத வங்குரோத்து நிலையில் உள்ள அரசாங்கம் தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்கு வலை வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெப்ரவரி முதல்வாரத்தின் முதல் மூன்று நாட்களில்

பெப்ரவரி முதல்வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மத்தியகிழக்கில் இறந்துள்ளனர் என இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இவர்கள் வெவ்வேறு விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 330 இலங்கைப் பெண்கள் இலங்கைக்கு சடலங்களாக திரும்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானோர் சித்திரவதைகளாலும், தற்கொலைகளாலும், விபத்துக்களாலும் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு லட்சம் பணிப்பெண்கள் வருடாந்தம் மத்திய கிழக்குக்கு மாத்திரம் செல்கின்றனர். குவைத், சவுதி அரேபியா, கட்டார், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 800,000 (எட்டு லட்சம்) பணிப்பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.இதை விட இத்தாலி, சைப்பிரஸ் இன்னும் சில ஆசிய நாடுகள் உட்பட பார்த்தால் சுமாராக ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள், பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இது இலங்கையின் சனத்தொகையில் 5 வீதமாகும். மொத்த இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 10 வீதமாகும். மத்திய கிழக்கில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை சராசரியாக 50,000 மட்டுமே என்றும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய வருவாயில் வெளிநாட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களின் வருவாய் முக்கியமான பங்கு வகிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக 1977இற்குப் பின் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எனும் தொழிற்பிரிவினர் உருவானார்கள். வருடாந்தம் ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயை ஏற்படுத்துகின்றனர் மத்திய கிழக்குக்குச் செல்லும் பணிப்பெண்கள். இந்தப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, மற்றும் காப்புறுதி, ஒப்பந்த மீறல்கள் என்பன குறித்து இலங்கை அரசாங்கம் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இலங்கை பெண்கள் இயக்கங்களால் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இலங்கை தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு சந்தையை இலங்கை இழந்துவிடும் என்கிற அச்சமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பல பெண் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்கள் அழிக்கப்படும் நிலை மாற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்து மாமன்றம் வலியுறுத்து

யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ் தரிக்கும் போது 27இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் யாழ்.இந்து மக்களும் இந்து நிறுவனங்க ளைச் சேர்ந்தோரும் அதிர்ச்சியடைந்துள் ளனர். இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத் தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். அகில இலங்கை இந்து மாமன்றம் மேற் கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். இந்துமாமன்றப்பிரதிநிதிகள் குழுவினர் ஆளுநரைச் சந்தித்த போது திருக்கேதீஸ்வர ஆலய புனருத்தாரண வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சிற்ப வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் அமைப்பதற்கும், மாணவர்களுக்குப் போதிய விடுதி வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப்பெற்றுத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், இடம்பெயர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்து மாமன்றத் தலைவரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வி.கயிலாயபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளர் திருமதி அ.கயிலாயபிள்ளை ஆகியோர் கொண்ட குழுவே ஆளுநரை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.

சனல் 4 தொலைக்காட்சியை முடக்க இலங்கை அரசு சதி

கடந்த வருடம் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் ஸ்தாபனமாக விளங்கும் ஓப்காம்(OFCOM) நிறுவனத்திடம் இலங்கை பல பாரதூரமான முறைப்படுகளை மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ஓப்கொம் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச்செய்து அதனை மூட முடியும். இப்படியான இலங்கை அரசின் முறைப்பாட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது இலங்கை அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது. பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஓப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக அதிர்வு இணையத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் இலங்கை ராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் ஆடிப்போயுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே இலங்கைத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது. இதையடுத்து அவசரம் அவசரமாக இரு வாரங்களின் பின்னர் கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய இலங்கை அந்த வீடியோவைத் தாம் அராய்ந்து பார்த்து விட்டதாகவும் அது ஒரு போலியான வீடியோ எனவும் தெரிவித்தது. அதோடு சனல் 4 இன் லண்டன் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தியது. இதையடுத்து, பிரிட்டனில் தனது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஓப்காமில் தொடரான முறைப்பாடுகளைப் பதிவு செய்தது, ஒன்று அந்த வீடியோவின் துல்லியத்தன்மை மற்றும் சீரற்றதன்மைக்கு, இன்னொன்று நியாயம் மற்றும் தனியுரிமை ஆகியன தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே சனல் 4 க்கு எதிராக ஊடக நெறிப்படுத்துனரைப் பயன்படுத்தி இலங்கை அரசு போராட்டம் நடத்தியது. ஆனால் இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன. இருந்தும் ஐ.நா இன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே இலங்கையரசு தனது முறைப்பாடுகளை(OFCOM) ஓப்காமிடம் கூறியுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. வழமையாகவே தமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வரும் இலங்கை அரசானது, இப்போது மேற்படி வீடியோ குறித்த புலனாய்வில் சனல் 4 தொலைக்காட்சி இறங்கக்கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்க முயற்சி செய்யாமல், இலங்கையைப் பற்றிய செய்திகளையே முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்வு அறிந்துள்ளது. இலங்கை அரசு தனது அரசியல் லாபத்துக்காக நெறிப்படுத்துகை நடவடிக்கைகளை தன்னகப்படுத்திவருவதன் ஆபத்துக்கள் குறித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது. இப்போது இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த சர்வதேச வரிசையின் முக்கிய இடத்தில் ஓப்காம் உள்ளது. இலங்கை அரசின் முறைப்பாடுகள் கிடைக்க முன்னர் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே பிரிட்டனின் அரசியல் விவாதங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல் சர்வதேச முக்கிய நெருக்கடிகளுக்குள் ஓப்காமும் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வெளிநாடுகள் ஓப்காமின் முறைப்பாட்டு நடவடிக்கைகளை அணுகுவதற்கு தெளிவான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பது எங்கள் கருத்தாகும். சட்டதிட்டங்கள் இப்போது இல்லாத நிலையில், எந்த மாதிரியான முறைப்பாடுகள் இடப்படலாம் என்பதில் பிரிட்டன் பாராளுமன்றம் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். அதோடு ஓப்காம் என்னும் உள்நாட்டு முறைப்பாடு நடவடிக்கைகளில் வெளிநாடு ஒன்று தனது சுய லாபத்துக்காக முறைப்பாடு செய்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு முறைப்பாடு செய்ய அனுமதி அளிக்கப்படும் வெளிநாடுகளின் வரிசையில் இலங்கைதான் கடைசி நாடு என்பதை ஓப்காம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிர்வு விருப்பப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளான, லேபர் கட்சி, கான்சவேட்டிவ், மற்றும் லிபரல் டெமொகிராட் கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருக்கும் தமிழர்கள் இது தொடர்பாக பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயல்வது நல்லது. இதன் மூலம் நாம் எமது தமிழ் தொலைக்காட்சிகளை பிற்காலத்தில் இவ்வாறான இலங்கை அரசின் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கமுடியும்.

