வியாழன், 13 மே, 2010

தேசிய தலைவரை தொடர்வோம்...

நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறோம். எத்தனை அடக்குமுறைகளை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். எவ்வளவு துரோகங்களை நமது பயணப்பாதையில் நாம் சந்தித்திருக்கிறோம். நமக்கு ஏற்பட்ட இழப்பு இயல்பாக ஒரு தேசிய விடுதலை போராட்டத்திற்கு கூடுதலான விலை தான். அடக்குமுறைக்கெதிராக நம்மை நாம் அர்ப்பணித்தோம். விடுதலை வேண்டும் என்பதற்காக எமது வாழ்வு, வளம் அனைத்தையும் அர்ப்பணித்தோம். எந்த அடக்குமுறையும்

துண்டிக்கப்பட்ட உறுப்புகள் அசோகச் சக்கரத்தின் நடுவே சுழன்றுகொண்டிருக்கின்றது ரணச்சூடுபட்டு வாய் பிளந்து கிடக்கும் மூவர்ணக் கொடிக்கு வாய்க்கரிசிபோட்டபடி குமுறிக்கொண்டிருக்கின்றது முழங்கு தீ 2 செத்த பிணத்தைக்கூட காட்டிக்கொடுத்த கருணாவிற்கு எதிராக வதைபட்டுச்செத்த லட்சக்கணக்கானவர்களின் ஆவிகள் சுற்றிலும் கொலைவாளாய் எழுந்துநிற்க மண்டைஓடுகளின் மீது சிம்மாசனமிட்டிருக்கும் பிணந்தின்னியும் தனது குறியினை தீ�ட்டிக்கொண்டிருக்கின்றது மறைமுகமாய் பச்சைத்துரோகிக்கு நல்லமரணம் கிடையாதென்பது நிச்சயம் 3 நாங்கள் இந்தியனில்லை என்று சொல்லிக்கொண்டு அருவருப்பாய் ஓடுகின்றோம் ஓடாதே நில் திருப்பி அடியென்று பதுங்கிப்பாயச் சொல்கிறது புலிக்கொடி முப்படைகளில் ரவைகளை நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்த்துவக்குகளே ஆயுதங்களை உங்கள் தேரோட்டிக்கு எதிராக திருப்பிப்பிடியுங்கள் 4 கோட்டையிலே தமிழ்க்கொடி உயர்ந்துபறக்கும் எங்கள் குடிசைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் நாங்கள் பாடல்களுக்குப் பதில் கதைகளை சொல்லிக் கொடுக்கின்றோம் அந்தநாட்டில் சிங்கம் நானே பெரியவனென்று தற்பெருமை பேசிக்கொண்டே எல்லா உயிர்களையும் பிடித்துத் தின்று கொண்டிருந்தது முயலைப் பார்த்து சிங்கம் தனக்கு நல்ல இரை கிடைத்து விட்டதென்று நினைக்க முயல் சொன்னது �சிங்கராஜா சிங்கராஜா உன்னைவிட ஒரு மாவீரன் இந்த மண்ணில் இருக்கிறான்� ஆத்திரமுற்ற சிங்கம் எங்கே அதை காட்டிதா என்றது பாழடைந்த கிணற்றைக்காட்டி அதோ தண்ணீரில் தெரியுதுபார் அவர்தான் உன்னைவிட பெரிய ராஜா என்றதும் சிங்கம் தண்ணீரில் தெரிந்த மாவீரனின் உருவத்தைப் பார்த்து கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது இப்போது எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் நாங்கள் முயல்குட்டி என்று பெயர்சூட்டுகின்றோம்

மீண்டும் இன்ரபோலின் தேடுவோர் பட்டியலில்


விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனின் பெயர் மீண்டும் அனைத்துலக காவல்துறை பிரிவான இன்ரபோல் காவல்துறையின் தேடுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் கடந்த மே மாதம் முள்ளிவாய்கால் பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இன்ரபோல் அமைப்பு தனது தேடுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் மற்றும் அவரின் இரண்டு உதவியாளர்கள் ஆகியோரின் பெயர்களை இணைத்து வெளியிட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை கொண்ட பகுதியில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே இன்ரபோலின் இந்த அறிப்பானது சிறிலங்கா அரசின் முன்னைய கூற்றுக்களில் ஏற்பட்ட மாற்றமாகவே கருதப்படுகின்றது. பொட்டு அம்மானின் இறப்புச் சான்றிதழை சிறீலங்கா அரசு வழங்காததால் அது மீண்டும் இன்ரபோலின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள போதும் அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. பொட்டு அம்மானின் பெயருடன் சாள்ஸ் மற்றும் நவரட்ணம் ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பொட்டு அம்மான் தனது தளபதிகளுடன் வேறு ஒரு நாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என நம்பப்படுவதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
அந்தத் தாய் நம்புவதைப்போல அவனின் தந்தையும் சகோதரர்களும் நம்புவதைப்போல அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம். அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன? அவன் பல குழந்தைகளுடன்தான், பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான். தோழனே! பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின் இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது. எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அஞ்சலிக்குறிப்புகளில் அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அஞ்சலிக்குறிப்புக்களை எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது. உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன். ஏதோ ஒரு தடுப்பு முகாமையும் ஏதோ ஒரு சிறைச்சாலையும் மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய். யாரே பார்த்திருக்கிறார்கள் அவனின் கிழிந்த கால்சட்டையை. ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும் சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும் அந்தச் சிறுவன் அறிந்திருந்தான். தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும் கண்டு அஞ்சியிருந்தான். எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா? அவன் கரைக்கப்பட்ட நிலத்தில் இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா? தன் முகத்தையும் புன்னகையையும் அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான். தோழனே! நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள். அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள் நிறைவு செய்துகொண்டு வகுப்பறைக்கு திரும்புவான். ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.

சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா இந்தியத் துரோகத்தால் இத்தனையும் இழந்தோம்?

முள்ளிவாய்க்கால் வரை தமிழ்த் தேசியம் பேசிய சில ஊடகர்கள், தற்போது இந்தியச் சதியின் பேரழிவால் தமிழீழ மக்கள் மத்தியில் பொங்கி மேலெழுந்துவரும் இந்திய எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தங்கள் எழுத்துச் சித்துக்களைத் திருப்பி விட்டுள்ளார்கள். 'ஓநாய்கள் என்றால், ஆடுகளைக் கொல்லத்தான் செய்யும். ஆடுகள் எப்படியும் ஓநாய்களுடன் சமரசம் செய்து தங்கள் இழப்புக்களைக் குறைத்துவிடலாம்|

வரலாற்றுப் பதிவுகளை காப்போம். !

எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது.

சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது!


முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது. அந்த ஆயுதப் போராட்டம், பல்வேறு நாடுகளினதும் அரசியல் வியூகங்களுக்குள் சிக்கிச் சிதை பட்டுவிட்ட போதும் சிங்கள தேசம் அதிலிருந்து பாடங்களைப் பெற்று, தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதைத் தவிர்த்து வெற்றிப் போதையுடன் தமிழ் மக்களது உணர்வுகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்களைத்த் தொடுத்து வருகின்றது. இலங்கைத் தீவில் ஆயுத வன்முறையை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி. சிங்கள அரசுகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ஜனநாயக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் சிங்களவர் என்ற காரணத்தால் தொடர் துன்புறுத்தல்களோ, அவ மரியாதைகளோ இன்றிப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டார்கள். போதிய எந்தக் காரணங்களும் இல்லாமல், சிங்கள படித்த இளைய தலைமுறையின் விரக்தி காரணமாகவே இந்த ஆயுதப் புரட்சி தென்னிலங்கையில் வெடித்தது. மாறாக, ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் பல பத்து ஆண்டுகளாக சிங்கள இனவெறித் தாக்குதல்களுக்கும், திட்டமிட்ட இன ஒடுக்குதல்களுக்கும், திட்டமிட்ட பொருளாதார, கல்விச் சீரழிப்புகளுக்கும் ஆளான காரணத்தினாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், ஈழத் தமிழர்களுக்கான நியாயங்களை வழங்குவதற்கு சிங்கள தேசம் முனையாத நிலையில் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஈழத் தமிழர்களின் மனங்கள் மீது தொடுக்கப்பட்டு வருகின்றது. உலகில் நடைபெற்ற போர்களில் வென்றவர்கள் எல்லோரும், அதில் தோற்றவர்களை அணைத்து ஆசுவாசப்படுத்தி, அவர்களை சமாதான வாழ்வுக்கு அழைத்துச் செல்வதையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வந்த வரலாறு சிங்கள தேசத்தால் மறுதலிக்கப்பட்டு, தமிழர்கள் தொடர்ந்தும் அவமானப்படுத்தப்பட்டு வருவது ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நியாயப்பாட்டையே உணர்த்துகின்றது. இத்தனைக்கும், தியாகதீபம் திலீபன் அவர்கள் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கெதிராகவே உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதன் தொடர் வினையாகவே, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் மூண்டது. விடுதலைப் புலிகள் அப்படி ஒரு முடிவினை எடுக்கத் தவறியிருந்தால், இந்திய அமைதிப்படை இன்றும் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறியிருக்காது. சிங்கள தேசமும் இந்திய மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட நீண்ட போராட்டம் நடாத்த வேண்டிய கட்டாயத்தினுள் இருந்திருக்கும். இன வெறி மேலாதிக்க சிந்தனையைத் தவிர எதுவும் மேலானது அல்ல என்று கருதும் சிங்களம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துவதில் மட்டுமே முனைப்புக் காட்டுகின்றது. தமிழீழ மக்களது பாரம்பரிய நிலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள தேசத்தின் ஒவ்வொரு நகர்வும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனக் கொந்தளிப்பை உருவாக்கும். சிங்கள அரசின் ஒவ்வொரு இனவாத தாக்குதல்களும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும். அது மீண்டும் சிங்கள தேசத்தின்மீது புலியாகப் பாயும். ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் உலக நாடுகளை அவர்கள் பக்கம் திரும்ப வைக்கும். அப்போது சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது.