சிறிலங்காவிலும் பரவும் சீனாவின் செம்படை

அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டி தான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்து விட்டது. உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும் தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா. சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பது தான் பிரச்னை. பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வது தான் சீனாவின் நோக்கம். உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இது போன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.

இலங்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத் தேவையான தற்காலிக வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகளின் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளை

எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளையொன்று அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்தன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்திருந்தது. இதனடிப்படையில் இலங்கை வங்கிகளே இதுவரை தமது கிளைகளை வடக்கில் திறந்து வந்தன. அடுத்த வாரம் முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்எஸ்பிசி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.

புளுட்டோ கிரகம், சூரியனை கடந்த 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது.இந்நிலையில், அது பிரகாசமாக மாறி வருவதாக தெரிவித்துள்ள 'நாசா', விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுவதாக கூறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1994 ஆம் ஆண்டு, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எடுத்த அனுப்பிய படங்களைவிட தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் புளுட்டோவின் மேற்பரப்பு மிக தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக `நாசா'தெரிவித்துள்ளது. புளுட்டோ கிரகத்தில், சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அது மேலும் கூறியுள்ளது.

தமிழர்களின் பூர்வீகம், தாயகம் மீண்டும் தேர்தல் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும். இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார். ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன். ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர். இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம். தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது. எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இலண்டனிற்கு வந்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. வருகின்ற 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என கூறப்படுகின்றது

இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு?

இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இத்தாலியிலின் புகழ்பெற்ற இதழ் வயர்டு இத்தாலி. உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவதில் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிப்பதாக அது தெரிவித்துள்ளது. மகத்தான சேவையைப் பாராட்டி, இன்டர்நெட்டுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்காக, இன்டர்நெட் பார் பீஸ் என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இன்டர்நெட் ஆற்றி வரும் பங்கு குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்படும். இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் வரை தொடரும். இதுகுறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இன்டர்நெட் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மத, இன வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைக்கிறது என வயர்டு இத்தாலி பத்திரிகை ஆசிரியர் லுனா தெரிவித்துள்ளார். இதுதவிர, 2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபடி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான உம்பெர்டோ வெரோனெசி ஆகியோரும், இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.

டொயொட்டோ நிறுவனம் மிகப்பெரும் சிக்கலில்

மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை மீள்ப்பெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் இந்த சிக்கல் பாதுகாப்பு தொடர்பான அபாயம் ஏதும் கிடையாது என்றும் அதை சுலபமாக சரி செய்துவிடலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே ஓடிக் கொண்டிரும் தமது வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைபப்பு விடுத்துள்ளது ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததன் மூலம் மேற்கொண்ட தவறுகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாக> சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவித்துள்ளார். அவசர காலச் சட்ட நீடிப்பு தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும்> எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தங்களது சார்பில் சாட்சிக்காக ஆஜர்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் ஒர் வெற்றியாளராக கருதப்பட வேண்டும் எனவும்> ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியின் மூலம் ரணிலின் அரசியல் பயணம் தொடர வழிகோலியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெற்றி பெற வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் இரகசிய எதிர்பார்ப்பாக அமைந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பக்கச்சார்பின்றி செயற்பட்டதாக அவா தெரிவித்துள்ளார். போலியான பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன் மூலம் அரசியல் லாபமீட்ட எந்தவொரு எதிர்க்கட்சியும் முனைப்புக் காட்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுததாரி இனியபாரதி சிறார் போராளிகளை இணைப்பதாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது

சிறீலங்காத் துணை இராணுவக் குழுவின் ஆயுததாரியான இனிய பாரதி சிறுவர் போராளிகளை இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்னர் சிட்டி பிரஸ் நியூஸ் இணையத்தை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெமார்ட் தனது இலங்கைப் பயணம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவின் ஆதரவாளரான இனிய பாரதி என்பவரே அகவை குறைந்தவர்களை போராளிகளை இணைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அப்பாறைப் பிரதேசத்தில் இவ்வாறு சிறுவர்கள் இணைக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோகம் தொலைத்து உறுதி கொள்வோம்!

கூண்டோடு எங்கள் மக்கள் அழிக்கப்ப்பட்டனம். குற்றுயிராய் கிடந்த எம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். புல் டோசர்களால் எங்கள் மக்கள் பிணங்கள் புதைக்கப்பட்டது. புகை கக்கிய முள்ளிவாய்காலின் இறுதி நாள் நிகழ்வுகள் நெஞ்சை பிழிந்து இரத்தத்தை உறைய வைத்தன. விடுதலை என்பது சும்மா சுண்டங்காய் அல்ல தலைவன் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை அத்தனை வலிகளையும் சுமந்த மக்களும் புரிந்திருந்தனர். நீண்ட நெடு நிரை நின்று வவுனியாவுக்கு பயணிக்கும் பாதி வழியில் தண்ணீரின்றி, உண்ண உணவின்ற மடிந்து போயினர் எங்கள் உறவுகள். மனிதம் மரணித்ததை முதல் முதலாய் கண்டென் என்று கண்ணீர் சிந்திம் விழியோடு சொல்லுகின்றார் ஒரு முதியவர். வாழ்வு எறிகணைக்குள்ளும் குருதி பாயும் ஆறுகளுக்குள் மிதந்த போதும் முள்ளி வாய்க்கால் வரை மனிதநேயம் மண்டியிடாது இருந்தது. மரத்தடி வாழ்வு எனினும் மற்றும் படி எத்த சட்டமும் எந்த முள்வேலி வளையங்களும் எம்மை தடுததில்லை. கேள்வி கேட்க தயங்கி நின்று, சில ஒட்டுண்ணிகளின் ஆதரவுக்காய் காத்திருக்கும் போது தான் எத்தனை பேச்சுங்கள், எத்தனை சாபங்கள் தாங்கிய படியும் மீண்டும் ஐயா, அம்மா, என்று தங்கள் முகம்களை பார்க்கும் புலிகளின் நினைவு நெஞ்சுக்கு வருகிறாதாய் சொல்கிறார் அந்த முதியவர். முள்ளிவாய்காலில் தங்களிடம் தஞ்சமென வந்தவர்களுக்கு வாழ்வளிக்க இலட்சியத்தை பெற இருந்த ஆயதத்தை கிழே போட்டு நஞ்சுண்ண முடிவெடுத்த அந்த போராளிகளின் தியாகம் எங்கே? அரைப்பாசல் சாப்பாட்டுக்கு மக்களை முண்டியடிக்க வைத்து கொலை செய்யும் இந்த துரோகிகள் எங்கே? விடுதலை பெற்ற இலங்கை குடிமக்கள் யார் என்பதை உலகுக்கு சிங்களவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் குடும்பத்தின் குருத்துக்களின் கற்பு அரச படைகளிடமும், கூலிக்குழுக்களிடமும் பறிபோய் கொண்டிருந்தது. சாபம் பெற்ற இனம் ஒன்றின் இன்னல்களை கண்டுகொள்ள யார் உள்ளனர்? ஓமந்தையில் இருந்து ஒட்டுசுட்டான் வரை நிரையாக நிற்க்கும் எம் மக்களின் உணர்வுகள் பேசும் கதைதான் என்ன? கொள்ளிகட்டை கூட போட முடியாது வீதி வழிவிட்டு வந்த உறவுகளின் மரணங்கள் அவர்கள் உறவுகள் மனதில் ஆறாத வடுவைவிட்டுச் சென்றது. உயிர் உள்ளவரை உற்றவரை உறவினரை வாட்டும் இந்த சோகம் என்று தீருமோ,? தீரத்தான் வேண்டும் உறவுகளே! எம் கூடுகலைத்து கும்மிருட்டில் எம் இனத்தை தள்ளியவன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிங்கள தேசமும் அதன் அரசும் இதற்க்கு கண்டிப்பாக தமிழினத்தின் வரலாற்றில் குருதியால் பதில் எழுதியே தீருவார்கள்! 30000 மக்களின் ஆன்மாக்களின் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்... 30000க்கு மேற்ப்பட்ட மாவீரரின் துணையோடு தொலையாக கனவொன்றை வென்றெடுக்க நம் சோகம் கலைவோம். சுக்குநூறாக சிங்களம் வெடிக்கும் வரை வெற்றிக்காய் உழைப்போம் எழுந்திருங்கள்....!

என் தலைவரை ஏன் கொன்றீர்...?