தீபன்.......................

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து

வெற்றிப்பரொளியாய்

நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பாடலைப்போல தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. உயரமான மரக்கிளைகளை ஊடுருவி நிலவொளி வருகிறது. இரவு நீண்டு செல்கிறது. அந்த மனிதர் இன்னும் விழித்திருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலையால் அவர் இன்னும் தூங்கவில்லை. அவர் தொடர்ந்து தமது மண்ணின் விடுதலைக்காக உழைத்தார். இன்றுவரை, இந்த வினாடிவரை அறிவியல் பூர்வமான அவருடைய சிந்தனையும், ஆக்கப்பூர்வமான லட்சியமும், அடக்கமான உழைப்பும், அகலமான பார்வையும், ஆழமான அன்பும் கொண்ட ஒரு மகத்தான மனிதர், நமது தாய் மண்ணின் விடுதலைக்காக,

பட்டயத்தினால் கொல்லப்பட வேண்டும்


அய்யோ...! ஜனம் பெருத்த நகரில் தனிமையாய் உட்கார்ந்திருக்கிறாளே! (கிளிநொச்சி) விதவைக்கு ஒப்பானவளே! (தமிழினம்) ஜாதிகளில் பெரியவளும் சீமைகளின் நாயகியுமாய் இருந்தவள் கப்பம் கட்டுகிறவள் ஆனாளே! (ஈழத் தமிழர்கள்) திமிங்கலங்கள் கூட கெங்கைகளை நீட்டி தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். என் ஜனமாகிய குமாரத்தியோ (தமிழீழ மக்களோ) வனாந்திரத்தில் உள்ள தீக்குருவியைப் போல் குரூரமாய் இருக்கிறாளே! (முள்ளி வாய்க்காலுக்குப் பின்) (முள்வேலி முகாமிற்குள்) குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்பம் கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுப்பார் இல்லை. பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும், பட்டயத்தால் (குண்டுவீச்சால்) கொலையுண்டவர்கள் பாக்கியவான்கள். நாங்கள், எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள். எங்கள் விடுதலை அன்னியர் வசமாகவும், எங்கள் வீடுகள் பிற தேசத்தார் (சிங்களர்) வசமாகவும் தாண்டிப் போயின. பாரம் சுமந்து எங்கள் கழுத்துகள் நோகிறது. நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்போது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் (ராசபக்சே) எழும்பி வரக் கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் (பன்னாட்டு படைகளும்) பத்து கொம்புகளும் இருந்தன. அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதன் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தது. (இன ஒழிப்பு) காதுள்ளவன் எவனோ (உலகத் தமிழினம்) கேட்கக்கடவன். சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன், சிறைப்பட்டு போவான். பட்டயத்தினால் கொல்கிறவன், (குண்டுவீசி கொன்றவன்) பட்டயத்தினால் கொல்லப்பட வேண்டும். குறிப்பு: இது கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் யூத மக்கள் எழுதிய கவிதை வரிகள். அடைப்புக் குறிக்குள் இருப்பவைகள் மட்டும் நம்முடையவை. இது நமது முடக்குதலை சரியாக படம் பிடிக்கும் கவிதையாக இருப்பதால், இங்கே நாம் இதை பதிவு செய்கிறோம். தமிழினம் வெற்றி பெறும் என்பதை நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு செயல்படுத்துவோம்

தமிழ்த்தேசியம் தமிழ்மக்கள் அனைவருக்கும் சொந்தம்.

தங்கள் இணையத்தளத்தை மதிப்புக்குரிய பிரபல எழுத்தாளர் தமிழ்த்தேசிய எழுத்தாளர் சிவராம் தொடங்கிய காலம் தொட்டு வாசித்தறிந்தவன் என்ற முறையில் சில விடயங்களையிட்டு கருத்துரைக்க விரும்புகின்றேன்.

ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள மயமாகும் தமிழர் தாயகப் பிரதேசம்

தமிழர் தாயகப் பகுதிகளை மிக கச்சிதமாகத் திட்டமிட்டு சிங்கள மயமாக்கும் நடவடிக்கையை இலங்கையில் ஆளும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதனைத் தடுக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ் மக்கள் தவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித பலமுமின்றி தமிழ் மக்கள் திணறி வருவதுடன், மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயங்கள் இயங்கிய