என்தலைவரை ஏன் கொன்றீர்கள் என்று உரக்க கத்த வேண்டும் என்ற உணர்வு, வானொலிகள், பத்திரிகைகள், ஏன் இணையங்கள் எல்லாமே என் தலைவனின் வீரச்சாவு பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளரான எஸ்.பத்மநாதன் என்பவர் கூட இதை உறுதிப்படுத்தி அறிக்கை விட்டார், போதாததிற்க்கு மட்டு, அம்பாறை அரசியல்த்துறையும் அறிக்கை விட்டது. அதனால் உயிரோடு இருக்கும் ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் கொடுமை மிக்க இனமாக்கப்பட்டோமா? தளத்திலிருந்து புலனாய்ப்பிரிவின் பொறுப்பாளர்களின் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு மழுங்கடிக்கப்பட்டு, முகம் தெரியாத மனிதர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது. இத்தனை வருட கால போராட்டத்திற்க்கு யாரெல்லாம் உழைத்தார்களோ, எவர் எல்லாம் களப்பணி ஆற்றினார்களோ அவர்களை எல்லாம் நாம் இழந்து கண்ணீரோடு நிற்க்கின்றோம். ஊடைந்து போன எம் உள்ளமைப்புக்களையும் வெளிக்கட்டமைப்புக்களையும் மீண்டும் நலிவடைய செய்யும் பாரிய சதியா? தலைவரின் வீரச்சாவு செய்தி என்பதை எமக்குள் நாம் கேட்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. காற்றோடு கதை பேசி பல ஆயிரம் வீரரைப்படைத்தது எங்கள் மண்! நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் தமிழை நிமிர்த்தி வைத்தவன் எங்கள் தலைவன். நம்பிக்கையற்றவர்கள் தங்கள் நம்பிக்கையீனங்களை வெறுப்புக்களால் அல்லது தலைவருக்கு அஞ்சலி செலுத்த விடுங்கள் என் தொனியில் வெளிப்படுத்த தவறவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள், மற்றும் பலர் இன்றும் இப்போதும் தலைவர் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தபடியே இருக்கும் போது நேற்று வரை போராட்டத்தை நேசித்தவர்களும், அதற்காய் தளத்திற்ககு வெளியே உழைத்தவர்களுக்கும் இந்த போராட்டம் கசத்தது என்பது தமிழினத்தின் துரதிஸ்டமே! களத்தில் நின்று அளப்பெரிய தியாங்களை செய்த போராளிகளுக்கும் அந்த போராளிகளுக்கு உதவியதால் கொல்லப்பட்ட மக்களுக்கும் சொல்ல வேண்டிய நாம் அழிக்க வேண்டிய பதிலை மறந்து அகதி முகாம் வாழ்க்கையையும், அவல வாழ்வு பற்றியும் பேசாமல் புலிகளை பற்றி விமர்சனங்களை மட்டும் முன்வைப்போர் உண்மையில் விடுதலைப் போரை நேசித்தவர்களா? அல்லது திண்னை எப்போது காலியாகும், உட்காரலாம் என்று பாத்திருந்தவர்களா? விடுதலைப்புலிகள் என்ற ஒரு சக்தி ஈழத்தில் அழிக்கபட்டது உண்மை எனில், அதன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் வீரச்சாவை அணைத்தது உண்மை எனில் நாளைய தமிழினத்தின் எதிர்காலம் என்ன என்பதை இந்த அஞ்சலி செய்ய விருமப்பும் நபர்கள் அமைப்புக்கள் உறுதி செய்ய வேண்டுமல்லவா? அகதி முகாம்களில் வாழும் இளைஞர்களுக்கு இன்று அந்த வாழ்வு இனிக்கலாம் ஆனால் அதே நேரம் தன் முன்னே நடக்கும் அக்கிரமங்களுக்கு அந்த இளைஞனும் ஓர் நாள் பதில் சொல்லியே தீர்வான் என்றால் அவன் தேர்தெடுக்கப்போகும் வழி அரசியலோ, அகிம்சையோ அல்ல என்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர். இன்று புலிகளைப்பற்றி பேசும் பலருக்கும் அதன் தேவை உணரப்படும் போது தங்கள் வாய்களை எங்கே வைத்துக்கொள்வார்கள் என்பது வேறு கேள்வி! புலத்தில் நடைபெற்ற பேராட்டங்களை நலிவுறச் செய்து அதல் பாரிய வெற்றியை கண்டுள்ளது சிங்கள அரசு. இது எதனால் என்று கேட்டால் முற்று முழுதாக தலைவரின் வீரச்சாவு செய்தியால் என்று என்னால் 100 வீதம் சொல்ல முடியும். தலைவர் இல்லாத விடுதலையை யாரால் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பது பாரிய கேள்விக்குறியாக உள்ள போது இங்கு பலருக்கு வேறு விதமான நாட்டங்கள் அதிகரித்துள்ளன. அது தான் யார் அடுத்த தலமை! வெற்று பேச்சு மேடை ஏறி பேசுபவனோ! 33 வருடங்கள் தலைவரின் நண்பன் என்பதாலே தமிழரின் தலைமை ஏற்றுக்கொள்ளும் தகுதி யாருக்கும் இல்லை. புலிகளுக்கு அரசியல் அறிவு இல்லை என்று சொல்லும் தமிழகத்து ஊடகங்களோ, எம் புலம்பெயர் தமிழர்களோ, கண்டிப்பாக அரசியல் என்றால் என்ன என்பதை வெளிகாட்ட வேண்டும்! வார்த்தைகளை கோர்த்து வர்ண ஜாலங்கள் போடுவதால் உண்மைகள் ஒருபோது; அழியப் போவதில்லை. எம் தலைவனை கொன்றவன் யாராக இருந்தாலும் அவனை நான் மட்டுமல்ல என் சந்ததியும் மன்னிக்காது. உயிருள்ள மனிதனுக்கு அஞ்சலி செய்ய விளையும் ஊடக ஜாம்பவான்கள் ஒரு நிமிடம் தங்கள் சிந்தனையை மீட்டி யாதார்த்தத்தை உணருங்கள்...! உலகுக்கு எம் தலைவன் மானச்சாவடைந்தான் என்று ஒரக்க சொல்வதால் உங்கள் உள்ளங்கைகளில் ஈழத்தை கொண்டு வந்து தருவார்கள் என்று கனவு காணும் புலம் பெயர்வாழ் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளே உங்கள் அறிவு கெட்டத்தனமான அறிவுரைக்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பலியானார் என்ற செய்தி கசக்கின்றது. எம் சமூகத்தை வழி நடாத்த முடியாத உங்களால் எப்படி இப்படியான ஆலோசனைகளை வழங்க முடிந்தது என்பதை பற்றி சிந்தியுங்கள். தமிழர்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிய தலமையை இல்லை என்று சொல்லி விட்டு யாரின் கழுத்தில் மாலையிட இந்த ஆலோசனைகள்???

ஆரம்பிக்கிறது ஆடம்பர கழியாட்டங்கள்

நாங்கள் இத்தனை நாளாய் நடித்துக்கொண்டிருந்தோம்.எங்களுக்கு எமது மக்கள் பற்றி அக்கறை, தேவை அவர்களுக்காக நாங்கள் போராட்டம் செய்கின்றோம். எங்கள் விருப்பங்களை அவர்களுக்காக விட்டு விடுகின்றோம். என்று எத்தனையோ கதைகளை நாம் சொல்லிவிட்டோம். ஆனால் அவை அனைத்தும் முள்ளிவாய்க்கால் கடந்து வவுனியாவில் மக்கள் அடைபடும் வரை தான். அப்படியானால் இத்தனை நாட்கள் நாங்கள் எதற்காகநடித்தோம்? யாரினதும் வற்ப்புறுத்தலுக்காகவா,? இல்லையேல் மற்றவர்களுக்காகவா? தமிழர்கள் மத்தியில் உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் இந்த கலியாட்டங்கள் நடைபெறுமா? ஊடகங்கள், அமைப்புக்கள் எல்லாமே தமிழ் மக்கள் மீது எத்துணை பற்று வைத்திருக்கின்றன என்பதை மிக குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். அமைப்புகளுக்குள்ளும்,, ஊடகங்களுக்குள் தனிமனிதர்கள் முடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதன் காரணமாக மற்றையவர்களின் கருத்து என்பது மிகவும் குறைவாகவே இங்கு உள்வாங்கப்படுகின்றது. நேற்று நாம் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்து விட்டு நாளைகக்கு கலியாட்டம் செய்வது நல்லதல்ல. மக்கள் ஒன்று கூடல்கள், கவலைகள் பகிர்ந்து கொள்ள உதவும். ஆனாலும் அந்த ஒன்று கூடல்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் ஏற்ப்பபாட்டடாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் எமது உறவுகளின் சோகத்தை பகிர்ந்து கொள்ளுமுகமாக ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்தன் ஊடகா நாம் இழந்த உறவுகளை, உறவுகளை இழந்த மற்றையோரின் துயரினை பகிர்ந்து கொள்ள ஒன்று கூடல்கள் இடம் கொடுக்க வேண்டும். மக்களின் மனதை பாதிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி ஏற்பாடாளர்கள் சிந்திக்க வேண்டும். வெறும் பணம் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாது மக்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் தமது நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தில் மக்களினன் மன அழுத்ததை போக்க வேண்டும் என்று கூறும் கருத்து சரியானது ஏனினும் மக்களின் மன அழுத்தத்தை கூட்டும் வகையில் இவர்களின் செயற்ப்பாடுகள் அமையப்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது.

கறுப்பு ஜீலை 83 ல் இருந்து மே 2009 வரையில்

கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது. கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மாற்றான் தேசங்களின் அலைகின்றனர். அதை விடவும் பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிந்து நாசமாய் போனது. கறுப்பு ஜீலையின் நினைவுகளை ஈழத்தமிழனுக்கு யாருதம் சொல்லித்தர தேவையில்லை என்ற ரீதியில் அதன் வடு ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒரு அங்கமாகிவிட்டது. ஜீலை மாதம் 83ம் மூன்றான் ஆண்டின் பின் எழுந்த தமிழர் வரலாற்று எழுச்சியானது தொடர்ந்து அவ்வாறனதொரு கலவரத்தை, சிங்கள் ஆளும் வார்க்கமும் காடையர் கூட்டம் நடாத்த அனுமதிக்கவில்லை. அதற்க்கு சாதகமான சூழல் தென்னிலங்கையிலும் சரி எந்த பிரதேசத்திலும் எழுந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்போரின் உச்சக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் அதன் தாக்கம் தென்னிலங்கை தமிழர்களை பாதிக்கவில்லை. அவர்களது அந்த அமைதிக்கு காரணம் சிங்கள இனத்துடனான ஒன்றிணைவு அல்ல. மாறாய் சிங்கள இனத்துக்கும் ஆளும் சமூகத்துக்கும் தமிழர் தலைமை மீது கொண்ட அச்ச உணர்வே.! இத்தனைக்கு பின்னர் இன்று நாம் நட்டாற்றில் நிற்பதாய் பலரும் நம்ப தலைப்பட்டுள்ளனர். கறுப்பு ஜீலையை நினைவு கூரும் நாம் இன்னோரு கறுப்பு கறைந் படிந்த ஒரு “மே” யையும் நினைவு கூரத்தலைப்பட்டுள்ளோம். தமிழீழ போரின் எழுச்சியை கறுப்பு ஜீலையும் தமிழீழ விடுதலை; போரின் பின்னடைவை கறுப்பு மே தீர்மானித்திருக்கின்றது. கறுப்பு ஜீலையில் 2000 வரையிலான தமிழர் கொல்லப்பட்ட போது எமது இனம் பெற்ற எழுச்சியும், அந்த அழிவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும் மே மாதம் இருபதினாயிரம் போது மக்கள் கொல்லப்பட காரணமான சிங்கள இனவாத அரசின் போருக்கு எதிரான போராடவோ அல்லது அந்த போரின் போது சிதைவடைந்து போன எமது சில கட்டமைப்புகளை சீர் செய்யவோ இந்த மக்கள் தயாராய் இல்லை. சிதைந்து போன கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டிய காலத்தில் சிதைவுகளை மென்மேலும் வளர்ப்பதில் சிங்களத்தின் ஆதரவுக்குழுக்களை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய கட்டமைப்புக்கள் செயல்ப்படுவது வருந்தத்தக்கது. கறுப்பு ஜீலையில பிரசவித்த எத்தனையோ கண்மனிகளை விடுதலையின் விலையாய் தாய் மடியின் உரமாய் நாம் இட்ட போதும் விடுதலையை வெறும் அரசியலாய் மட்டும் பார்க்கும் கேவலமானவர்களுடன் நாம் வாழ நிர்பந்திக்கப்ட்டிருப்பது வேதனையான விடயமாகும். செய் அல்லது செத்து மடி என்று எம் தலைவன் காட்டிய பாதையில் நடந்த அந்த உன் வீரர்களின் கனவுகளை கலைத்து நம் சுயத்தை வெளிப்படுத்த முனைவோர் கறுப்பு ஜீலை ஒன்றில் கனடா ஓடி வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். கறுப்பு ஜீலையில் எம் தமிழன் சிந்திய குருதி எப்படி எழுச்சியை உண்டாக்கி ஈழ விடுதலையின் வாசலை அடைந்தததோ அவ்வாறு மே மாதம் எம் விடுதலைப் போரை அணைக்க, அழிக்க சிங்கள தேசம் மேற்க்கொண்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து நாம் மீண்டும் எழ வேண்டும். நாம் மீண்டிட எமது கட்டமைப்புக்கள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் எல்லாத் தமிழ் மக்களின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது. அதை தமிழீழ விடுதலை; போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விளையும் பெருந்தகைகள் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் அல்லது அடுத்த கட்டம் தொடர்பான ஆக்க பூர்வமான செயற்ப்பாடுகளுக்கு வழி விட வேண்டும்

யார் இந்த புலித்தலைமை!

இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “புலித்தலமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இந்த விளக்கென்னை ஊடகங்குக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம் கொடுக்கலாம் என்றால் எனக்கு அதற்க்குரிய தகுதி இருக்கிறதா? ஏன்பது கேள்வியே! ஆனாலும் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எனக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்கின்றேன். புலித்தலைமை முடிவுக்கு வந்தது, புலித்தலைவர் கொல்லப்பட்டர், புலித்தலைமை மாற்றப்பட வேண்டும், புலித்தலைமையால் எதுகும் செய்ய முடியாது. என்று கூக்குரலிட்டு எகத்தாளமிடுபவர்கள் வேறு யாருமல்ல சில இந்திய ஊடகத்தினரும், சில ஈழத்தமிழினத்தின் முற்போக்கு வாதிகள் என்ற போர்வைக்குள் இருக்கும் பிற்போக்கு வாதிகள். அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ, வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்” இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் அரோக்கியமானதல்ல என்பதை உணர்ச்சி வசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் காறித்துப்பாத குறை! அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ, அவர்கள் எந்த தலைமையால் வளர்க்ப் பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிக பட்சம் சாதிக்க கூடியது என்ன என்றால் புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. முள்ளிவாய்க்காலில் கடைசிவரை நின்று வந்த மக்கள் இன்றும் தலைமைபற்றி நன்மதிப்பை வைத்துள்ள அதே நேரம் கனடாவில் கோப்பி கடை பேச்சுகளின் பங்கு பற்றும் இவ்வாறனர்கள் அவர்களின் பிரதிநிதிகளாய் பேசுகின்றனர். மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நான், இவர்களின் மாற்றமில்ல கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாத படி தொடர்கின்றேன். இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார் எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றி கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது, அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்த படி பேசக் கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட முடியாதவர்கள், மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை விற்க்கும் செயல் வருந்தத்தக்கது. கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்த தக்கது. புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று எனக்கும் புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழ தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நான் அறியவில்லை. முள்ளிவாய்க்காலில் மௌத்த தேசியத்தலைமையில் ஆயுதங்கள் பலரின் மௌத்தை கலைத்து வதந்திகளையும், போலிப் பரப்புரைகளையும் பரப்பியுள்ளது. முட்டாள்த்தனமான சிந்தனைகள், முடிவெடுக்க முடியாது கனடா ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழ தேசிய தலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும் என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்று பட்ட தமிழினமாய் ஒன்று பட இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை. காரணம் புலிகள் அல்ல… அவர்களது விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது! இப்போதும் இவர்கள் தம் இனத்தை விட தமிழீழ தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம். தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை! இன்றைய இளைஞர்கள் மீது இந்த விடுதலைப்பாரத்தை சுமத்திய பாரிய பொறுப்பு இவர்களையும் சாhரும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர். 35 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால் அதற்க்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ, அல்லது தேசியத்தலைவரோ அல்ல! இருந்தாலும், மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது, முயன்று பார்;க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும், இந்தியாவின் செருபாகட்டும், தனித்தமிழீழத்தை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும் என விரும்பும் இவர்களால் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோக்கி நகரும் எனில்………. இது இவர்களுக்கான காலம்…என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்

வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது

வட அயர்நால்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தினை பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஷின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆகிவகைகளிடையே ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து முழுமையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பது ஷின் ஃபெயின் கட்சியின் நிலைப்பாடு, ஆனால் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியோ பிரிட்டனுடன் உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளது. வட அயர்லாந்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள் லண்டனில் இருக்கும் பிரிட்டனின் மத்திய அரசிடமிருந்து ஃபெல்பாஸ்ட்டில் இயங்கும் மாகாண அரசுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி மாற்றப்படும். இந்த அதிகார மாற்றத்தை ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி இதுவரை காலமும் எதிர்த்து வந்தது. ஷிண் ஃபெயின் கட்சியின் போராளிகள் அமைப்பான ஐ ஆர் ஏ வின் முன்னாள் போராளித் தளபதிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நேரிடும் என்று ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்து வந்தது.

மீண்டும் படுகொலைகள் ஆரம்பம் – 2ம் கட்ட இன அழிப்பு தொடங்கியுள்ளதா?

சிறீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முள்ளிவாய்க்கால் பெரும் இன அழிப்பிற்குப் பின்னர் சற்று ஓய்வடைந்திருந்த இந்தப் படுகொலை மற்றும் காணாமல் போதல்கள் தற்போது மீண்டும் வெளிப்படையாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவற்றில் சில படுகொலைகள் வெளிவருகின்றபோதும், பல வெளியுகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது. வன்னியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா தடுப்பு முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டு தற்போது வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ வலயங்களுக்கு நடுவில் சிறு சிறு குழுக்களாக குடியமர்த்தப்பட்டுள்ள மக்களில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களை இனங்கண்டு, அவர்களை மர்மமான முறையில் படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இவ்வாறான படுகொலைகள் வெளியில் தெரியவராதவாறு மறைக்கும் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. . விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போல் மக்களோடு கலக்கவிட்டுள்ள சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் சிறீலங்காவிற்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தமிழர்களை இந்த மக்களோடு பழகவிட்டு அவர்களிடம் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் இருக்கின்றார்களா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. . அத்துடன், யாழ்குடாவில் சென்று தங்கியுள்ள வன்னி மக்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்த தகவல்கள் வெளிவராதவாறு அச்சுறுத்தல்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இன்னொரு பக்கம் வெளிப்படையாகவும் படுகொலைகளும், கடத்தல்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. . இதுவரை ஏழு பேர் படுகொலையானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது. இச்சம்பவம் கடந்த 2ம் திகதி செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டுள்ளார். ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த பாலச்சந்திரன் தங்கதேவி என்ற 30 வயதான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். . இதேவேளை, யாழ்ப்பாணம், கொழும்புத் துறை நெடுங்குளம் வீதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெடுங்குளம் வீதியைச் சேர்ந்த எஸ்.சிவராசா (30 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கடந்த 3ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் உடலிலும் தலையிலும் பலத்த அடி காயங்கள் காணப்படுகின்றன. கொலை செய்யப்பட்டுப் பின்னர் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். . இதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற 16 வயது இளைஞன் கடந்த 26ம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்துபோயிருந்த கடத்தல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. . இதற்கிடையே, கிளிநொச்சியில் தனது உறவினரை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவரும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்ற இளைஞர் இது வரையிலும் காணவில்லையென உறவினர் தேடியுள்ளனர். இந்நிலையில் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள இளைஞன் வேலுப்பிள்ளை சசிரூபன் (30 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். . கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் அருகேயுள்ள உறவினர் வீட்டுப் பகுதியில் கிணற்றுக் கட்டில் இரத்த கறை படிந்து இருந்ததையடுத்து கிணற்றினுள் பார்த்த போது அவ் இளைஞன் கல்லில் கட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்ததாக அந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். . அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்தே பெண் ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்தபோது இவ்வாறான படுகொலைகளுக்கும் காணாமல்போதல்களுக்கும் அவர்கள் மீது குற்றம்சாட்டிய சிறீலங்கா, தற்போது முழுமையாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெறும் படுகொலைகள் காணாமல்போதல்கள் குறித்து மௌனம் காப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிறீலங்கா இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. தேர்தலுக்காக கெடுபிடிகளைக் குறைத்திருந்த படையினர் தற்போது மீண்டும் கெடுபிடிகளையும் சோதனைகளையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் பல படுகொலைகளும், காணாமல்போதல்களும் இடம்பெற வழிவகுத்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பாக். கராச்சி இரட்டை வெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் பலி : 50 பேர் வரை காயம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முதல் சம்பவத்தில்,வெடிமருந்துகள் நிரம்பியிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஷியா இன மக்களை ஒரு மத ஊர்வலத்துக்கு ஏற்றிச் சென்ற பஸ் மீது மோதியதில், 12 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மணிநேரத்துக்கு பின்னர், இந்த முதல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வெடித்ததில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இந்தக் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருப்பதாக இஸ்லாமாபாத் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்

யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே...

இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான "றோ" அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:- உலக தமிழர்களே! ஈழ தமிழர்களே! யாழ் தமிழர்களே! தமிழர்களை இன்னும் அடிமையாக்கும் எண்ணத்தில் யாழில் தூதுவராலயம் திறக்க இருக்கும் அந்நிய அழிப்பு சக்திய மக்கள் பலத்தால் தடுப்போம். இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுப் பிரிவான "றோ" அங்கே அலுவலகம் திறந்து, யாழில் மக்களை தங்கள் அடிமை சேவகம் செய்ய வைப்பதற்கும், யாழில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கும், தங்களுக்கு தலை ஆட்டும் துரோகிகளை தமிழர் மத்தியில் வளர்ப்பதற்கும், தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும், தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே அங்கு தூதுவராலயம் திறக்க இருக்கிறார்கள். இதை யாழ், ஈழ, உலக தமிழர்கள் தடுப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தில் தென் ஆசிய பயங்கரவாதிகளின் தூதுவராலயம் திறப்பதை தடுப்போம், இல்லையேல் 1987-1990 போல மக்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதைவஸ்துக்களை பாவனையில் கொண்டு வருவார்கள் இந்திய ஆதிக்க சக்திகள். கற்பழிப்புகளை தாங்களும் செய்து தங்கள் அருவருடிகளையும் செய்ய வைத்து, தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கல்வியையும் அழிப்பார்கள். இந்தியாவை விட மோசமான நாடாக இந்தியாவின் அடிமையாக யாழ்பாணத்தை மாற்றுவதே அவர்கள் திட்டம். இதை நாங்க முளையிலே கிள்ளி எறிய புறப்படுவீர்! எம் மக்களே! 1987 இந்திய இராணுவத்தால் செய்து முடித்த யாழ் வைத்தியசாலை படுகொலையை மறக்கவில்லை, 1987- இந்திய இராணுவத்தால் யாழ் ஊடகங்கள் அழிக்கபட்டதை மறக்கவில்லை, 1987-1990 அப்பாவி மக்களை, புத்திஜீவிகளை, போராளிகளை, தளபதிகளை, அழித்ததை மறக்கவில்லை, 1988 இல் அப்பாவி புளொட் போராளிகளை மாலைதீவை அழிக்க அனுப்பி அந்த போராளிகளை தாங்களே அழித்த இந்தியாவை மறக்கவில்லை, 1982-2009 தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுதங்களை, பயிற்சிகளைக் கொடுத்து சகோதர பகையைத் தூண்டி அவர்களை அழித்த இந்தியாவை மறக்கவில்லை புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது. அதேவேளை, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடைக்கோட்டா சலுகை ரத்து

இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தடை 6 மாதத்திற்கு பின்னரே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இந்த தீhமானத்தை எடுத்துள்ளனர். விசாரணை அறிக்கைகளின்படி ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளை இலங்கை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை கோட்டா சலுகை வறிய நிலையில் உள்ள 16 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் ரத்து தீர்மானம் கடந்த வாரம் எடுக்கப்பட்டது. இந்தநிலையில் அது எதிர்வரும் 16 ஆம் திகதி பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியமைச்சர்கள் கூடும் போது உறுதிப்படுத்தப்படவுள்ளது. அதேநேரம் இந்த முடிவை திரும்பப்பெறுவதற்கு கொழும்புக்கு வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது

கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்

தேச நிர்மான அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இரகசியமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளதாக கருணா தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.